இப்படியும் பைக் ஓட்ட முடியுமா? மறுபிறவி எடுத்து வந்த போலீஸ்காரரின் மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை..

ராயல் என்பீல்டு பைக்கில் செய்த துணிச்சலான ஸ்டண்ட் மூலம், இந்திய சாதனை புத்தகத்தில், போலீஸ்காரர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

By Arun

ராயல் என்பீல்டு பைக்கில் செய்த துணிச்சலான ஸ்டண்ட் மூலம், இந்திய சாதனை புத்தகத்தில், போலீஸ்காரர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். பயங்கரமான விபத்தில் இருந்து மீண்டு வந்து, அடுத்ததாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற துடிக்கும் அவரது மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குரு ஹர் ஷகாயே நகர காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் ரத்தன் சிங். ராயல் என்பீல்டு பைக்கில் செய்த ஒரு ஸ்டண்ட் மூலமாக இந்திய சாதனை புத்தகத்தில் ( Indian Book of Records) இடம்பிடித்து அசத்தியுள்ளார் ரத்தன் சிங்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

ராயல் என்பீல்டு பைக்கின் இருக்கையில், எவ்வித சப்போர்ட்டும் இன்றி நின்று கொண்டே, சுமார் 88 கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணித்துள்ளார் ரத்தன் சிங். இதன்மூலம் பைக்கில் நின்று கொண்டே மிக அதிக தூரம் பயணித்தவர் என்ற சாதனைக்கு போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் சிங் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

பஞ்சாப் மாநிலம் பஷில்கா என்ற பகுதியில் தொடங்கிய ரத்தன் சிங்கின் பயணம் சுமார் 88 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரோஷ்பூரில் முடிவடைந்தது. இந்த 88 கிலோ மீட்டர் முழுவதும், ராயல் என்பீல்டு பைக்கின் இருக்கையில், எவ்வித சப்போர்ட்டும் இன்றி நின்று கொண்டேதான் பயணித்தார் ரத்தன் சிங்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

இந்த தொலைவை கடக்க 1 மணி நேரம் 41 நிமிடங்களை மட்டுமே ரத்தன் சிங் எடுத்து கொண்டார் என்பதும் ஆச்சரியமான விஷயம்தான். தற்போது ரத்தன் சிங்கிற்கு 48 வயதாகிறது. கடந்த 16 வருடங்களாக பைக் ஸ்டண்ட் செய்து வருவதால்தான், இந்த இமாலய சாதனையை ரத்தன் சிங்கால் படைக்க முடிந்திருக்கிறது.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

பெரோஷ்பூரில் உள்ள பகத் சிங் ஸ்டேடியத்தில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் சிங்கின் பைக் ஸ்டண்ட், கடந்த 12 ஆண்டுகளாக தவறாமல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

பெரோஷ்பூர் மட்டுமின்றி, ஜலந்தர், பரிட்கோட் உள்பட பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் சிங் பைக் ஸ்டண்ட் செய்து வருகிறார். ஒட்டுமொத்தமாக பைக் ஸ்டண்ட்களில், போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் சிங்கிற்கு 16 வருட அனுபவம் உள்ளது.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

எனினும் அவரது ஸ்டண்டிங் கேரியரில், ஒரு சில விபத்துக்களும் நடைபெற்றுள்ளன. கடந்த 2002ம் ஆண்டில்தான் பைக் ஸ்டண்டிங்கை ரத்தன் சிங் செய்ய தொடங்கினார். மூன்று ஆண்டுகளே அனுபவம் பெற்றிருந்த நிலையில், 2005ம் ஆண்டில் ஒரு பயங்கரமான விபத்தில் ரத்தன் சிங் சிக்கி கொண்டார்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

திடீரென குறுக்கே வந்த கால்நடையின் மீது ரத்தன் சிங் மோதிவிட்டார். இதனால் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும் மனம் தளராத ரத்தன் சிங் காயங்களில் இருந்து மீண்டு வந்தார். துணிச்சலுடன் மறுபடியும் பைக் ஸ்டண்டிங்கை செய்ய தொடங்கினார்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

இதனால்தான் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ரத்தன் சிங் தனது பெயரை பொறிக்க முடிந்திருக்கிறது. போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் சிங்கின் பைக் சாகச வீடியோ ஒன்றை நீங்கள் கீழே காணலாம்.

2005ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் சிக்கியதை தற்போதும் ரத்தன் சிங் நினைவு கூர்கிறார். அந்த சமயத்தில் ரத்தன் சிங் இறந்து விட்டதாகதான் பலரும் நினைத்தார்களாம். ஆனால் மன தைரியம் மிக்கவரான ரத்தன் சிங், காயங்களில் இருந்து மீண்டு வந்துவிட்டார்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ரத்தன் சிங்கின் பெயர் இடம்பெற உதவிய ராயல் என்பீல்டு பைக்கில் சில மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட வேகத்தில் சீராக பயணிக்கும்படி, பைக்கின் ஆக்ஸலரேட்டர் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

இதன்மூலம் சீரான வேகத்தில் பைக் சென்று கொண்டே இருந்தது. ஆனால் பைக்கின் மீது நின்று கொண்டிருந்த ரத்தன் சிங், பிரேக்குகளை தொடவே இல்லை. பப்ளிக் ரோட்டில் பிரேக் பிடிக்காமல் பைக்கை ஓட்டுவது எவ்வளவு அபாயகரமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

பைக் ஸ்டண்டிங்கில் ஈடுபட இளைஞர்கள் மத்தியில் அதீத ஆர்வம் காணப்படுகிறது. அப்படி பைக் ஸ்டண்டிங்கில் ஈடுபடுபவர்கள், ஹெல்மெட், முழங்கை மற்றும் முழங்கால் பாதுகாப்பு உபகரணங்கள் (knee guards, elbow guards) ஆகியவற்றை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ப்ரொடெக்டிவ் ஜாக்கெட், மிக நீளமான ஷூ ஆகியவற்றையும் அணிந்து கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அத்துடன் பப்ளிக் ரோட்டில் ஸ்டண்டிங் பயிற்சிகளை மேற்கொள்வதையும் தவிர்க்கலாம்.

இந்தியாவில் இப்படி யாரும் பைக் ஓட்டியதே இல்லை.. துணிச்சல் போலீஸ்காரரின் மிரள வைக்கும் சாதனை..

இதனிடையே இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் அங்கீகாரம் தற்போது ரத்தன் சிங்கிற்கு கிடைத்து விட்டது. அடுத்ததாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என்பதை ரத்தன் சிங் இலக்காக வைத்துள்ளார். கின்னஸ் சாதனை படைப்பதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள் ரத்தன் சிங்.

Source: Breaking News India

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Brave indian constable perform amazing bike stunt. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X