ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

உலகில் உள்ள மிகவும் பழமையான இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு.

உலகில் உள்ள மிகவும் பழமையான இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்கள் குறித்து சில கட்டுக்கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அந்த கட்டுக்கதைகள் என்னென்ன? அவை உண்மையா? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

ஹேண்ட்மேட் (Handmade)

ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்கள் குறித்து உலா வரும் மிகப்பெரிய கட்டுக்கதை ஹேண்ட்மேட் . அதாவது ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள் அனைத்தும் ஹேண்ட்மேட் ஆக மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன என பலர் பேசி கொண்டிருக்கின்றனர்.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு நிறுவனம், புதிய மோட்டார் சைக்கிள்களை டெலிவரி செய்ய நீண்ட காலம் எடுத்து கொள்கிறது என்பது அவர்களின் வாதம். ஆனால் இது உண்மையல்ல. இது முழுக்க முழுக்க கட்டுக்கதை.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் பணியில், ரோபோடிக் ஆர்ம்ஸ் (Robotic Arms) எனப்படும் நவீன இயந்திர கைகளை ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபடுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் எந்த ஒரு ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளும் ஹேண்ட்மேட் கிடையாது.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 ஆகிய மோட்டார் சைக்கிள்களின் எரிபொருள் டேங்க்கில், ராயல் என்பீல்டு லோகோவை பெயிண்ட் செய்யும் பணியில், முன்பு ஒரு முறை ஒரே ஒரு குடும்பத்தை சேர்ந்த பெயிண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். அதனை அடிப்படையாக வைத்து உருவானதே இந்த கட்டுக்கதை.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

ஆயில் அதிகம் கசியும்

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டும்தான் மிக அதிகமாக ஆயில் கசியும் என சிலர் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆரம்ப கால கட்டங்களில் வெளிவந்த ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களில் அதிகளவு ஆயில் கசிந்தது என்னவோ உண்மைதான்.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

எனவே அந்த மோட்டார் சைக்கிள்களின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து கொண்டே இருக்க வேண்டிய நிலை இருந்தது. இல்லாவிட்டால் இன்ஜினில் பிரச்னை ஏற்படும். ஆனால் இந்த பிரச்னையை ராயல் என்பீல்டு நிறுவனம் சரி செய்து விட்டது.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

நவீன ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில், மிக அதிக அளவில் ஆயில் கசிகிறது என வாடிக்கையாளர்கள் யாரும் புகார் தெரிவிப்பது இல்லை. ஏனெனில் நவீன ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் இன்ஜின்கள், ஆயில் கசியாதவாறுதான் வடிவமைக்கப்படுகின்றன.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

என்றாலும் சில நவீன ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் தற்போதும் மிக சிறிய அளவில் ஆயில் கசியவே செய்கிறது. ஆனால் அதே அளவு ஆயில் கசிவு, பிற நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்களிலும் உள்ளது. எனவே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டுமே ஆயில் கசிகிறது என கூற முடியாது.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

ஸ்டார்ட் செய்வது வலி மிகுந்தது

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களை ஸ்டார்ட் செய்வது மிக கடினம் என பலர் புலம்பி வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நவீன கால ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள், எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர்களுடன் வருகின்றன. எனவே குழந்தைகளால் கூட எளிதாக ஸ்டார்ட் செய்ய முடியும்.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

ஒரு வேளை எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் வேலை செய்யாவிட்டாலும், கிக் ஸ்டார்ட்டர் மூலமாக, எளிதாக ஸ்டார்ட் முடியும். ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் யூனிட் கன்ஸ்ட்ரக்ஸன் இன்ஜின்கள் டிகம்ப்ரசர் யூனிட்களை பெற்றுள்ளன. கிக் ஸ்டார்ட் செய்வதை இவைதான் எளிதாக்குகின்றன.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

மைலேஜ் கிடைக்காது

அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதால், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் மிக மிக குறைவான மைலேஜ் மட்டுமே கிடைக்கும் என பலர் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் புல்லட் 350 ஒரு லிட்டருக்கு சுமார் 35 கிலோ மீட்டர் மைலேஜை தரவல்லது. இது ஓரளவுக்கு நல்ல மைலேஜ்தான்.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் இன்ஜின்கள் குறைவான ஆர்பிஎம்மில் (RPM) அதிக அளவு பவரை வெளிப்படுத்தக்கூடியவை. எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்ஜின்கள் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

சாலையில் திடீரென பிரேக் டவுன் ஆகும்

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, எந்த இடத்தில் வேண்டுமானாலும் திடீரென பிரேக் டவுன் ஆகிவிடும் என்ற ஒரு கட்டுக்கதையும் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுவும் உண்மையல்ல.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

வழக்கமான மோட்டார் சைக்கிள்களை காட்டிலும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு சற்றே கூடுதலான பராமரிப்பு அவசியம். ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களை சற்றே அதிக கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும் என்பது உண்மைதான்.

ராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா? சில கட்டுகதைகளும், உண்மைகளும்

ஆனால் சரியான கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்து வந்தால், இதர மோட்டார் சைக்கிள்களை போன்றுதான் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளும் சாலையில் செயல்படும்.

Most Read Articles

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Biggest Myths About Royal Enfield Bikes. Read in Tamil
Story first published: Monday, October 15, 2018, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X