ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் மிகப்பிரபலமான ஸ்கூட்டர் என்றுபது மறுக்கமுடியாது உண்மை. இந்தியாவில் பலர் இந்த ஸ்கூட்டரை தான் விரும்புகின்றனர். இந்த ஆக்டிவா என்ற பெயர் ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் என்ற பெயரில்

By Balasubramanian

ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் மிகப்பிரபலமான ஸ்கூட்டர் என்றுபது மறுக்கமுடியாது உண்மை. இந்தியாவில் பலர் இந்த ஸ்கூட்டரை தான் விரும்புகின்றனர். இந்த ஆக்டிவா என்ற பெயர் ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வருகிறது. உருவானது தான் இந்த ஆக்டிவா என்ற வார்த்தை.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

இந்தஆக்டிவா ஸ்கூட்டரில் நீடித்த உழைப்பு, நல்ல மைலேஜ், குறைவான பராமரிப்பு ஆகியவை தான் இந்த பைக்கின் விற்பனைக்கு மிக முக்கிய காரணம். இதே போல மார்கெட்டில் ஆக்டிவா தவிர மற்ற சிறந்த ஸ்கூட்டர்கள் உள்ளன. அவற்றின் பட்டியலை கீழே காணலாம் வாருங்கள்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

ஹோண்டா டியோ

ஆக்டிவா ஸ்கூட்டரை வெளியிடும் அதே நிறுவனம் தான் ஹோண்டா டியோ என்ற ஸ்கூட்டரை வெளியிடுகிறது. இந்த ஸ்கூட்டரில் 109.19 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறத. இது 8 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இன்ஜின் சிறந்த உழைப்பு மற்றும் பெர்பாமென்ஸை தருகிறது. இந்த ஸ்கூட்டரின் லுக்கும் இளைஞர்களை அதிக அளவில் சுண்டி இழுக்கிறது. பெருநகரங்களில் இளைஞர்கள் அதிகளவில் இந்த ஸ்கூட்டரை விரும்புகின்றனர். ஆக்டிவாவை போலவே வேறு ஒரு ஸ்கூட்டரை நீங்கள் வாங்க நினைத்தால் டியோ பெஸ்ட் சாய்ஸ்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

டிவிஎஸ் என்டார்க் 125

தமிழ்நாட்டில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியிட்ட ஸ்கூட்டர் தான் டிவிஎஸ் என்டார்க் 125இந்த ஸ்கூட்டரின் விலை சற்று அதிகம் தான். அதற்கு முக்கிய காரணம் இந்த ஸ்கூட்டரில் உள்ள வசதிகளும் பெர்பாமென்ஸூம் தான். இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 124.79 சிசி திறன் கொண்டது. இது 9.4 பிஎஸ் பவரை வெளியிவும். இதன் லுக் ஒரு ஸ்போர்ட்டி லுக்காக இருக்கிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், நல்ல பவர்புல்லான அதே நேரத்தில் அதிக தொழிற்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்கூட்டரை நீங்கள் பெறலாம்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

டிவிஎஸ் ஸ்கூட்டி ஃஸெஸ்ட்

பெண்கள் ஸ்கூட்டர் ஓட்ட ஏற்றவகையில் குறைந்த எடையுடனும், அதிக மைலேஜ் உடனும், பெண்களுக்கு பிடித்த வடிவத்தில் டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டி ஃஸெஸ்ட் ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது. ஸ்கூட்டி பெப் + ஸ்கூட்டரின் அப்டேட்டட் வெர்ஷன் தான் இது. இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.9 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரின் மொத்த எடை 97 கிலோ தான். இதனால் இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம், மேலும் இதன் விலையும் ரூ 50,529 மட்டும் தான். ஆக்டிவாவை ஒப்பிடும் போது இதன் விலை குறைவு தான்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

வெஸ்பா விஎஸ் 125

வெஸ்பா விஎஸ் 125 ஸ்கூட்டரின் விலை சற்று அதிகம் தான் ஆனாலும், அதன் மூலம் சிறப்பாக ஸ்கூட்டர் ஓட்டும் எக்ஸ்பிரியன்ஸை பெறலாம். இதன் இன்ஜினை பொருத்தவரை 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 10.2 பிஎஸ் பவரை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ72,303, சிறந்த ஸ்டைலிஷான பைக்கை எந்த பட்ஜெட் பிரச்சனையும் இல்லாமல் பெற விரும்புபவர்கள் இந்த வெஸ்பாவை பெறலாம்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

ஹீரோ மீஸ்ட்ரோ

ஆக்டிவாவில் உள்ள எல்லா வசதிகளும் வேண்டும் அதே நேரத்தில் வேறு லுக்கில் வேண்டும் என்றால் நீங்கள் கண்னை மூடிவிட்டு இந்த ஹீரோ மீஸ்ட்ரோவை புக் செய்யலாம். மேலும் இந்த ஸ்கூட்டர் ஆக்டிவாவை விட பவர்புல்லான ஸ்கூட்டர், இதில் உள்ள கண்சர்வேட்டிவ் டிசைன், டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம் உடன் வருகிறது. மீஸ்ட்ரோ ஸ்கூட்டரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது ஆக்டிவாவை விட குறைவான விலையில் கிடைக்கிறது. கொடுக்கும் காசுக்கு ஏற்ற சிறந்த வாகனம்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

அப்ரில்லா எஸ்ஆர்150

அப்ரில்லா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் பெர்பாமென்ஸ் விரும்பிகளுக்கு சிறந்த தீனி, இதன் லுக் சிறந்த ஸ்போர்டி லுக்காக உள்ளது. இந்த ஸ்கூட்டரை பொருத்தவரை 154.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 10.4 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ 70,348க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

சுஸூகி பார்க்மேன் 125

இந்த ஸ்கூட்டர் நேற்று தான் விற்பனைக்கே வந்தது. இது சிறந்த சொகுசான வசதிகளுடன் மேக்ஸி ஸ்கூட்டர் ஸ்டைலிஷ் டிசைனை பெற்றுள்ளது. இது 125 சிசி ஒரு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சுஸூகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட அதே இன்ஜின் தான். இது ரூ 68,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நீடித்த உழைப்பிற்கும், நீண்ட தூர பயணத்தையும் விரும்புபவர்கள் இந்த ஸ்கூட்டரை பெறலாம்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்

ஹோண்டா க்ரெஸியா

ஹோண்டா நிறுவனம் டியோவை் ஆக்டிவா 110 ஸ்கூட்டருக்கு ஸ்டைலிஷ் ஆல்டர் நெட்டிவ் ஸ்கூட்டராக இருக்கிறது. அதே நேரத்தில் அம்சங்கள் ரீதியாக ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு ஆல்டர்நெட்டிவ் ஸ்கூட்டர் என்றால் அது இந்த க்ரெஸியா தான். இதன் விலை ரூ 59,622தான். ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை விட இதன் விலை ரூ 1000 தான் அதிகம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. போட்டியாளர்களை குலை நடுங்க வைத்த பஜாஜ்.. கம்பீரமாக மறு அவதாரம் எடுக்கிறது சீட்டாக் ஸ்கூட்டர்..
  2. ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்
  3. புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!
  4. இந்தியாவின் விலை உயர்ந்த எஸ்யூவி காரை 2வது முறையாக வாங்கிய அம்பானி.. ரகசியங்கள் கசிந்தன..
  5. சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது
Most Read Articles
English summary
Everyone owns a Honda Activa? 8 great alternatives for you. Read in Tamil
Story first published: Friday, July 20, 2018, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X