2018 மாடல் ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் டூவீலர் மார்கெட்டில் கொடிகட்டி பறந்து வருகிறது. தற்போது அந்நிறுவனம் அவியேட்டர் ஸ்கூட்டரின் 2018ம் ஆண்டிற்கான மாடலை அறிமுகப்படுத்தியள்ளது.

By Balasubramanian

ஹோண்டா ஆக்டிவா நிறுவனத்தின் ஏவியேட்டர் ஸ்கூட்டரின் 2018ம் ஆண்டிற்கான மாடல் தற்போது அறிமுகமாகியுள்ளது சமீபத்தில் தான் ஆக்டிவா ஐ மற்றும் நவி ஆகிய டூவீலர்களின் புதிய மாடல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவியேட்டருக்கான புதிய மாடலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு செய்தியை கீழே காணலாம்.

2018 மாடல் ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் டூவீலர் மார்கெட்டில் கொடிகட்டி பறந்து வருகிறது. தற்போது அந்நிறுவனம் ஏவியேட்டர் ஸ்கூட்டரின் 2018ம் ஆண்டிற்கான மாடலை அறிமுகப்படுத்தியள்ளது. இதன் விலை ரூ55,157 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2018 மாடல் ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஐ ஸ்கூட்டரின் அப்டேட்டன் வெர்ஷனை அறிமுகப்படுத்திய அடுத்த நாளே அவியேட்டர் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அவியேட்டரில் எல்இடி ஹெட்லைட், மற்றும் லைட்டிங் போசிஷனில் சிறிய மாற்றம் செய்யப்ட்டுள்ளது. இக்னிஷியன் ஆன் செய்வது சீட்டை திறப்பது என 4 இன் 1 லாக் கொடுக்கப்பட்டுள்ளது.

2018 மாடல் ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157

மஃப்ளருக்கான மெட்டல் புரேடெக்டர், ஃப்ளோர் போர்டிற்கு அருகே கால் வைப்பதற்கான ஹூக், ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான ப்யர்ல் ஸ்பார்டன் ரெட் என்ற புதிய கலரும் ஏற்கனவே விற்பனையில் உள்ள ப்யர்ல் இக்னியஸ் ப்ளாக், ப்யர்ல் அமேஸிங் ஒயிட், மேட் செலின் சில்வர் மெட்டாலிக் ஆகிய கலருடன் இணைகிறது.

2018 மாடல் ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157

புதிய ஏவியேட்டர் மாடல் தற்போது 3 விதமான வேரியன்களில் விற்பனையாகிறது. ஸ்டாண்டர்டு வேரியன்ட் உடன் அலாய் டிரம், அலாய் டிஸ்க் ஆகிய வேரியன்டும் இதனுடன் கிடைக்கிறது. இந்த படி பழைய ஸ்கூட்டரின்மெக்கானிஷத்தில் எந்த மாற்றமும் இல்லை.

2018 மாடல் ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157

இந்த ஸ்கூட்டர் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7000 ஆர்பிஎம்மில் 8 எச்பி பவரையும்,5,500 ஆர்பிஎம்மில் 8.94 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உன் பொருத்தப்ட்டுள்ளது. இந்த புதிய அவியேட்டர் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 82 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
New Honda Aviator Launched In India; Prices Start At rs 55,157. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X