டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஏபிஎஸ் என்று சொல்லப்படக்கூடிய அன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம். வாகனங்கள் விபத்தில் சிக்க காரணமாகன பிரேக்கிங் சிஸ்டத்தை இது சிறப்பாக கண்ட்ரோல் செ

By Balasubramanian

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஏபிஎஸ் என்று சொல்லப்படக்கூடிய அன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம். வாகனங்கள் விபத்தில் சிக்க காரணமாகன பிரேக்கிங் சிஸ்டத்தை இது சிறப்பாக கண்ட்ரோல் செய்வதால் இதை பலர் விரும்புகின்றனர்.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

விரைவில் 125 சிசிக்கு அதிகமாக உள்ள பைக்குகளில் கட்டாயம் ஏபிஎஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் விதியாக கூட வரலாம். இதை கருத்தில் கொண்டே பல நிறுவனங்கள் இந்த ரக வாகனங்களில் ஏபிஎஸ் வசதியை கொண்டு வந்து விட்டனர். குறைந்தபட்சம் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாகவாவது இருக்கிறது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

அந்த வகையில் இந்தியாவில் விற்பனையாககூடி பைக்குகளில் குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகளை பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் ஏபிஎஸ் பைக்கை வாங்க விரும்பினால் நிச்சயம் இந்த பட்டியல் உங்களுக்கு உதவும்.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்- ரூ 88,000

ஹீரோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள இந்த பைக்கை ரூ 88,000 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்கிறது.200 சிசிக்கு ரக பைக்குகளில் குறைந்த விலை பைக் இது தான். இதில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றம் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி ஒரு சிலிண்டர், 4 ஸ்டோக், ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் 5ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

சுஸூகி ஜிக்ஸர் 155- ரூ 87,250

அடுத்த குறைந்த விலை ஏபிஎஸ் பைக் என்றால் இது தான். இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான் பொருத்தப்பட்டுள்ளத. இது 155 சிசி சிங்கிள் சிலிண் இன்ஜின் உடன் வருகிறது. இது 14.8 பிஎச்பி பவரையும் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

சுஸூகி இன்ட்ரூடர் 150- ரூ 99,995

இந்த பட்டியலில் உள்ள ஒரே க்ரூஸியர் பைக் இதுதனா். இந்த இன்ட்ரூடர் 150 பைக் இன்ட்ரூடர் எம்1800 பைக்கின் மினி வெர்ஷன் தான். இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், பொருத்தப்பட்டுள்ளது. இதில் கர்பரேட்டர், மற்றும் பியூயல் இன்ஜெக்டர் ஆகிய 2 விதமான வேரியன்களில் வெளியாகிறது. இதன் இன்ஜினைபொருத்தவரை ஜிக்ஸர் பைக்கைல் உள்ள அதே 155 சிசி சிங்கிள் சிலிண் இன்ஜின் உடன் வருகிறது. இது 14.8 பிஎச்பி பவரையும் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 - ரூ 99,880

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வரக்கூடிய பைக்கில் குறைந்த விலை பைக் இது தான். இதில் 177.4 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 16.62 பிஎச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

சுஸூகி ஜிக்ஸர் எஸ்எப்- ரூ 96,386

சுஸூகி நிறுவனத்தின் ஜிக்ஸர் 155, இன்ட்ரூடர் 150 ஆகிய பைக்குகளை போல ஜிக்ஸர் எஸ்எப் பைக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசிதியை கொண்டது தான். இதிலும் ஜிக்ஸர் 155 ல் உள்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறப்பான லுக் கொண்ட பைக் இது தான்.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் - ரூ 90,735

இந்த ஹோண்டா சிபி ஹார்னட்டை பொருத்தவரை ஜிக்ஸர் பைக்கிற்கு நேரடி போட்டியாக திகழ்கிறது. ஹார்னட்டிலும் சிங்கிள் சேனல் ஏபிஎ் வசதிதான் இருக்கிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 162.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 15.7 பிஎச்பி பவரையும், 14.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

பஜாஜ் பல்சர் என்எஸ் 200- ரூ 1.09 லட்சம்

பஜாஜ் நிறுவனத்தின் குறைந்த விலை ஏபிஎஸ் பைக் இது தான். இந்த 200 என்எஸ் பைக் 199.5 சிசி, லிக்யூட் கூலண்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது 23.17 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் குறைந்த பட்ச பராமரிப்பு செலவையே ஏற்கிறது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200- ரூ 1.37 லட்சம்

பல்சர் ஆர்எஸ்200 பைக் என்பது என்எஸ் 200 பைக்கில் இருந்து சில வடிவமைப்பு மாற்றங்களையே கொண்டுள்ளது. இதிலும் 199.5 சிசி, லிக்யூட் கூலண்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது 24..5 பிஎச்பி பவரையும், 18.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி மட்டுமே இருக்கிறது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி -1.07 லட்சம்

அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கை போலவே ஆர்டிஆர் 200 பைக்கிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்பிப்பரி கிளட்ச் ஸ்டாண்டர்டாக வருகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 197.75 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது கார்பரேட்டர் வெர்ஷனில் 20.5 பிஎச்பி பவரையும், பியூயல் இன்ஜெக்டர் வெர்ஷனில் 21 பிஎச்பி பவரையும், இரண்டு வெர்ஷனிலும் 18.1 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

பஜாஜ் டோமினோர் 400 - ரூ 1.62 லட்சம்

இந்தபட்டியலிலேயே விலை உயர்ந்த பைக் இது தான். பஜாஜ் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு இந்த பைக் தான். இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இன்ஜின்னை பொருத்தவரை 373.3 சிசி சிங்கிள் சிலிண்டர் பியூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் 390 பைக்கில் உள்ளது போலவே இதன் இன்ஜினும் உள்ளது. இது 35 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

Most Read Articles
English summary
10 most affordable ‘ABS-equipped’ motorcycles. Read inTamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X