டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

2014-ல் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனமும், இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பைக் தயாரிப்பு நிறுவனமும் கூட்டணி அமைத்து இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கின. பெனெல்லி பைக்குகளுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிட

By Saravana Rajan

டிஎஸ்கே மோட்டோவீல்ஸ்- பெனெல்லி பைக் நிறுவனம் இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

2014ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனமும், இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பைக் தயாரிப்பு நிறுவனமும் கூட்டணி அமைத்து இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கின. டிஎஸ்கே நிறுவனம் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் டீலர்ஷிப்பையும், ஹையோசங் பைக்குளின் வினியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்தது. ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டு இருந்தது.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

இந்த நிலையில், புதிய கூட்டணி மூலமாக பெனெல்லி பைக் உற்பத்தி, டீலர்ஷிப் மற்றும் சர்வீஸ் சேவைகளை டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. பெனெல்லி பைக்குகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த கூட்டணியின் வர்த்தகம் சிறப்பாக அமைந்தது. நாடுமுழுவதும் 25 நகரங்களில் டீலர்ஷிப்புகள் செயல்பட்டு வருகின்றன.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

பெனெல்லி டிஎன்டி 25, பெனெல்லி டிஎன்டி 300, 302ஆர், டிஎன்டி 600 ஜிடி, டிஎன்டி 600ஐ, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களை இந்த கூட்டணி விற்பனை செய்து வந்தது. இதில், பிஎஸ்-4 மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் பைக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

விரைவில் லியான்சினோ ஸ்க்ராம்ப்ளர், டிஆர்கே 502 உள்ளிட்ட நடுத்தர ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டிருந்தன. இதில், டிஆர்கே 502 அட்வென்ச்சர் ரக பைக் என்பதுடன், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடலாகவும் கருதப்படுகிறது.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

இந்த நிலையில், டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் குல்கர்னி மோசடி புகாரில் சிக்கியிருப்பதாலும், ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பொருளாதார பிரச்னையை சந்தித்துள்ளது. இதையடுத்து, டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடனான உறவை பெனெல்லி நிறுவனம் முறித்துக் கொண்டுள்ளது.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

மேலும், ஹைதராபாத்திற்கு தலைமையிடத்தை மாற்றி இருக்கும் பெனெல்லி, அந்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மஹாவீர் குழுமத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை தொடர இருக்கிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மஹாவீர் குழுமம் வாகன டீலர்ஷிப்பில் பிரபலமான நிறுவனம். மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா, இசுஸூ மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டீலராக செயல்பட்டு வருகிறது. ஹைதராபாத், விஜயவாடாவில் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்ததுடன் பெனெல்லி கூட்டணி முறிந்ததால், இந்தியாவில் பெனெல்லி பைக்குகளை வாங்கிய உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் குறித்து உரிமையாளர்களிடத்தில் அச்சம் எழுந்தது. ஆனால், மஹாவீர் நிறுவனம் கூடிய விரைவில் டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

மேலும், டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணி முறிந்துள்ளதால், பெனெல்லி பைக்குகள் அசெம்பிள் செய்யும் பணிகளும் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில், பெனெல்லி பைக்குகளை அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் திறப்பதற்கு மஹாவீர் குழுமம் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் இந்த ஆலையை திறக்கவும் முடிவு செய்துள்ளது.

டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!

இதனால், பெனெல்லி பைக் உரிமையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்ற ஆறுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அனைத்து வித சேவைகளையும் மஹாவீர் குழுமத்தின் கூட்டணியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு பெனெல்லி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Italian motorcycle manufacturer Benelli made its India debut in October 2014 in partnership with DSK Motowheels. Now, ZigWheels reports that Benelli has parted ways with DSK Motowheels and has partnered with Hyderabad-based Mahavir Group.
Story first published: Saturday, July 14, 2018, 18:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X