சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

ஐதராபாத்தில் சர்வீஸிற்கு விட்ட பைக் திருடு போய் திரும்ப கிடைத்த போதும் பைக் அதிக பழுதாகியிருந்ததால் அந்த பைக் ஓனருக்கு புதிய பைக் வழங்கவும், மேலும் ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட

ஐதராபாத்தில் சர்வீஸிற்கு விட்ட பைக் திருடு போய் திரும்ப கிடைத்த போதும் பைக் அதிக பழுதாகியிருந்ததால் அந்த பைக் ஓனருக்கு புதிய பைக் வழங்கவும், மேலும் ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

ஐதராபாத்தை சேர்ந்தவர் மதுசூதனன் ராஜூ. இவர் ஸ்ரீ விநாயகா மோபைக்ஸ் என்ற நிறுவனத்தினரிடம், ரூ. 2.19 லட்சம் மதிப்பிலான தனது புதிய கேடிஎம் பைக் ஒன்றை சர்வீஸிற்காக கடந்த 2016ம் ஆண்டு பிப். 9ம் தேதி கொடுத்திருந்தார்.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

அந்த பைக்கிற்கு அவர் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸைதான் பெற்றிருந்தார். பைக்கிற்கான முழு இன்சூரன்ஸை பெறவில்லை. இந்நிலையில் அவர் பைக்கை சர்வீஸிற்கு விட்ட 4 நாட்களுக்கு பிறகு அந்த பைக் திருடு போய்விட்டாதாக ராஜூவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

அதன்பின் ராஜூ சர்வீஸ் சென்டருக்கு சென்று இது குறித்து விசாரித்த போது பைக் சர்வீஸ் சென்டரில் இருக்கும் போது திருடு போய் விட்டதாகவும் அதற்காக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

இதையடுத்து ராஜூ சர்வீஸ் சென்டர் கட்டுப்பாட்டில் இருந்த போது இந்த திருட்டு நடந்துள்ளதால் தனக்கு புதிய பைக் வழங்க வேண்டும் அல்லது அந்த பைக்கிற்காக முழு தொகையையும் பணமாக வழங்க வேண்டும் என கோரினார்.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

ஆனால் சர்வீஸ் சென்டரிலோ போலீசார் தற்போது அந்த பைக்கை திருடியவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பைக்கை பறிமுதல் செய்து சர்வீஸ் சென்டரில் ஒப்படைத்த பின்பு அந்த பைக்கில் என்ன பழுதுகள் இருந்தாலும் அதை உடனடியாக சரி செய்து மேலும் ஏற்பட்ட இழப்பிற்கு ஒரு நஷ்ட ஈடும் வழங்குவதாக கூறி அதை உறுதிபட எழுதி கொடுத்தனர்.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

இதன்பின் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி போலீசார் அந்த பைக்கை பறிமுதல் செய்து அந்த பைக்கை திருடிய திருடனையும் கைது செய்தனர். பைக் மீண்டும் சர்வீஸ் சென்டரிடமே ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பைக்கில் பல விதமான சேதாரங்களாகியிருந்தன.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த பைக்கை திருடிய திருடன் பைக்கை சரியாக பராமரிக்காமல், ராஸ் டிரைவிங் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சர்வீஸ் சென்டருக்கு வந்த பைக்கை அவர்கள் சரி செய்து, ராஜூவை அழைத்து டெஸ்ட் டிரைவ் செய்ய சொன்னார்கள்.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

சரி செய்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்த ராஜூவிற்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் அந்த பைக்கை அவர் டெலிவரி எடுக்க மறுத்தார். அதன் பின் அந்த சர்வீஸ் சென்டர் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

அதில் சர்வீஸ் சென்டரின் கட்டுப்பாட்டில் பைக் இருந்த போதுதான் திருடு போயுள்ளது. பைக்கை பாதுகாப்பாக கவனிக்க வேண்டியது அவர்களது கடமை. தற்போது எனது பைக் இவ்வளவு மோசமான கண்டிஷனிற்கு சென்றதற்கு அவர்களது பொறுப்பின்மையே காரணம்.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

இதனால் நடந்த தவறுக்கு அவர்கள் பொறுப்பேற்று தனக்கு புதிய பைக் ஒன்றை வழங்க வேண்டும் என்றும், மேலும் இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பைக் இல்லாததால் ஏற்பட்ட மற்ற பிரச்னைகளுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஆட்டோமொபைல் குறித்த செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்..!

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

அதை விசாரித்த கோர்ட் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சர்வீஸ் சென்டர் தரப்பிடம் கேட்டது. ஆனால் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்து விவாதம் நடத்த விருப்பவில்லை.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

இதையடுத்து கோர்ட் மனுதாரர் கேட்டதன் படி அவருக்கு அவர் சர்வீஸ் சென்டருக்கு விட்ட அதே நிறுவனம் மற்றும் மாடல் கொண்ட புதிய பைக் அல்லது அவர் பைக் வாங்குவதற்காக வழங்கிய முழு பணம் மற்றும் அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..!

