பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்

பல்சர் மற்றும் அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக் ஒன்றை யமஹா களமிறக்கவுள்ளது. பஜாஜ், டிவிஎஸ் நிறுவனங்களை கலக்கமடைய செய்துள்ள அந்த பைக் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்சர் மற்றும் அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக் ஒன்றை யமஹா களமிறக்கவுள்ளது. பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களை கலக்கமடைய செய்துள்ள அந்த பைக் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்று யமஹா YZF-R15(ஒய்இஸட்எப்-ஆர்15). குறிப்பாக பைக் ஆர்வலர்கள் மத்தியில் யமஹா YZF-R15 மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

இந்த சூழலில் YZF-R15 பைக்கின் நேக்கட் வெர்ஷனை (Naked Version) லான்ச் செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த பைக் யமஹா MT-15 (எம்டி-15) என்ற பெயரில் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

ஆல் நியூ 2019 MT-15 பைக்கை, 2018 தாய்லாந்து மோட்டார் ஷோவிலேயே யமஹா நிறுவனம் காட்சிபடுத்தி விட்டது. ஆனால் அந்த பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதையும் தற்போது வரை யமஹா நிறுவனம் வெளியிடவில்லை.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

யமஹா YZF-R15 பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகதான் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பஜாஜ் பல்சர் 200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி 200 ஆகிய பைக்குகளுக்கு நேரடி போட்டியை வழங்கும் வகையில் யமஹா நிறுவனத்திடம் எந்த பைக்கும் இல்லை.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

அந்த குறையை MT-15 போக்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய மார்க்கெட்டில் 2019ம் ஆண்டில் யமஹா MT-15 பைக் லான்ச் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யமஹா MT-15 பைக் சர்வதேச மார்க்கெட்களிலும் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யமஹா MT-15 பைக்கானது, சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட YZF-R15 V3.0 பைக்கை அடிப்படையாக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

Tmcblog வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், யமஹா YZF-R15 V3.0 மற்றும் MT-15 ஆகிய பைக்குகளுக்கு இடையே பெரும்பாலான மெக்கானிக்கல் பார்ட்கள் (Mechanical Parts) பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிகிறது. ஆனால் டிசைன் மற்றும் உட்காரும் நிலை ஆகியவை மட்டும் வேறுபடலாம்.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

எனவே யமஹா MT-15 பைக்கில் மிகவும் ஷார்ப்பான டிசைன் மற்றும் ஸ்டைலை இந்திய வாடிக்கையாளர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம். இந்த விஷயத்தில் யமஹா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எந்த குறையையும் வைக்காது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

ஆல் நியூ லிக்யூட் கூல்டு (Liquid-Cooled) 155 சிசி இன்ஜின் முதலில் யமஹா YZF-R15 பைக்குடன்தான் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19.3 பிஎச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

ஆனால் இதே பெர்ஃபார்மென்ஸ் டியூனிங் உடன்தான் யமஹா MT-15 பைக்கும் அறிமுகம் செய்யப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. யமஹா MT-15 பைக் குறைவான எடை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே அதற்கு ஏற்ற வகையில் யமஹா நிறுவனம் டியூன் செய்யலாம்.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

எனினும் YZF-R15 பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைதான் MT-15 பைக்கிலும் யமஹா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

இந்த பைக்கில் ஒருவேளை 150 சிசி இன்ஜின் மட்டுமே இடம்பெற்றாலும் கூட, பஜாஜ் பல்சர் 200 என்எஸ் போன்ற 200 சிசி பைக்குகளை எதிர்கொள்ளும் அளவுக்கான சக்தி வாய்ந்ததாகதான் இருக்கும். பஜாஜ் பல்சர் 200 என்எஸ் அதிகபட்சமாக 23.2 பிஎச்பி பவர் மற்றும் 18.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

யமஹா MT-15 பைக்கின் விலை சுமார் 1.20 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபுல்லி ஃபேர்டு (Fully-Faired) பைக்கான YZF-R15 V3.0 (பெங்களூரு எக்ஸ் ஷோரூம் விலை 1.27 லட்ச ரூபாய்) பைக்கை காட்டிலும் சற்றே குறைவான விலைதான்.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

அதே நேரத்தில் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 98 ஆயிரம் ரூபாயில் இருந்தே தொடங்குகிறது. இதன் அதிக விலை கொண்ட வேரியண்ட்களில் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் பிரேக் வசதியும் வழங்கப்படுகிறது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

ஆனால் YZF-R15 V3.0 பைக்கில் யமஹா நிறுவனம் இன்னும் ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கவில்லை. என்றாலும் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய பைக்குகளில் ஏபிஎஸ் வசதியை பார்க்க முடிகிறது. எனவே ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் MT-15 பைக் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்சர், அப்பாச்சிக்கு போட்டியாக மிரட்டலான புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. கலக்கத்தில் பஜாஜ், டிவிஎஸ்..

இதுதவிர இந்தியாவில் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் வசதியை கட்டாயம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

Most Read Articles

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #யமஹா
English summary
Bajaj Pulsar, TVS Apache Competitor Yamaha MT-15 Will Launch In 2019. Read in Tamil
Story first published: Wednesday, October 24, 2018, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X