எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

பேட்டரியில் இயங்கும் மின்சார பைக்கை பஜாஜ் ஆட்டோ உருவாக்கி வருகிறது. புதிய மின்சார பைக்கானது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்படும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்

By Saravana Rajan

பேட்டரியில் இயங்கும் மின்சார பைக்கை பஜாஜ் ஆட்டோ உருவாக்கி வருகிறது. இந்த மின்சார பைக் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 11ம் ஆண்டு பங்குதாரர்களுக்கான பொதுக்கூட்டத்தில் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், மின்சார வாகன தயாரிப்பு துறையில் அதிக நிறுவனங்கள் களமிறங்கததால், அதிக சவால் நிறைந்ததாக உள்ளது. எனினும், அதில் நாம் களமிறங்காவிட்டால், அதைவிட சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை களமிறக்கும் அவசியம் உள்ளது. தற்போது இருசக்கர மின்சார வாகனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம். அது மின்சார பைக்காகவோ அல்லது மின்சார ஸ்கூட்டராகவோ இருக்கலாம்," என்று கூறினார்.

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தற்போது பைக் மார்க்கெட்டில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனவே, மின்சார பைக் மாடல் உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிகிறது. எனினும், ஸ்கூட்டர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள மவுசு காரணமாக, மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் வாய்ப்பும் உள்ளது.

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

பஜாஜ் நிறுவனத்தின் புதிய மின்சார இருசக்கர வாகனங்கள் பஜாஜ் அர்பனைட் என்ற புதிய பிராண்டு வரிசையில் வெளிவர இருக்கின்றன. அதாவது, மின்சார வாகனங்களுக்கான தனி பிராண்டாக விளங்கும்.

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

புதிய மின்சார பைக்கானது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்படும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. இதன்படி பார்த்தால், 2020ம் ஆண்டுக்குள் இந்த புதிய மின்சார வாகனத்தை பஜாஜ் ஆட்டோ களமிறக்கும் வாய்ப்புள்ளது.

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

மேலும், உலகிலேயே மிக அழகாக வடிவமைக்கப்பட்ட மின்சார பைக்காக இருக்கும் என்றும் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது. இந்த மின்சார பைக்குடன் சேர்த்து, பேட்டரியில் இயங்கும் க்யூட் என்ற நான்கு சக்கர குவாட்ரிசைக்கிள் வாகனத்தையும் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த மாடல் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

பஜாஜ் க்யூட் மின்சார வாகனமானது ஆட்டோரிக்ஷாக்களுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும். மூன்றுசக்கர ஆட்டோரிக்ஷாக்களைவிட அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய க்யூட் வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Source:Money Control

Most Read Articles
English summary
Bajaj Auto India is said to be working on the development of a brand new battery-powered electric scooter. According to Money Control, the new electric scooter from Bajaj is expected to be launched in India before 2020.
Story first published: Thursday, July 26, 2018, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X