ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

அடுத்த ஆண்டு ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையிலான ஹஸ்க்வர்னா விட்பிலின் 401, ஸ்வர்ட்பிலின் 401 ஆகிய ப

By Saravana Rajan

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த புதிய தகவலை பஜாஜ் ஆட்டோ வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் பைக் மாடல்கள் இந்தியாவில் பெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் தயாரிப்புகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

இதனால், இந்த புதிய பிராண்டு மீது இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவல் இருக்கிறது. ஹஸ்க்வர்னா விட்பிலின் 401 மற்றும் ஸ்வர்ட்பிலின் 410 ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

அதன்படி, ஹஸ்க்வர்னா பைக்குகள் தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கேடிஎம் பைக்குகள் போன்றே, ஹஸ்க்வர்னா பைக்குகளும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

மேலும், ஆஸ்திரியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றவும் பஜாஜ்- கேடிஎம் கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மிக சரியான விலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் வரும் வாய்ப்புள்ள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஹஸ்க்வர்னா பைக்குகள் ஏற்றுமதி செய்யப்படும். முதலில் ஹஸ்க்வர்னா விட்பிலின் 401 மற்றும் ஸ்வர்ட்பிலின் 401 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த பைக்குகளின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

அடுத்து ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 பைக் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பிரிமியம் பைக்குகள் தனித்துவ டிசைன் அமைப்பு மற்றும் கேடிஎம் பைக்குகள் மூலமாக இந்தியர்களை வசீகரித்த செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வர இருப்பதால் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

இந்த ஆண்டு இறுதியில் ஹஸ்க்வர்னா பைக்குகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஹஸ்க்வர்னா பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

ஹஸ்க்வர்னா 401 மற்றும் ஸ்வர்ட்பிலிலன் 410 ஆகிய இரண்டு பைக் மாடல்களுமே கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் இதர முக்கிய பாகங்களை இந்த பைக்குகள் பகிர்ந்து கொள்கின்றன. டிசைனில் மட்டுமே இவை வேறுபடும்.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

இந்த பைக்குகளில் இருக்கும் 373சிசி எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின், பிரேக் சிஸ்டம், சேஸீ ஆகியவற்றை கேடிஎம் 390 பைக்குகளில் இருந்து பங்கிட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

கேடிஎம் 390 பைக் மாடல்களைவிட சற்று கூடுதல் விலையில் பிரிமியம் பைக் மாடல்களாக ஹஸ்க்வர்னா பைக்குகள் நிலைநிறுத்தப்படும். இந்த பைக்குகளின் தனித்துவமான டிசைன் இந்திய இளைஞர்களை கவரும் என்று கருதப்படுகிறது.

ImageSource: Moneycontrol

Most Read Articles
English summary
Bajaj Auto Reveals Husqvarna India launch in 2019.
Story first published: Monday, July 23, 2018, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X