பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர் பைக்குகளின் அறிமுக விபரம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

By Saravana Rajan

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக்குகள் விற்பனைக்கு எப்போது வருகின்றன என்பது குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

சில நாட்களுக்கு முன் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஸ் பைக்குகள் டிரக் ஒன்றில் வைத்து ஓசூரிலிருந்து பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்டது குறித்த ஸ்பை படங்களும், செய்திகளும் வெளியாகின. இதனால், இந்த பைக் அறிமுகம் எப்போது என்பது குறித்த விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர் பைக்குகளின் அறிமுக விபரம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை மாதம் இந்த இரண்டு புதிய மாடல்களையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தை சேர்ந்தது. ஜி310 ஜிஎஸ் பைக் மாடலானது சாகச பயண விரும்பிகளுக்கான அட்வென்ச்சர் ரகத்தை சேர்ந்தது. இந்த இரு பைக்குகளுமே எஞ்சின், ஃப்ரேம் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்களை பங்கிட்டு கொண்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கில் கரடுமுரடான சாலைகளில் செலுத்துவதற்கு தக்கவாறு விசேஷ முன்புற சஸ்பென்ஷனை பெற்றிருக்கிறது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

இரண்டு பைக்குகளிலுமே பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

இரண்டு பைக்குகளிலும் 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

இந்த பைக்குகளை டிவிஎஸ் மோட்டார்ஸ் கூட்டணியில் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விரைவில் இந்திய சந்தையிலும் இந்த பைக்குகள் களமிறங்க உள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் வருகை விபரம்!!

சூப்பர் பைக் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடல்களாக வருவதால், இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Team-BHP

Most Read Articles
English summary
BMW Motorrad is set to launch the G 310R and the G 310GS models in India in July 2018. According to Team-BHP, the two 310cc motorcycles will be part of the company's 'Smart cc Bikes'. Both the new offerings will be sold through BMW Motorrad's existing dealer networks in India.
Story first published: Wednesday, May 16, 2018, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X