ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் மிகவும் பிரபலம். ராயல் என்பீல்டுக்கு நிகர் ராயல் என்பீல்டுதான்.

By Arun

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் மிகவும் பிரபலம். ராயல் என்பீல்டுக்கு நிகர் ராயல் என்பீல்டுதான். என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு, சமீப காலமாக போட்டி அதிகரித்து வருகிறது. இந்த போட்டியானது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக, 7 பைக்குகள் விரைவில் லான்ச் ஆகவுள்ளன. அந்த பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

கேடிஎம் 390 அட்வென்ஜர் (KTM 390 Adventure)

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான கேடிஎம், இந்தியாவின் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக, அட்வென்ஜர் டூரர் மோட்டார் சைக்கிளான 390 அட்வென்ஜர் பைக்கை விரைவில் களமிறக்குகிறது கேடிஎம்.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

தற்போது கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக், பல்வேறு கட்டங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக், 2019ம் ஆண்டில் லான்ச் செய்யப்படலாம். அசதியின்றி மிக நீண்ட தொலைவு பயணிக்க ஏதுவாக, இதன் சஸ்பென்ஸன்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

390 டியூக் பைக்குடன் ஒப்பிடுகையில், 390 அட்வென்ஜர் பைக்கின் டிசைன் முற்றிலும் மாறுபட்டது. எனினும் டியூக் பைக்கில் இருக்கும் அதே 373.2 சிசி இன்ஜின்தான், இந்த பைக்கிலும் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் 43 பிஎச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

ஹீரோ எக்ஸ் பல்ஸ் (Hero XPulse)

உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள மலிவான விலை கொண்ட ஒரு பைக் எக்ஸ் பல்ஸ். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளுக்கு இது மிகச்சிறந்த மாற்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

2018 ஆட்டோ எக்ஸ்போவில், எக்ஸ் பல்ஸ் மோட்டார் சைக்கிளை, ஹூரோ நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 200 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 20 பிஎச்பி பவர் மற்றும் 18 என்எம் டார்க் திறனை உருவாக்கும் சக்தி வாய்ந்தது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் அளவுக்கு இது அதிக சக்தி வாய்ந்தது இல்லைதான். என்றாலும் ஹீரோ எக்ஸ் பல்ஸ் மோட்டார் சைக்கிளின் எடை வெறும் 140 கிலோதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 1.10 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும் என கருதப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலியை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அட்வென்ஜர் மோட்டார் சைக்கிளான எக்ஸ் பல்ஸ் நிச்சயம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் பைக், 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் லான்ச் ஆகும் என கூறப்பட்டது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

ஆனால் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 3 மாதங்கள் தாமதமாகதான் ஹீரோ எக்ஸ் பல்ஸ் லான்ச் ஆகும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2019ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் ஹீரோ எக்ஸ் பல்ஸ் லான்ச் ஆகும்.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

பஜாஜ் டோமினார் அட்வென்ஜர் (Bajaj Dominar Adventurer)

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் லான்ச் ஆன பஜாஜ் டோமினார் 400 பைக், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் க்ரூய்ஸர் லைன் அப் பைக்குகளுக்கு, நேரடி போட்டியாக திகழ்ந்து வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தை குறி வைத்து வெளியான பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கான விளம்பரங்கள் மிகவும் பிரபலம்.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

இந்த சூழலில், டோமினார் 400 பைக்கின் அட்வென்ஜர் டூரர் வெர்ஷன் லான்ச் ஆகும் என்பதற்கான ஹிண்ட்டை கடந்த மே மாதம் பஜாஜ் நிறுவனம் கொடுத்தது. பஜாஜ் டோமினார் அட்வென்ஜர் லான்ச் ஆனால், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளுக்கு நேரடி போட்டியாக திகழும்.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

பஜாஜ் அவென்ஜர் 400 (Bajaj Avenger 400)

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகளுக்கு, அவென்ஜர் 400 பைக்கின் மூலமாக கடும் சவாலை அளிக்க, பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பஜாஜ் அவென்ஜர் 400 பைக், வரும் டிசம்பர் மாதம் லான்ச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிக விலை உயர்ந்த க்ரூய்ஸர் பைக்காக, அவென்ஜர் 400 இருக்கும். எனினும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி மற்றும் 450 சிசி பைக்குகள் அளிக்கும் போட்டியை சமாளிக்கும் வகையில்தான் அதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

பெனெல்லி இம்பீரியல் 400 (Benelli Imperiale 400)

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் லைன் அப்பிற்கு போட்டியாக, இம்பீரியல் 400 பைக்கை, 2019ம் ஆண்டு லான்ச் செய்யவுள்ளது. 2017ம் ஆண்டு EICMA மோட்டார் சைக்கிள் ஷோவில், இம்பீரியல் 400 பைக்கை, பென்னெலி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

EICMA ஷோ என்பது இத்தாலி நாட்டின் மிலன் நகரில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மோட்டார் சைக்கிள் ஷோ ஆகும். இது மிலன் மோட்டார் சைக்கிள் ஷோ என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு காட்சிபடுத்தப்பட்ட இம்பீரியல் 400 பைக்கில், 373 சிசி, ஏர் கூல்டு, ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

இந்த இன்ஜின், 5,500 ஆர்பிஎம்மில் 20 பிஎச்பி பவர் மற்றும் 3,500 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன், இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

பெனெல்லி லியோன்சினோ (Benelli Leoncino)

பெனெல்லி நிறுவனம், லியோன்சினோ ஸ்க்ராம்ப்ளர் பைக்கை, இந்தியாவில் அடுத்த ஆண்டு லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடுக்கு ஏற்ற வகையில், இந்த பைக் லான்ச் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

இந்த பைக்கும், 2017 EICMA மோட்டார் சைக்கிள் ஷோவில்தான், முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள, பேரல்லல் டிவின் 500 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 45 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

இதே பைக்கின் சிறிய மாடலான லியோன்சினோ 250 பைக்கையும் இந்தியாவிற்கு கொண்டு வர பெனெல்லி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 249 சிசி இன்ஜின், 25 பிஎச்பி பவரையும், 21.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

ஜாவா 350 ஓஎச்சி (Jawa 350 OHC)

மஹிந்திரா மூலமாக இந்தியாவிற்கு திரும்ப வருகிறது ஜாவா பிராண்ட். இந்தியா மற்றும் இதர தென் கிழக்கு ஆசிய நாடுகளில், ஜாவா பைக்குகளை விற்பனை செய்வதற்கான உரிமம் தற்போது மஹிந்திரா நிறுவனத்திடம்தான் உள்ளது.

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

இந்நிலையில் ஜாவா 350 ஓஎச்சி மோட்டார் சைக்கிள்தான், முதலில் இந்தியாவில் லான்ச் செய்யப்படவுள்ளது.

2019ம் ஆண்டு லான்ச் ஆகவுள்ள ரெட்ரோ-தீம்டு மோட்டார் சைக்கிளான இது, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குடன் போட்டியிடும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பைக் இதுதான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
7 New Royal Enfield-Challenging Bikes Coming Soon. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X