சர்வீஸ் சென்டரில் இருந்து பைக் எவ்வாறு திருடு போனது, சர்வீஸ் சென்டர் நிர்வாகிகள் அவ்வளவு கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது சர்வீஸ் சென்டரில் பணியாற்றுபவர்களின் துணையுடன்தான் திருட்டு நடந்ததா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

சர்வீஸ் சென்டரில் பைக்கை தொலைக்கிறார்கள் என்றால் ஒருபுறத்தில் வெறும் ரப்பர் பெல்ட் பழுதான காரை சரி செய்ய ரூ.1.68 லட்சம் செலவாகும் என ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் தெரிவித்தனர். ஆனால் அந்த காரை, சாதாரண மெக்கானிக் ஒருவர், வெறும் ஆயிரம் ரூபாய் செலவில், சரி செய்து கொடுள்ள சம்பவமும் நடந்துள்ளது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நவீன். இவரது நண்பர் ஒருவர், ஸ்கோடா லாரா (Skoda Laura) கார் வைத்துள்ளார். இந்த காரின் உரிமையாளருடைய மகன், அதாவது நவீனின் நண்பரது மகன், கடந்த 16ம் தேதி, தங்களது ஸ்கோடா லாரா காரை ஓட்டி கொண்டு வெளியே சென்றார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அப்போது திடீரென கார் பழுதாகி நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. நல்லவேளையாக அருகிலேயேதான் வீடு இருந்தது. எனவே மற்றொரு வாகனம் மூலம் டவ் (tow) அடித்து, தங்களது ஸ்கோடா லாரா காரை, எப்படியோ வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

மறுநாள், அதாவது ஆகஸ்ட் 17ம் தேதி, நவீனின் நண்பரும், அவரது மகனும், ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற (Autobahn Enterprises Pvt. Ltd) ஸ்கோடா இந்தியா நிறுவன டீலரை அணுகினர். பின்னர் தங்கள் காரில் ஏற்பட்ட பிரச்னை குறித்து தெரிவித்தனர்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இதன்பின்னர் அந்த டீலர்ஷிப்பில் இருந்து வந்த ஊழியர்கள், காரை மீண்டும் டவ் அடித்து, தங்களது சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மெக்கானிக்குகள், காரை சோதித்து பார்த்தனர். பின்னர் காரை சரி செய்ய 1.68 லட்ச ரூபாய் செலவு ஆகும் என எஸ்டிமேட் (Estimate) கொடுத்தனர்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அதாவது ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு 1.43 லட்ச ரூபாய் செலவாகும் எனவும், லேபர் சார்ஜ் ரூ.25 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவீனின் நண்பருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த ஸ்கோடா டீலர், தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என அவர் கருதினார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இதன்பின் பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்ற சிறிய நிறுவனத்தை சேர்ந்த நிதின் என்பவரை, நவீனின் நண்பர் அழைத்தார். பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்பது ஒரு கார் சர்வீஸ் சென்டர் ஆகும். ஆனால் அது, ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது அல்ல.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இருந்தாலும் பரவாயில்லை என நினைத்த நவீனின் நண்பர், காரை அங்கேயே கொண்டு செல்வது என முடிவெடுத்தார். ஆனால் காரை விடுவிக்க வேண்டுமென்றால், ரூ.3 ஆயிரம் கட்ட வேண்டும் என ஸ்கோடா டீலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

காரில் என்ன குறை என்பதை கண்டறிந்து, அதற்கு எஸ்டிமேட் போட்டதற்குதான் அந்த 3 ஆயிரம் ரூபாய் போல! இருந்தாலும் நவீனின் நண்பர் அந்த ரூ.3 ஆயிரத்தையும் செலுத்தி விட்டார். வேறு என்ன செய்வது? காரை வெளியில் எடுத்தாக வேண்டுமே.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அதன்பின் வொர்லி என்ற பகுதியில் உள்ள பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு, நவீனின் நண்பரது கார் கொண்டு செல்லப்பட்டது. ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் குர்லா என்ற பகுதியில் உள்ளது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

குர்லாவில் இருந்து வொர்லி வரை, நவீனின் நண்பரது கார், மீண்டும் டவ் அடித்தே கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த மெக்கானிக் காரை பரிசோதித்து பார்த்து விட்டு, வெறும் 1,062 ரூபாய்தான் செலவாகும் என எஸ்டிமேட் கொடுத்தார்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

இதன்பின் நடந்தவற்றை நவீன் விவரிக்கிறார். ''பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு காரை கொண்டு வந்தோம். அங்குள்ள மெக்கானிக் காரை சோதித்து பார்த்து விட்டு, ரப்பர் பெல்ட்டை மட்டும் மாற்ற வேண்டும் என கூறினார். இதற்கு லேபருடன் சேர்த்து வெறும் 1,000 ரூபாய் மட்டுமே செலவானது.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

காரில் என்ன பழுது? என்பதை கண்டறிந்து, அதனை சரி செய்வதற்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே ஆனது. ஆனால் ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரான ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், 1.68 லட்ச ரூபாய்க்கு எஸ்டிமேட் கொடுத்தனர்.

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

தற்போது எனது நண்பர் காரை வழக்கம்போல பயன்படுத்தி வருகிறார். காரில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. ஒரு சிறிய கேரேஜை சேர்ந்த மெக்கானிக், வெறும் 1,000 ரூபாய் செலவில் காரை சரி செய்து கொடுத்து விட்ட நிலையில், ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் எதற்காக ரூ.1.68 லட்சம் கேட்டனர்?

கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

அவர்களின் நோக்கம் என்ன? என்பது எங்களுக்கு புரியவில்லை'' என்றார். இந்த சம்பவம், கார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவங்களை எல்லாம் நவீன்தான், இணையதளங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் பில் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Bike theft at service center court orders for give new bike. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X