நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளுக்கும் வரும் ஜூன் 8ந் தேதி முதல் அதிகாரப்பூர்வமான முறையில் முன்பதிவும் துவங்கப்பட இருக்கிறது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் நேக்கட் பாடி ஸ்டைல

By Saravana Rajan

இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனமும், தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை உருவாக்குவதற்காக கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணியின் கீழ் தயாரிக்கப்படும் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் இரு பிராண்டிலும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

அதன்படி, இந்த கூட்டணியில் உருவான டிவிஎஸ் அப்பாச்சி 310 ஆர்ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில், பிஎம்டபிள்யூ பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக்குகளின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப் போனது. இது இந்திய இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்தது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

பிஎம்டபிள்யூ பிராண்டின் குறைவான விலை மாடல்கள் என்பதால், இந்த மாடல்களுக்கு பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் வரும் ஜூலை மாதம் 18ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

இந்த இரண்டு பைக்குகளுக்கும் வரும் ஜூன் 8ந் தேதி முதல் அதிகாரப்பூர்வமான முறையில் முன்பதிவும் துவங்கப்பட இருக்கிறது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் நேக்கட் பாடி ஸ்டைல் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்க மாடலாகவும், ஜி 310ஜிஎஸ் மாடல் சாகச பயணங்களுக்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக பைக் மாடலாகவும் வர இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரு பைக்குகளும் பல முக்கிய உதிரிபாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. அதில், முக்கியமான விஷயம் எஞ்சின். இந்த பைக்குகளில் 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின்தான் டிவிஎஸ் அப்பாச்சி 310ஆர்ஆர் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

இந்த பைக்குகளில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

இந்த இரண்டு பைக்குகளிலும் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்கனவே இந்த இரண்டு பைக்குகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், வலுவான டீலர்ஷிஃப் நெட்வொர்க்குடன் இந்த பைக்குகளை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ மோட்டோராட் முடிவு செய்தது. அதன்படி, டீலர்களின் எண்ணிக்கைய சற்று உயர்த்திக் கொண்டு தற்போது அறிமுக தேதியை குறித்துள்ளதாக கருதப்படுகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!

இந்தியாவை பொறுத்தவரையில், இந்த பைக்குகளின் வெற்றி விலை நிர்ணயத்தில்தான் உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் ரூ.2.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜி 310ஜிஎஸ் மாடல் ரூ.3.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் கேடிஎம் ட்யூக் 390 பைக்குடனும், பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் மாடலானது விரைவில் வர இருக்கும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
German motorcycle manufacturer BMW Motorrad is all set to launch the much-awaited G 310 R and the G 310 GS in the Indian market. Now, CarandBike reports that the BMW twins will be launched in the country on July 18, 2018. The bookings for both the motorcycles are open from June 8, 2018.
Story first published: Wednesday, June 27, 2018, 12:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X