இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இந்தியாவில் சமீபகாலமாக 200-300 சிசி திறன் கொண்ட இன்ஜின்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனால் அந்த ரக பைக்குகளின் எண்ணிக்கை மார்கெட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

By Balasubramanian

இந்தியாவில் சமீபகாலமாக 200-300 சிசி திறன் கொண்ட இன்ஜின்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனால் அந்த ரக பைக்குகளின் எண்ணிக்கை மார்கெட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் குறித்த மோகம் அதிகரித்து வருகிறது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இது மட்டும் இல்லாமல் இந்தியாவில் சீராகி வரும் ரோடுகள், இந்த ரக பைக்குகளின் வரும் தொழிற்நுட்ப மாற்றங்கள், முன்பை காட்டிலும் சிறந்த மைலேஜ் ஆகியவையும் இந்த பைக்கின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த ரக பைக்குகளை பெரும்பாலும் 18-30 வயதிற்குட்பட்டவர்களே வாங்குகின்றனர்.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இப்படியா நீங்களும் பைக்குகள் மீது மோகம் கொண்டவரா, உங்களுக்காக 200-300 சிசிக்கு உட்பட்ட திறன் இன்ஜின் கொண்ட பைக்குகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் பைக் வாங்கு எண்ணத்தில் இருந்தால் இந்த பட்டியலை பார்த்து உங்களுக்கு ஏற்ற பைக்கை தேர்வு செய்யுங்கள்.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

பஜாஜ் பல்சர் என்எஸ்200

பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக் இந்த செக்மெண்டில் பிரபலமன பைக் இந்த பைக் முதன் முதலாக 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் இந்த பைக் குறிப்பிட்ட அளவு விற்பனையை பெற்று வருகிறது. அதன் பின் பல்வேறு முறைகள் சில அப்டேட்களை பெற்றது. 2017ம ஆண்டு வெளியான பைக்கில் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 199.5 சிசி ஒரு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 23.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலையை பொருத்தவரை ஏபிஎஸ் இல்லாத வேரியன்ட் ரூ 99,411 என்ற விலையிலும், ஏபிஎஸ் வேரியன்ட் ரூ 1,11,411 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இந்த பைக் அதிக பட்சமாக 135 கி.மீ. வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக் லிட்டருக்கு 35 கி.மீ. வரை மைலேஜ் தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

ஹீரோ எக்ஸ்ட்ரீம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக் சமீபத்தில் வெளியான 200 சிசி பைக் இதன் விலை ரூ 88,000 முதற்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில்தான் இந்த பைக் ரிலீஸ் ஆகியுள்ளது. விரைவில் மற்ற மாநிலகளுக்கும் இது விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டைலிங் மிகசிறப்பாக இருக்கிறது. இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இதன் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி இன்ஜின பொருத்தப்பட்டுள்ளது. இது 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும். மேலும் இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக இந்த பைக் 40-43 கி.மீ மைலேஜ் தருகிறது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் 2016ம் ஆண்டு முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. இதன் பெர்பாமென்ஸ், அக்ரஷிவ் ஸ்டைலிங் , ஆகியன இந்த பைக்கிற்கான பிளஸ் பாயிண்ட், இந்த பைக்கில் பல வேரியன்ட்கள் உள்ளது. இதில் கார்பரேட்டர், பியூயல் இன்ஜெக்டர் ஆப்ஷன், ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத ஆப்ஷன், ரெகுலர் டயர் மற்றும் பிரெல்லி டயர் ஆப்ஷன்கள் உள்ளன.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 197 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.7 பிஎச்பி பவரும், 18.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வேரியன்டிற்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ 1.02லட்சம் முதல் ரூ 1.16 லட்சம் வரைவிற்பனை செய்யப்படுகிறது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

யமஹா எப்இசட் 25

2017ம் ஆண்டு முதற்பாதியில் யமஹா எப்இசட்25 பைக் அறிமுகமாகியது. இதன் சிறப்பான டிசைன் எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் இன்ட்ரூமென்டல் கன்சோல், ஸ்டெப் சீட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக கூட வழங்கப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம் தான்.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 249 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் மைலேஜ் தான் லிட்டருக்கு 40 கி.மீ. வரை கிடைக்கிறது. இதன் விலையை பொருத்தவரை ரூ1.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

கேடிஎம் 200 டியூக்

இளைஞர்கள் ரோட்டில் ரசுவு பண்ணுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தியாவில் 200 சிசி செக்மென்டில் சிறந்த பைக்காக இருக்கிறது. இதன் விலை ரூ 1.46 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மற்ற பைக் விலையைவிட சற்று அதிகம் தான்.

இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25 பிஎச்பி பவரையும் 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜை தருகிறது. இந்த பைக் கடந்தாண்டு சில அப்டேட்களை பெற்றது. புதிய கலர் அப்ஷன்கள், மற்றும் கிராபிக்ஸ் ஆப்ஷன்கள் வந்தது. பைக்கின் எடையும் பழைய மடலை விட 5 கிலோ அதிகமானது. இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ட்ரூமென்ட் கண்சோல், ஏபிஎஸ், ஆகிய அசம்சங்களும் இதில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Best 200cc Bikes In India. Read in Tamil
Story first published: Wednesday, August 1, 2018, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X