ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

இத்தாலியில் நடந்து வரும் ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 836சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 836சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

பாரம்பரியம் மிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய ரக மோட்டார்சைக்கிள் மாடல்களை தயாரிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் வரிசையில், தற்போது பாபர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

இதற்கு முன்னோட்டமாக ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், KX என்ற புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பொறியியல் வல்லமையை உலகுக்கு பரைசாற்றும் விதமாக, பிரம்மாண்டமான இந்த மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை வடிவமைத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

1937ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு KX மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் நவீன கால டிசைனுக்கு ஒத்துப் போகும் வகையில், இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 6 மாதங்களில் இந்த மோட்டார்சைக்கிள் வரைபட நிலையிலிருந்து கான்செப்ட் நிலைக்கு மேம்பட்டுத்தப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

1937ல் தயாரிக்கப்பட்ட 1140 KX மோட்டார்சைக்கிளானது Ultimate Luxury Motorcycle என்ற கொள்கையில் பிரபலப்படுத்தப்பட்டது. அந்த மோட்டார்சைக்கிளில் 1,140சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதே பாணியில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய KX மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

பாரம்பரியமான பாபர் ரக வடிவமைப்பில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் வட்ட வடிவிலான பகல்நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. பழைய 1140 KX மாடலைப் போன்றே, கர்டர் ஃபோர்க்குகள் அமைப்பு கொண்ட முன்புற சஸ்பென்ஷன் கவனித்தக்க விஷயம்.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

முன்புறத்தில் பிரம்மாண்டமான அலாய் வீல்கள் மற்றும் டயர்கள், கச்சிதமான பெட்ரோல் டேங்க், பாபர் ரக மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு உரிய ஒற்றை இருக்கையும், பின்புற டயர் தனியாக இருப்பது போன்ற அமைப்பும் முத்தாய்ப்பான விஷயங்கள். முன்சக்கரத்தில் இரண்டு டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

ஒற்றை ஸ்விங் ஆர்மில் பின்புற சக்கரம் மோட்டார்சைக்கிளின் அடிச்சட்டத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கைக்கு கீழே மறைவாக மோனோ ஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது!

இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் வி- ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 836சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மற்றும் போலரிஸ் நிறுவனங்களின் கூட்டணியில் இந்த புதிய 836சிசி எஞ்சின் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு. எஞ்சின் செயல்திறன் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம்.

பெரும் ஆவலை ஏற்படுத்திய இந்த புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் அடுத்த ஆண்டு தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த கான்செப்ட் தயாரிப்பு நிலைக்கு செல்லாது என்று ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது ஏமாற்றமான விஷயம்.

Most Read Articles
English summary
EICMA 2018: Royal Enfield KX concept revealed. Royal Enfield has revealed the KX concept at the EICMA Motorcycle Show in Milan, Italy. The Royal Enfield KX concept is a pathbreaking model for the company and Royal Enfield claims it was made just to showcase the skills of their design team.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X