ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டர் குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள வசதிகளும், புதிய அசம்ங்களும் தான். இந்த ஏத்தர் ஸ்கூட்டர்களில் உள்ள சில ரகசியமாக பெரும்பாலானோருக்கு

By Balasubramanian

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டர் குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள வசதிகளும், புதிய அசம்ங்களும் தான். இந்த ஏத்தர் ஸ்கூட்டர்களில் உள்ள சில ரகசியமாக பெரும்பாலானோருக்கு தெரியாத சில தகவல்களை நாம் கீழே காணலாம் வாருங்கள்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் எஸ் 340 மற்றும் எஸ் 450 ஆகிய ஸ்கூட்டர்கள் நேற்று லாஞ்ச் செய்யப்பட்டன. பல நாட்களாக இந்த ஸ்கூட்டரின் லாஞ்சை எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று வெற்றி கரமாக லாஞ்ச் செய்யப்பட்டது.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

அமெரிக்காவின் டெஸ்லா காருக்கு இணையாக இந்த ஸ்கூட்டர் பேசப்படுகிறுது. பல்வேறு வசதிகளை மிக உயர் ரக தொழிற்நுட்பங்களுடன் இந்த ஸ்கூட்டர் உள்ளடக்கி இருப்பது தான் இதன் வரவேற்ப்பிற்கு முக்கிய காரணம்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

வாட்டர் ப்ரூப் பேட்டரி

எலெக்ட்ரிக் வாகனம் என்றாலே பலர் பெரிய பேட்டரிகள் இருக்கும். மழை காலங்களில் பேட்டரியில் தண்ணீர் இறங்கினால் முழுவதுமாக பாழாகிவிடும். இதனால் எலெக்ட்ரிக் வாகனம் வீண் என்ற பேச்சு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

இதை எல்லாம் தகர்க்கும் வகையில் இந்த ஸ்கூட்டரில் ஐபி 67 ரேட்டிங் உள்ள பேட்டரியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்த ரேட்டிங் ஸ்மார்ட் போன்ற பேட்டரிகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும், ஸ்கூட்டர்களின் இது தான் முதல் முறை ஐபி 67 ரேட்டிங் என்றால் அந்த பேட்டரி முழுவதும் தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கூடியது. டஸ்ட் மற்றம் வாட்டர் ப்ரூப் கொண்டது.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

வேகமாக சார்ஜ் செய்யக்கூடியது.

முதன்முறையாக பெங்களூருவில் விற்பனையாகி வரும் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய பெங்களூருவில் ஆங்காங்கே சார்ஜ்ஜிங் சென்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கே 1 நிமிடத்திற்கு சராசரியாக 1 கி.மீ. தொலைவு செல்லக்கூடிய அளவிலான சார்ஜை ஏற்ற முடியும். பேட்டரியின் 80 சதவீதம் வரை சார்ஜ் வேகமாக ஏறிவிடும்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

ஏத்தர் நிறுவனம் பெங்களூருவில் ஒவ்வொரு 4 கி.மீ. தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது. இதனால் பெங்களூருவிற்குள் இந்த பைக்கை ஓட்ட எந்த வித பிரச்னையும் இல்லாமல் இருக்கும் என அந்நிறுவனத்தினர் நம்புகின்றனர்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

நீண்ட நாள் பேட்டரி உழைப்பு

இந்த பைக்கின் பெரும்பாலான விலையை பேட்டரி தான் எடுத்து கொண்டுள்ளது. பேட்டரியை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும். அதை மனதில் வைத்து அந்நிறுவனம் நீண்ட நாட்கள் உழைக்ககூடி பேட்டரியை பயன்பத்துகிறார்கள். இது குறைந்தது 50,000 கிலோ மீட்டர் வரை எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

பெரும்பாலான ஸ்கூட்டர்களுக்கு 50,000 கி.மீ. தான் வாழ்நாளாக உள்ளது. அதனால் இந்த ஸ்கூட்டரின் வாழ்நாள் வரை இந்த பேட்டரி தாங்கும் என நாம் நம்பலாம்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

சந்தா கட்டணம்

ஏத்தர் நிறுவனம் ஏத்தர் ஒன் என்ற பிளானில் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸை செய்து வருகிறது. சர்வீஸின் போது பிரேக் பேட் மற்றும் மற்ற பாகங்கள் வாங்க வேண்டியது வந்தால் அந்நிறுவனமே அதை மாற்றி விடும். மாதம் சுமார் ரூ 700 கட்டணம் உள்ள இந்த சர்வீஸை அந்நிறுவனம் ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலையுடன் சேர்த்து விட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் வசதியில்லாமல் ஸ்கூட்டரை குறைந்த விலையில் வாங்க முடியுமா என்ற தகவல்கள் இல்லை.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

