எலக்ட்ரிக் கார் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ், விரைவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Arun

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ், விரைவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில், பஜாஜ் நிறுவனம் வகுத்துள்ள யுக்திகள் குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜிவ் பஜாஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பின்வரும் ஸ்டைலர்களில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

உலக அளவில் 2 வீலர் மற்றும் 3 வீலர் வாகன தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் இந்திய நிறுவனம் பஜாஜ். மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாக கொண்டு பஜாஜ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பல தயாரிப்புகள் உலக புகழ்பெற்றவை.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

ஆனால் இந்திய மார்க்கெட்டில் தற்போது வரை, எலக்ட்ரிக் சார்ந்த தயாரிப்புகள் எதையும் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யவில்லை. ஆனால் 2020ம் ஆண்டுக்குள், தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்து விடும் என யூகங்கள் கிளம்பியுள்ளன.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

இதனிடையே பஜாஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜிவ் பஜாஜ், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பஜாஜ் நிறுவனம் எப்போது எலக்ட்ரிக் வாகனங்களை லான்ச் செய்யும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இது குறித்து அவர் எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

ஆனால் எலக்ட்ரிக் வாகன செக்மெண்டில் நுழைவது தொடர்பாக பஜாஜ் நிறுவனத்திற்கு இருக்கும் யுக்திகள் குறித்து தனது கருத்துக்களை ராஜிவ் பஜாஜ் பகிர்ந்து கொண்டார். எலக்ட்ரிக் வாகன செக்மெண்டை பஜாஜ் நிறுவனம், வித்தியாசமான முறையில்தான் அணுகுமாம்.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

அதாவது எலக்ட்ரிக் வாகன உலகின் டெஸ்லாவாக இருக்க பஜாஜ் நிறுவனம் விரும்புகிறது என்கிற ரீதியில் ராஜிவ் பஜாஜ் கருத்து தெரிவித்தார். டெஸ்ஸா என்பது, எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். அங்குள்ள கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு டெஸ்லா செயல்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

டெஸ்லா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் மிகவும் புகழ்பெற்றவை. தானியங்கி கார்களையும் கூட டெஸ்லா நிறுவனம் தயாரித்து வருகிறது. எனவே ராஜிவ் பஜாஜ்ஜின் கருத்தை வைத்து பார்க்கையில், டெஸ்லா நிறுவனத்தின் ஒரு சில யுக்திகளை பஜாஜ் நிறுவனம் பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களால் சுற்றுச்சூழல் மோசமான வகையில் பாதிப்படைந்து வருகிறது. எனவே இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், வேக வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்களை மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

இந்தியா, சீனா என்ற 2 பெரிய மார்க்கெட்களை குறிவைத்துள்ள முன்னணி நிறுவனங்கள் பலவும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் என எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை பரவலாக முடுக்கி விட்டுள்ளன.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

உலகப்புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனமும் கூட இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனம் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

உலகமே வேக வேகமாக மாறி கொண்டு வந்தாலும், எலக்ட்ரிக் வாகனங்களில் ஒரு சில குறைகள் காணப்படவே செய்கின்றன. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவு என்பதுதான் எலக்ட்ரிக் வாகனங்களில் காணப்படும் மிகப்பெரும் குறை.

எலக்ட்ரிக் உலகின் தாதா டெஸ்லாவை காப்பியடிக்க பஜாஜ் திட்டம்?

எனினும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை விட மலிவான விலையில் இயக்க முடியும் என்பது உள்ளிட்ட காரணங்களால், மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bajaj wants to be Tesla of electric motorcycles: Details. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X