மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

பல்சர் பைக்கின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக சரிந்திருந்த நிலையில், தற்போது திடீரென மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் பல்சர் மேஜிக் மீண்டும் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.

By Arun

பல்சர் பைக்கின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக சரிந்திருந்த நிலையில், தற்போது திடீரென மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதால், பல்சர் மேஜிக் மீண்டும் தொடங்கி விட்டது என்றே கூறலாம். பல்சரின் 2வது இன்னிங்ஸ் தொடங்கியிருப்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக், கடந்த 2001ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இளைஞர்களின் இதய துடிப்பாகவே மாறிபோனது பல்சர். பல்சர் என்ற மந்திர சொல்லுக்கு மயங்காத இளைஞர்கள் யாரும் நிச்சயமாக இருக்கவே முடியாது.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

பல்சர் என்பது ஒரு பைக் என்பதையும் கடந்து, இளைஞர்கள் அனைவரும் அதை ஓர் உணர்வாகவே பார்க்க தொடங்கினர். பல்சரை வைத்து கொண்டு பஜாஜ் வாசித்த மகுடிக்கு இளைஞர் பட்டாளம் அனைத்தும் பெட்டி பாம்பாய் அடங்கி போனது.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

135, 150, 180, 200, 220 சிசி என சற்றும் இடைவெளி விடாமல் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன் பல்சர் பைக்கில் வெரைட்டி காட்டி கொண்டே இருந்தது பஜாஜ். இதனால் பல்சர் பைக்கின் விற்பனை சக்கை போடு போட்டது. வேறு எந்த பைக்காலும், விற்பனை எண்ணிக்கையில் பல்சரை நெருங்க கூட முடியவில்லை.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

எனினும் இடையில் ஓரிரு ஆண்டுகள் பல்சரின் விற்பனை திடீரென சரிவை சந்தித்தது. ராயல் என்பீல்டு ஷோரூம்கள் பக்கம் இளைஞர்கள் எட்டி பார்த்ததே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது பல்சர். ஆம், பல்சர் ஆட்டம் மீண்டும் ஆரம்பித்து விட்டது.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஜாஜ் பல்சர் பிரீமியம் மற்றும் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் பல்சர் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. முன் எப்போதும் இவ்வளவு பல்சர் பைக்குகள் ஒரே மாதத்தில் விற்பனையானது இல்லை.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

ஒரே மாதத்தில் விற்பனையான அதிகபட்ச பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை இதுதான். கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில், பல்சர் 150 பைக்குகள் மட்டும் 52,759 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 46 சதவீத வளர்ச்சியாகும்.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

பல்சர் பைக்கின் மற்ற வேரியண்ட்களும் கூட இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வளர்ச்சியை கண்டுள்ளன. பல்சர் 2வது இன்னிங்ஸை தொடங்கியதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது. இங்குதான் பஜாஜ் நிறுவனத்தின் சூட்சமம் ஒளிந்திருக்கிறது.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

பல்வேறு பட்ஜெட் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல்சர் பைக்கின் பல்வேறு வேரியண்ட்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில், ரூ.67,437 முதல் பல்சர் பைக்குகள் கிடைக்கின்றன. ஆம், பல்சர் 150 கிளாசிக் என்ற பைக்கின் விலை வெறும் 67,437 (எக்ஸ் ஷோரூம், மும்பை) மட்டுமே.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

விலை குறைவு என்பதால், பல்சர் பைக்கின் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என கருதி சமீபத்தில்தான் இந்த வேரியண்ட்டை பஜாஜ் வெளியிட்டது. இந்தியா முழுவதும் விரைவில், பல்சர் 150 கிளாசிக் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

பல்சர் 150 கிளாசிக் வேரியண்ட்டை காட்டிலும், பல்சர் 150 ஸ்டாண்டர்டு பைக் 6 ஆயிரம் ரூபாய்தான் அதிகம். பல்சர் 150 பைக்கின் ஸ்டாண்டர்டு மாடல், 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒன்று சிங்கிள் டிஸ்க் பிரேக் உடனும், மற்றொன்று டிவின் டிஸ்க் பிரேக் உடனும் விற்பனைக்கு வருகிறது.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

விலைப்பட்டியலில் சற்றே மேல் நோக்கி சென்றால், அங்கே பல்சர் என்எஸ் 160 பைக் உள்ளது. பல்சரின் ஸ்போர்ட்டியான, லிக்யூட் கூல்டு வெர்ஷன் பைக்கான இது, 150 சிசி வேரியண்ட்களை காட்டிலும் அதிக பவர் புல். இதன்விலை 82 ஆயிரம் ரூபாய்.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

ஏர் கூல்டு கூலிங் சிஸ்டம் கொண்ட பல்சர் 180 பைக், பல்சர் என்எஸ் 160 பைக்கை காட்டிலும் ஒரு சில ஆயிரங்கள்தான் அதிகம். பஜாஜ் நிறுவனம் இதனுடன், பல்சர் பைக்கின் 220 சிசி, ஏர் கூல்டு வெர்ஷனையும் விற்பனை செய்கிறது. பல்சர் சீரிஸில் பெரிய இன்ஜின் கொண்ட பைக் இதுதான். இதன் விலை 94 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்.

மீண்டும் தொடங்கியது பல்சர் மேஜிக்! விற்பனையில் புதிய சாதனை.. 2வது இன்னிங்ஸில் நின்னு விளையாட ரெடி

இதுதவிர பல்சர் என்எஸ் 200, பல்சர் ஆர்எஸ் 200 ஆகிய பைக்குகளையும் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இரண்டு வேரியண்ட்களும் ஆப்ஷனல் ஏபிஎஸ் பிரேக் வசதியை பெற்றுள்ளன. பல்சர் என்எஸ் 200 பைக்கின் விலை 98 ஆயிரம் முதல் தொடங்குகிறது. அதே நேரத்தில் ஆர்எஸ் 200 பைக்கின் விலை 1.24 லட்ச ரூபாயாக உள்ளது.

English summary
Bajaj pulsar's 2nd innings begins. Read in tamil
Story first published: Friday, June 29, 2018, 19:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X