சரியா மைலேஜ் அளவு

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு ஸ்கூட்டரிலும் ஒரு பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளது. அராய் நிறுவனத்தின் விதிகளின் படி டெஸ்ட் செய்தால் முழு சார்ஜில் 107 கி.மீ. வரை இயங்கும். ஆனால் உண்மையாக ரோட்டில் ஓட்டும் போது அவ்வளவு மைலேஜ் தராது. சராசரியாக 60 கி.மீ. தான் கிடைக்கும். எக்கோ மோடில் 75 கி.மீ. வரை கிடைக்கும். அதனால் அவர்கள் குறிப்பிடும் மைலேஜ் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

ரிவர்ஸ் கியர்

ரிவர்ஸ் கியர் என்பது கார்களில் சாதாரண ஒரு ஆப்ஷன் தான். சில உயர்ரக பைக்கிலும் இந்த ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் முதல் முறையாக குறைந்த விலை ஸ்கூட்டரில், அதுவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த ஆப்ஷன் உள்ளது.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

இதன் மூலம் ஸ்கூட்டர் எதேனும் சிறிய பள்ளத்தில் சிக்கி கொண்டால் அதை எடுக்கவும், பார்க்கில் லாட்டில் இருந்து ஸ்கூட்டரை பின்னால் எடுக்கவும் அதிக சிரமப்பட தேவையில்லை, ரிவர்ஸ் கியரை பயன்படுத்தி இதை சுலபமாக செய்து விடலாம்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

பாதுகாப்பான பிரேக்கிங்

ஏத்தர் ஸ்கூட்டர்கள் விலை அதிகம் அதனால் அதன் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டிய கடமை அதை தயாரிக்கம் நிறுவனத்திற்கு உள்ளது. இதை உணர்ந்து தான் அந்நிறுவனம் ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கியுள்ளது.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு ஸ்கூட்டர்களிலும் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக கூட வழங்கப்படவில்லை. ஸ்கூட்டர்களுக்கு ஏபிஎஸ் தேவையில்லை என்று அந்நிறுவனத்தினர் கருதினார்களா? அல்லது ஏபிஎஸ் பொருத்தினால் இன்னும் விலையை அதிகரிக்க வேண்டிய சுழல் வரும் என கருதினார்களா என்பது தெரியவில்லை.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

டச் ஸ்கிரின் பேனல்

ஏத்தர் ஸ்கூட்டர்களில் இருக்கும் ஒரு முக்கிய வசதி டச் ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். 7 இன்ச் வாட்டர் ப்ரூப் டச் ஸ்கிரீன் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் நெவிகேஷன், ரிமோட் டயகனஸ்டிக், சார்ஜ் ஸ்டேடஸ், ஸ்பீடோ மீட்டர், உள்ளிட்ட பல வசதிகளை நாம் பெற்று கொள்ளலாம்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் சிம் கார்டு பொருத்தவேண்டும். அதன் மூலம் எப்பொழுதும் நெட் கனெக்ட்டிலேயே இருக்கும். மேலும் இந்த டச் ஸ்கிரின் ஸ்கூட்டர் 5 கிலோ மீட்டர் வேகத்திற்கும் அதிகமாக செல்லும் போது தானாக செயல் இழந்து விடும் வாகனம் நின்று கொண்டிருக்கும் போது மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

ஸ்மார்ட் போன் கனெக்ட்

ஏத்தர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் ஆப் ஒன்றை வழங்குகிறது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் ஸ்கூட்டரில் எவ்வளவு சார்ஜ் உள்ளது. நாம் ரைடு செய்யும் முறை, வாகனத்தில் மைலேஜை அதிகப்படுத்த டிப்ஸ். நாம் செல்ல வேண்டிய ரூட்டை முன்பே பதிவு செய்வது உள்ளிட்ட சில வசதிகள் இதில் உள்ளது.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

சர்வீஸ் சென்டர் இல்லை

பொதுவாக சர்வீஸ் சென்டர் இல்லாததது அல்லது குறைவாக இருப்பது ஒரு வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு நெகட்டிவான விஷயம் ஆனால் அதையே ஏத்தர் நிறுவனம் பாசிட்வாக மாற்றியுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதை இந்த நிறுவனம் இன்டர்நெட் மூலமே சரி செய்துவிடும்.

ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்

அதையும் மீறி ஏதேனும் மெக்கானிக்கல் சர்வீஸ் தேவைபட்டால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஸ்கூட்டர் இருக்கும் இடத்திற்கே வந்து ஸ்கூட்டரை சரி செய்து தருகின்றனர். அதாவது இந்நிறுவனம் ஜீரோ டீலர்ஷிப் மற்றம் சர்வீஸ் சென்டர் என்ற கொள்கையுடன் இயங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather S340 & S450 launched; 10 things you don’t know about India’s MOST expensive electric scooters. Read in Tamil
Story first published: Wednesday, June 6, 2018, 15:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X