புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பெனெல்லி டிஎன்டி 300 பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் மாடல் அறிமுகம் செய்யப

By Saravana Rajan

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய பைக் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

மஹாவீர் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் வர்த்தகத்தை தொடர இருக்கும் பெனெல்லி பைக் நிறுவனம் பல புதிய மாடல்களை வரிசை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில், பெனெல்லி நிறுவனம் தனது டிஎன்டி 302எஸ் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

பெனெல்லி டிஎன்டி 300 பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய பெனெல்லி 302எஸ் பைக் மாடலானது கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த இஐஎம்சிஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

பெனெல்லி டிஎன்டி 300 பைக்கின் அடிப்படையில்தான் புதிய டிஎன்டி 302எஸ் பைக் மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சிறிய டிசைன் மாற்றங்களுடன் இந்த பைக் வந்துள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை இங்கு இடம்பெற்றிருக்கின்றன. இது பார்ப்பதற்கு கேடிஎம் ட்யூக் 390 பைக் போலேவ தோற்றமளிக்கிறது.

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக்கின் பெட்ரோல் டேங்க் மிகவும் கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. செமி ஸ்டெப் அப் இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அலுமினிய புகைப்போக்கி அமைப்பு, முன்சக்கரத்தில் ட்வின் பெட்டல் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூற முடியும்.

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக்கில் 300சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 37.5 பிஎச்பி பவரையும், 25.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 16 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக் 203 கிலோ எடை கொண்டது.

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது!!

புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் பிஎம்டபிள்யூ ஜி310ஆர், கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். இதுமட்டுமின்றி, பல புதிய மாடல்களை இந்த கூட்டணி வரிசை கட்ட திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Italian two-wheeler manufacturer Benelli recently partnered with the Hyderabad-based Mahavir Group for its India operations. The new joint venture will introduce several new products in the Indian market. Now, IAB reports that the Benelli TNT 302S will be launched soon in the Indian market.
Story first published: Saturday, August 11, 2018, 15:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X