இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இந்திய ராணுவம் பயன்படுத்திய ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை, இளைஞர்கள் இருவர் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்துள்ளனர்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை, இளைஞர்கள் இருவர் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்துள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த ஆவணப்படம் எடுப்பதற்காக, அந்த பைக்கில் 2,000 கிலோ மீட்டர் பயணத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஃப்ரட். மெக்கானிக்கல் இன்ஜினியரான ஃப்ரட், வின்டேஜ் மோட்டார் சைக்கிள்களை மறு சீரமைப்பு செய்வதில் வல்லமை மிக்கவர். எதிர்கால உலகம் மிக தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில் ஃப்ரட்டிற்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீது ஃப்ரட்டிற்கு விருப்பம் இல்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களையே ஃப்ரட் முன் வைக்கிறார்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு ஈடான பெர்ஃபார்மென்ஸ் எலெக்ட்ரிக் வாகனங்களில் கிடைக்காது என்ற ஒரு பொதுவான கருத்து நிலவு வருகிறது. அதனை சுக்குநூறாக உடைக்க வேண்டும் என்பது ஃப்ரட்டின் நீண்ட நாள் ஆசை, கனவு, லட்சியம் என எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இதற்காக ஃப்ரட் தொடங்கிய ஒரு திட்டம்தான் 'சார்ஜிங் புல்லட்' (Charging Bullet). எலெக்ட்ரிக் வாகனங்களின் சிறப்பம்சங்களை, உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையிலான ஆவணப்படம் (Documentary) ஒன்றை எடுத்து வெளியிட வேண்டும் என்பதே 'சார்ஜிங் புல்லட்' திட்டத்தின் முதல் நோக்கம்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இதற்காக எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றில், 2,000 கிலோ மீட்டர்கள் (1,200 மைல்கள்) பயணம் செய்ய ஃப்ரட் முடிவு செய்தார். இந்த பயணம் முழுவதையும் பதிவு செய்து, எலெக்ட்ரிக் வாகனங்களின் சிறப்பம்சங்களை உலகிற்கு பறை சாற்றும் வகையில், ஆவணப்படமாக வெளியிட வேண்டும் என்பதே ஃப்ரட்டின் திட்டம்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

ஃப்ரட்டின் இந்த பயணத்தில் 2 சிறப்பம்சங்கள் உள்ளன. முதலாவது, ஃப்ரட் பயணம் செய்ய தேர்ந்து எடுத்த பைக் ராயல் என்பீல்டு புல்லட் 350. 1961ம் ஆண்டு மாடல் புல்லட் 350 பைக்கான இதனை, ஒரு காலத்தில் இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தது.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

எரிபொருளில் இயங்க கூடிய இந்த பைக், தற்போது எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்டிருப்பதுதான், ஃப்ரட்டினுடைய பயணத்தின் இரண்டாவது சிறப்பம்சம். இந்த பைக்கை, எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்த பெருமை அனைத்தும் ஃப்ரட்டையே சேரும்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இந்த பைக் கடந்த 1961ம் ஆண்டு இங்கிலாந்தில் கட்டமைக்கப்பட்டது. பின்னர் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டது. இந்திய ராணுவத்தில் சில காலம் சேவையாற்றிய பின்பு, இந்த பைக்கிற்கு விடை கொடுக்கப்பட்டது.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இந்த சூழலில்தான் புது டெல்லியில் உள்ள மார்க்கெட் ஒன்றில், ஃப்ரட் இந்த பைக்கை கண்டறிந்தார். கரடுமுரடான இந்திய சாலைகளில் பயணித்த இந்த பைக், அப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பின்னர் அதனை இங்கிலாந்து கொண்டு சென்று, எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி விட்டார் ஃப்ரட்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இந்த சூழலில், ஃப்ரட்டின் கனவு பயணம், தென் மேற்கு இங்கிலாந்தில் உள்ள லேண்ட்ஸ் எண்ட் என்னும் பகுதியில், கடந்த 8ம் தேதி தொடங்கியது. ஸ்காட்லாந்தில் உள்ள ஜான் ஓ கிரோட்ஸ் என்னும் பகுதியில், ஃப்ரட்டின் பயணம் நிறைவடையவுள்ளது.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

இந்த பயணம் சுமார் 3 வார காலம் நீடிக்கும். திரைப்பட துறையை சேர்ந்தவரான ஃபின் வார்னே என்பவரும், ஃப்ரட் உடன் பயணம் செய்து வருகிறார். இவர்தான் ஃப்ரட்டின் பயணங்களை தொகுத்து, ஆவணப்படமாக வெளியிடவுள்ளார்.

இந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்!

2019ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்த ஆவணப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பிரபலமான திரைப்பட விழாக்களுக்கு, அந்த ஆவணப்படத்தை அனுப்ப ஃப்ரட்டும், ஃபின் வார்னேவும் முடிவு செய்துள்ளனர். ஃப்ரட் மற்றும் ஃபின் வார்னே ஆகியோரின் முயற்சி உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

Most Read Articles

ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
1961 Royal Enfield Bullet 350 Used By Indian Army, Now Converted Into Electric Bike. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X