ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஏத்தர் 340 மற்றும் 450 மாடல்கள் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.ஏத்தர் 340 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைவிட 450 மாடல் ரூ.15,000 வி

By Saravana Rajan

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஏத்தர் 340 மற்றும் 450 மாடல்கள் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த இரு மாடல்களுக்குமான வேறுபாடுகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

ஏத்தர் 340 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைவிட 450 மாடல் ரூ.15,000 விலை அதிகம். இந்த இரு ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு தாத்பரியம் மற்றும் ஃப்ரேம் ஆகியவை ஒன்றுதான். சிறப்பம்சங்களிலும், செயல்திறனிலும் இந்த மாடல்கள் வேறுபடுகின்றன.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, நேவிகேஷன் சதி, பார்க்கிங் அசிஸ்ட், சார்ஜ் நிலையங்கள் இருக்கும் இடத்தை அறிவதற்கான வசதிகளை இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்குகிறது.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

தோற்ற வித்தியாசம்

ஏத்தர் 340 மற்றும் 450 மாடல்களின் தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை. ஆனால், சற்று விலை உயர்ந்த, கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஏத்தர் 450 மாடலை எளிதில் கண்டறிவதற்காக சக்கரங்களின் ரிம்மில் பச்சை வண்ண ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

பேட்டரி விபரம்

இரண்டு ஸ்கூட்டர்களிலும் பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ஏத்தர் 340 ஸ்கூட்டரில் 1.92 KWh பேட்டரியும், ஏத்தர் 450 மாடலில் 2.4KWh பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 மாடலின் ரேஞ்ச் எனப்படும் பயணிக்கும் தூரம் அதிகம் என்பதுடன் அதிகபட்ச வேகமும் கூடுதலாக இருப்பது முக்கிய வித்தியாசம்.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போத 75 கிமீ தூரமும், சாதாரண மோடில் வைத்து ஓட்டும்போது 60 கிமீ தூரமும் பயணிக்கும். மறுபுறத்தில் ஏத்தர் 340 மாடல் ஈக்கோ மோடில் 60 கிமீ தூரமும், சாதாரண நிலையில் 50 கிமீ தூரமும் பயணிக்கும்.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

செயல்திறன்

ஏத்தர் 340 ஸ்கூட்டரின் மின் மோட்டார் 4.4kW அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும். அதாவது, இந்த மாடல் 20 என்எம் டார்க் திறனையும் வெளிக்கொணரும் சக்தி கொண்ட மின் மோட்டாரை பெற்றிருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும். 0-40 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

ஏத்தர் 450 மாடலின் மின் மோட்டார் 5.4Kw அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடல் 20.5 என்எம் டார்க் திறனை வழங்கும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். 0- 40 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். தற்போதுள்ள மின்சார ஸ்கூட்டர்களில் ஆக்சிலரேஷனில் முதன்மையாக மாடலாக இருக்கிறது.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

விலை

ஏத்தர் 340 ஸ்கூட்டர் ரூ.1.09 லட்சம் விலையிலும், ஏத்தர் 450 மாடல் ரூ.1.24 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். முதல்கட்டமாக பெங்களூரில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. படிப்படியாக நாட்டின் பிற நகரங்களிலும் இந்த மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஏத்தர் ஈடுபட்டுள்ளது.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

தற்போது அறிமுக சலுகை விலையாக இது குறிப்பிடப்படுகிறது. ஸ்கூட்டருக்கான விலையில் கூடுதலாக சார்ஜிங் கேபிள், சாலை அவசர உதவித் திட்ம், இலவச பராமரிப்பு சேவை மற்றும் ஸ்கூட்டருக்கான மின்சார கட்டணம் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிரது.

ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?

ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு கூடுதலாக முழுமையான சார்ஜிங் கட்டமைப்பு வாடிக்கையாளர் வீட்டிலேயே இலவச நிறுவித் தரப்படும் என்று ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிசெயல்திறன் மிக்க, நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் மாடல்களாக ஏத்தர் 340 மற்றும் 450 மின்சார ஸ்கூட்டர்கள் கருதப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather 340 Vs Ather 450: What’s The Difference?
Story first published: Thursday, June 14, 2018, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X