இந்தியாவில் தயாராகும் சுசுகியின் அட்வென்ச்சர் ரக புதிய வி-ஸ்ட்ராம் 650 பைக்...!!

இந்தியாவில் தயாராகும் சுசுகியின் அட்வென்ச்சர் ரக புதிய வி-ஸ்ட்ராம் 650 பைக்...!!

By Azhagar

ஜப்பானின் சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய தனது வி-ஸ்ட்ராம் 650 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

இதுப்பற்றி இ.டி ஆட்டோ செய்தித்தளம் வி-ஸ்ட்ராம் 650 பைக் முற்றிலும் இந்தியாவில் தயாராகவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

சுசுகி-க்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அதை அப்படியே தக்கவைக்க வி-ஸ்ட்ராம் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் களமிறக்குகிறது.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் மானசர் பகுதியில் சுசுகி-க்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

வாகன தயாரிப்பிற்கான உதிரிபாங்கள் வேறொரு நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு, ஜப்பான் அல்லாத குறிப்பிட்ட நாடுகளில் வாகனங்கள் உருவாக்கப்பட்டால் அதை CKD (Completely Knocked Down) என்று சுசுகி குறிப்பிடுகிறது.

Trending On Drivespark:

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

அதுபோன்று தான் ஜப்பானில் இருந்து வி-ஸ்ட்ராம் 650 பைக் தயாரிப்பிற்கான உதிரிபாகங்கள், மற்றும் அதற்கான கூறுகள் ஆகியவை இந்தியா கொண்டுவரப்படும்.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

இதுப்பற்றி சுசுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சட்டோச்சி உச்சிதா பேசும்போது,

"ஹயபுஸா பைக்குகள் இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டது. அதனால் அதை இங்கு விலை குறைத்து விற்க முடிந்தது."

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

"அதே போன்று தான் வி-ஸ்டார்ம் 650 பைக்கும் உள்நாட்டிலேயே தயாராகிறது. இதற்கான விலையும் ஹயபுஸா போலவே பின்பற்றப்படும்" என்று கூறினார்

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹயபுஸா பைக்குள் ரூ. 16 லட்சம் மதிப்பில் விற்பனை ஆகின. பிறகு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிறகு அது ரூ. 13.88 லட்சம் விலை பெற்றன.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

தற்போது அட்வென்ச்சர் மாடல் மோட்டார் சைக்கிளாக தயாராகும் இது, ரூ. 6.5 லட்சம் மதிப்பில் சர்வதேச சந்தைகளில் விலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

650சிசி வி-ட்வின் எஞ்சின் பெற்ற இந்த பைக், 66 பிஎச்பி பவர் மற்றும் 60.3 என்.எம் டார்க் திறனை தரவல்லது.

கேம்ஷாப்ட்ஸ், மின்சார திறன் பெற்ற ஃபூயல் இன்ஜெக்‌ஷன், லிக்குவிடு கூல்டு ஆகிய தேவைகளை வி-ஸ்ட்ராம் பைக்கின் எஞ்சின் பெற்றுள்ளது.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

சுமார் 220 கிலோ எடைக்கொண்ட இந்த பைக் இலகுவான மற்றும் சுறுசுறுப்பான இயக்கத்திறனை பெற்றிருக்கும்.

இதனுடைய செயல்பாடு திறன் ஒரு அட்வென்ச்சர் பைக் தேவைக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரும்.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

சுசுகி வி-ஸ்டார்ம் 650 பைக்கில் பெரிய ரக வின்டுஸிக்ரீன், கடினமான நிலப்பரப்புகளை சமாளிப்பதற்கான தேவைகளை பெற்ற நீண்ட பயண இடைநீக்கம்,

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் திறன் பெற்ற டிஸ்க் பிரேக் அமைப்பு, மேலும் மின்சாரத்தால் இயங்கும் பைக் சவாரிகளை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதிகள் மற்றும் இழுவை கட்டுபாட்டு அமைப்புகள் இதில் உள்ளன.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

டூரிங் தேவைகளுடன் கூடிய அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கூடி வருகிறது.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் பல சிறப்பம்சங்களை பெற்ற டூரிங் தேவைக்கான பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது.

புதிய அட்வென்ச்சர் மாடல் பைக்கை இந்தியாவில் தயாரிக்க சுசுகி முடிவு..!!

இந்த வரிசையில் இந்தியவிலேயே தயாராகவுள்ள சுசுகி-யின் வி-ஸ்ட்ராம் மோட்டார் சைக்கிள், பல பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: Suzuki To Launch Locally-Assembled V-Strom 650 In India; To Rival Kawasaki Versys. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X