இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ பைக்குகள், இந்தியாவில் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே பைக்குகள் அமெரிக்காவில் குறைவான விலையில் விற்பனையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

By Arun

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ பைக்குகள், இந்தியாவில் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே பைக்குகள் அமெரிக்காவில் குறைவான விலையில் விற்பனையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

பிஎம்டபிள்யூ மோட்டோராட்-டிவிஎஸ் நிறுவனங்களின் கூட்டணியில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில், இந்த 2 பைக்குகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்கள் மத்தியில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இந்த 2 பைக்குகளையும் கடைசியாக பெற்ற மார்க்கெட்தான் இந்தியா என்றே சொல்ல வேண்டும்.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

ஏனெனில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், இந்த 2 பைக்குகளும், இந்தியாவில் மட்டும் லான்ச் செய்யப்படவில்லை. ஒரு வழியாக நீண்ட தாமதத்திற்கு பின், 2 பைக்குகளும் நேற்று முன் தினம் (ஜூலை 18ம் தேதி) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் லான்ச் செய்யப்படவில்லையே என பைக் ஆர்வலர்கள் ஏங்கி போயிருந்தனர். தற்போது இந்த 2 பைக்குகளும் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டு விட்டாலும் கூட, அவர்கள் இன்னமும் அதிருப்தியில்தான் உள்ளனர்.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இதற்கு காரணம் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளின் அநியாய விலைதான். இந்த பைக்குகளின் விலை விஷயத்தில், அமெரிக்காவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் என பிஎம்டபிள்யூ நிறுவனம் நடந்து கொள்ளும் பாங்கு பைக் ஆர்வலர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக் 3.78 லட்ச ரூபாய் என்ற ஆன் ரோடு விலையிலும், ஜி 310 ஜிஎஸ் பைக் 4.35 லட்ச ரூபாய் என்ற ஆன் ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலையில் ரோடு சைடு அசிஸ்டென்ஸ், சைடு ஸ்டேண்ட் ஆகியவை சேராது என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

அதே சமயம் அமெரிக்காவில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக் இந்திய மதிப்பில் சுமார் 3.27 லட்ச ரூபாய்க்கும் (இந்தியாவில் ரூ.3.78 லட்சம்), ஜி 310 ஜிஎஸ் பைக் இந்திய மதிப்பில் சுமார் 3.93 லட்ச ரூபாய்க்கும் (இந்தியாவில் ரூ.4.35 லட்சம்) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

அதாவது இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவில் மிகவும் குறைவான விலையில் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், உன்னிப்பாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளடங்கியிருக்கிறது.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள்தான் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படுவதால், அமெரிக்காவில் தனியாக இறக்குமதி வரி வேறு விதிக்கப்படும்.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

அப்படி இருந்தும் கூட இந்திய மார்க்கெட் உடன் ஒப்பிடுகையில் அமெரிக்க மார்க்கெட்டில் மிகவும் குறைவான விலையில்தான், ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

அது எப்படி ஒரு இந்திய தயாரிப்பு, இந்திய மார்க்கெட்டை காட்டிலும் வெளிநாட்டு மார்க்கெட்டில் விலை குறைவாக விற்பனை செய்யப்படும்? இது எப்படி சாத்தியம்? என்பதற்கான தெளிவான பதில்கள் தற்போது வரை கிடைக்கவில்லை.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இங்கே கேடிஎம் நிறுவனத்தை ஒப்பிடுவதும் அவசியமான ஒன்றாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கும் கேடிஎம் டியூக் 390 பைக், இந்திய மார்க்கெட்டில் சுமார் 2.65 லட்ச ரூபாய் என்ற ஆன் ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

அதே சமயம் அமெரிக்க மார்க்கெட்டில் கேடிஎம் டியூக் 390 பைக்கின் விலை இந்திய மதிப்பில் சுமார் 3.44 லட்ச ரூபாய். அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கேடிஎம் டியூக் 390 பைக், இந்திய மார்க்கெட்டில் விலை குறைவாகவும், அமெரிக்க மார்க்கெட்டில் விலை அதிகமாகவும் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இத்தனைக்கும் அமெரிக்க மார்க்கெட்டில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட (3.27 லட்சம்), கேடிஎம் டியூக் 390 பைக்தான் அதிக விலையில் (3.44 லட்சம்) விற்பனை செய்யப்படுகிறது. இங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட சுமார் 1.13 லட்ச ரூபாய் குறைவான விலையில் கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் அமெரிக்க மார்க்கெட்டில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட 17 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் கேடிஎம் டியூக் 390 விற்பனையாகிறது.

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

அதாவது இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட விலை குறைவாக உள்ள கேடிஎம் டியூக் 390 பைக், அமெரிக்க மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்?

இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..

இப்படி ஒரு குளறுபடியான விலை நிர்ணயத்தை செய்தது ஏன்? என்பதற்கான தெளிவான பதில்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் தரவில்லை. இதனால் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் நொந்து போய் உள்ளனர்.

Most Read Articles
English summary
Enthusiasts Disappointed Because of BMW G310R, G310GS Pricing Strategy. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X