உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

இன்று ஏபிஎஸ் என்று அழைக்கப்படக்கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் மிக பாதுகாப்பானதாக இருப்பதால் அதை வாகனத்தில் பொறுத்துவது அவசியமாகிறது.

By Balasubramanian

இன்று ஏபிஎஸ் என்று அழைக்கப்படக்கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் மிக பாதுகாப்பானதாக இருப்பதால் அதை வாகனத்தில் பொறுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்களில் உங்கள் பட்ஜெட்டிற்கும் அடங்கக்கூடிய டாப் 5 பைக்குகள் குறித்து கீழே பார்க்கலாம்.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கிய கண்டு பிடிப்பு ஏபிஎஸ் தான். வழக்கமான பிடிக்கும் பிரேக்கை நாம் போது ரோட்டின் தன்மை, வேகம் ஆகியவற்றை கணக்கிட்டு நாம் வாகனம் ஸ்கிட் ஆகாமல் முடிந்த அளவு சிறந்த பிரேக்கை தருவது தான் ஏபிஎஸ் தொழிற்நுட்பம்.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

இந்நிலையில் கடந்த ஏப் 1ம் தேதிக்கு பிறகு அறிமுகமாகும் 125 சிசி பைக்களுக்கு கட்டாயம் ஏபிஎஸ் வசதியிருக்க வேண்டும். ஆனால் பழைய பைக்குகள் அப்படியே விற்பனையாகலாம். ஆனால் அந்த பைக்குகளும் வரும் 2019 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குள் ஏபிஎஸ் வசதியை பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

ஆக 2019 ஏப் 1ம் தேதிக்கு பிறகு நீங்கள் வாங்கும் 125 சிசிக்கு அதிகமான அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் கட்டாயம் இருக்கும். இந்நிலையில் தற்போது மார்கெட்டில் ஏபிஎஸ் உடன் விற்பனையாகி வரும் பைக்கில் எந்த பைக் சிறந்த பைக் என நாம் கீழே பார்க்கலாம் வாருங்கள்.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

பஜாஜ் பல்சர் 200 என் எஸ் - விலை ரூ 1,11,411

பஜாஜ் 200 என்எஸ் பைக் சிறந்த பவர் புல்லான பைக். இதில் 199.5 சிசி லக்யூட் கூல்டு இன்ஜினுடன் 23.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த பைக்கில் முன் வீலிற்கு மட்டும் தான் ஏபிஎஸ் வசதி உள்ளது. பின் வீலிற்கு இல்லை. இந்த பைக்கின் பியூயல் இன்ஜெக்ஸன் மாடலும் விற்பனைக்கு இருக்கிறது. இதன் விலை ரூ 1,37,491.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ் - விலை ரூ 91,812

டிவிஎஸ் நிறுவனத்தின் வேகமான பைக்ககளில் இதுவும் ஒன்று இந்த பைக்கில் பகல் நேர எல்இடி லைட், முகப்பு பகுதியிலும் டேங்க் பகுதியிலும் ஏரோ டைனமிக் டிசைன்கள் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

இந்த பைக் 177.4 சிசி இன்ஜின் கொண்டது. இது 17.03 பிஎச்பி பவரையும் 15.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. 5ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட இந்த பைக், அதிகபட்சமாக 124 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது. இந்த பைக் கருப்பு ,வெள்ளை, க்ரே மேட், ப்ளூ ஷேட் மேட் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

சுஸூகி இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ் - விலை ரூ 1,07,000

சுஸூகி நிறுவனத்தின் மிகப்பெரிய க்ரூஸியர் பைக்கான 1800 சிசி இன்ட்ரூடர் பைக்கின் 150 சிசி வேரியன்டான் தான இந்த இன்ட்ரூடர் 150 இந்த பைக் சேஸிஸ், ரேக் ஆங்கில் என அனைத்தும் ஜிக்ஸெர் மாடல் பைக்கில் உள்ள அதே தான் இந்த பைக்கிலும் உள்ளது.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

இந்த பைக் சிங்கில் சேனல் ஏபிஎஸ் முன் பக்க வீலில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பியூயல் இன்ஜெக்ஸன் பொருத்தப்பட்டுள்ளது.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

ஹோண்டா சிபி ஹார்னட் - விலை ரூ 90734

இந்த பைக் ஸ்போர்ட் லுக் கொண்ட பைக். டிவிஎஸ் போலவே இந்த பைக்கிலும், முன் பக்க வீலில் மட்டும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. இந்த பைக்கில் இருக்கை பைக் ஓட்டுபவர்கள் ஒருவித சொகுசை வழங்கும் மேலும் இதில் பெரிய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த 162.7 சிசி இன்ஜின் திறன் கொண்ட இந்த பைக் 15.7 எச்பி பவரையும் வெளிப்படுத்தக்கூடியது.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

சுஸூகி ஜிக்ஸெர் - விலை ரூ 87,250

சுஸூகி ஜிக்ஸெர் பைக் ஏபிஎஸ் வசதியுடன் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியானது. இந்த பைக்கும் ஹார்னட், பல்சர் 200 என் எஸ் போல வே முன் பக்க வீலில் மட்டுமே ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளுது. இது ஹார்ட்னட் பைக்கை விட சற்று அதிகமான ஸ்போர்ட்டி லுக் தரும்.

உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

இந்த பைக் 155 சிசி மோட்டாருடன் 14.8 எச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஏபிஎஸ் வசதியுடன் கூடிய விலை குறைந்த பைக் இதுதான். இந்த பைக்கின் இன்ஜின் ஹார்ன்ட் பைக்கவிட குறைந்த ஸ்பெக்கில் தான் உள்ளது. ஆனால் அதை விட அதிக பவரை டெலிவரி செய்கிறது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Best affordable ABS-equipped motorcycles in India. Read in Tamil
Story first published: Wednesday, May 30, 2018, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X