பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரண்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் இருக்கும் 313சிசி எஞ்சின் அதிகபட்சமாக 33.5

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரண்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விலை, சிறப்பம்சங்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

குர்கானில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் மிக வித்தியாசமான முறையில் இந்த பைக்குகளின் அறிமுக நிகழ்ச்சியை பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஏற்பாடு செய்திருந்தது. அதாவது, பைக்குகளின் திறனை பரைசாற்றும் விதத்தில், அந்த பயிற்சி மைய வளாகத்தில் இந்த புதிய பைக்குகளின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில், சாகச கலைஞர்கள் கலந்து கொண்டு இரண்டு பைக் மாடல்களையும் பயன்படுத்தி வீலி, ஸ்டாப்பீ உள்ளிட்ட பல்வேறு விதமான சாகசங்களை செய்து அசத்தினர்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் நேக்கட் ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், ஜி 310 ஜிஎஸ் பைக் சாகச ரக பைக் மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மோட்டோராட் நிறுவனத்தின் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளின் டிசைன் தாத்பரியங்கள் இந்த ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு பைக்குகளும் வடிவமைப்பில் மட்டுமே சில மாற்றங்களை சந்தித்துள்ளன. மற்றபடி, முக்கிய உதிரிபாகங்கள் மற்றும் எஞ்சின் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் 313சிசி வாட்டர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்குகளில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின்தான் டிவிஎஸ் அப்பாச்சி 310ஆர்ஆர் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளும் 0 - 50 கிமீ வேகத்தை 2.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 143 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு பைக்குகளிலும் எல்சிடி திரையுடன் கூடிய மல்டி ஃபங்ஷன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வண்டியின் வேகம், எரிபொருள் அளவு, சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பெற முடியும்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் முன்புறத்தில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள் பெற்றுள்ளது. இந்த பைக் 158.5 கிலோ எடை கொண்டது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் சாகச ரக பைக்கில் முன்புறத்தில ்விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி, பறவை அலகு போன்ற முன்புற மட்கார்டு அமைப்பு, மிரட்டலான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் என அசத்துகிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

முக்கிய வித்தியாசமாக முன்புறத்தில் இருக்கும் ஃபோர்க்குகள் கரடு முரடான சாலைகளை எளிதாக எதிர்கொள்ளும் விதத்தில், லாங் டிராவல் அமைப்பை பெற்றிருப்பதுடன், 19 அங்குல முன்சக்கரத்தை பெற்றிருக்கிறது. இந்த மாடலிலும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 169.5 கிலோ எடை கொண்டது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் ஸ்டைல் எச்பி, காஸ்மிக் பிளாக் மற்றும் ரேஸிங் ரெட் ஆகிய மூன்று வண்ணக் கலவையில் கிடைக்கும். புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் பைக் பியர்ல் ஒயிட், காஸ்மிக் பிளாக் மற்றும் ரேஸிங் ரெட் ஆகிய மூன்று மெட்டாலிக் வண்ணங்களில் கிடைக்கும். இரண்டு பைக்குகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்கான வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் ரூ.2.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜி 310ஜிஎஸ் பைக் ரூ.3.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். சென்னை, பெங்களூர், கொச்சி, டெல்லி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக் ஷோரூம்களில் கிடைக்கும். விரைவில் சண்டிகர், இந்தூர், ஹைதராபாத் நகரங்களிலும் sஷோரூம் திறக்கப்பட உள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக்குகளின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவே கருதலாம். எனினும், பிராண்டு மதிப்பை கணக்கில் கொண்டால், விலை பொருட்டாக இருக்காது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு புதிய பைக்குகளும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் - டிவிஎஸ் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளன. ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த இந்த இரண்டு பைக் மாடல்களும், நீண்ட கால தாமத்திற்கு இந்திய சந்தையில் முறைப்படி களமிறக்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் குறைவான விலை பைக் மாடல்களாக வந்திருக்கும் இந்த பைக்குகள் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கின்றன.

Most Read Articles
English summary
BMW G 310 R And G 310 GS Launched in India: Prices Start At Rs 2.99 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X