ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

இன்று வெற்றிகரமான நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்தாலும், ஹோண்டா நிறுவனத்தின் சில மோட்டார் சைக்கிள்கள் குறித்த நினைவு, மக்கள் மனதில் இருந்து அழிந்தே விட்டது.

By Arun

இன்று வெற்றிகரமான நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்தாலும், ஹோண்டா நிறுவனத்தின் சில மோட்டார் சைக்கிள்கள் குறித்த நினைவு, மக்கள் மனதில் இருந்து அழிந்தே விட்டது. இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அதன் முன்னாள் நண்பனும், இன்னாள் எதிரியுமான ஹூரோ நிறுவனம்தான். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஹோண்டா மோட்டார் கம்பெனி லிமிடெட். இதன் துணை நிறுவனம் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா. கடந்த 1999ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக தற்போது இது திகழ்கிறது. இந்நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளுள் ஒன்று ஆக்டிவா ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர்.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆக்டிவா ஸ்கூட்டர் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. சில பிரபலமான கியர்டு மோட்டார் சைக்கிள்களை காட்டிலும், இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர் அதிகளவில் விற்பனையாகி வருவதே அதற்கு சாட்சி.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஆனால் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து வெளிவந்த அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் வெற்றி பெற்று விட்டது என கூறி விட முடியாது. மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாததால், சில மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தியை, ஹோண்டா நிறுவனம் நிறுத்தவும் செய்துள்ளது.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஹோண்டா நிறுவனத்தின் ஒரு சில மோட்டார் சைக்கிள்களின் நினைவுகள் மக்கள் மனதில் இருந்து தற்போது அழிந்திருக்கும் என்றும் சொல்லலாம். அப்படி மக்களால் மறக்கப்பட்ட ஹோண்டா நிறுவன மோட்டார் சைக்கிள்கள் குறித்து இனி வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம்.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஹோண்டா டிவிஸ்டர் (Honda Twister)

ஹோண்டா டிவிஸ்டர் 110 சிசி மோட்டார் சைக்கிள் ஆகும். இதர கம்யூட்டர் (commuter) மோட்டார் சைக்கிள்களை காட்டிலும் ஹோண்டா டிவிஸ்டர் சற்று ஸ்டைலிஷ் ஆக காட்சியளிக்கும். ஆனால் இந்திய மார்க்கெட்டில், டிவிஸ்டர் மோட்டார் சைக்கிளுக்கு சவாலான போட்டியாளர்கள் பலர் இருந்தனர்.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

குறிப்பாக ஹூரோ ஸ்பிளெண்டர் மற்றும் பேஷன். இவ்விரு பைக்குகளும் வழங்கிய போட்டியை, டிவிஸ்டரால் சமாளிக்கவே முடியவில்லை. இறுதியாக டிவிஸ்டர் பைக்கின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்தி கொண்டது. அதற்கு பதிலாக வழக்கமான லுக் கொண்ட லிவோ ரீப்ளேஸ் செய்யப்பட்டது.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஹோண்டா சிடி 110 ட்ரீம் (Honda CD110 Dream)

ஹோண்டா நிறுவனத்தின் ட்ரீம் ரேஞ்ச் கம்யூட்டர் மோட்டார் சைக்கிள்களில், சிடி 110 ட்ரீம்தான் மிகவும் விலை குறைவான பைக். ஆனால் ஹூரோ ஸ்பிளெண்டர் வழங்கிய போட்டியை சமாளித்து, ஹோண்டா சிடி 110 ட்ரீம் மோட்டார் சைக்கிளால் வாடிக்கையாளர்களை கவர முடியவில்லை.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

இதனால் ஹோண்டா சிடி 110 ட்ரீம் மோட்டார் சைக்கிள், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை. எனவே மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான சிடி 110 ட்ரீம் டிஎக்ஸ் (CD110 Dream DX)மோட்டார் சைக்கிள் மூலம் இது ரீப்ளேஸ் செய்யப்பட்டது. இந்த பைக் தற்போது விற்பனையில் உள்ளது.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஹோண்டா சிபி டிரிக்கர் (Honda CB Trigger)

போதுமான அளவில் வாடிக்கையாளர்களை கவர தவறிய மற்றொரு ஹோண்டா நிறுவன மோட்டார் சைக்கிள் சிபி டிரிக்கர். இது 150 சிசி மோட்டார் சைக்கிள் ஆகும். அதிக விலை மற்றும் எதிர்பார்த்த பெர்ஃபார்மென்ஸ் கிடைக்காததால், ஹோண்டா சிபி டிரிக்கர் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஹோண்டா எட்டர்னோ (Honda Eterno)

கியர்டு ஸ்கூட்டர் செக்மெண்ட்டை புதுப்பிக்க ஹோண்டா நிறுவனம் எடுத்த முயற்சிதான் எட்டர்னோ. பார்ப்பதற்கு சற்றே ஆக்டிவா போல் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 147.7 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், அதிகபட்சமாக 8 பிஎச்பி பவர் மற்றும் 10.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

ஹோண்டா சிபிஎப் ஸ்டன்னர் (Honda CBF Stunner)

ஹோண்டா சிபிஎப் ஸ்டன்னர் மோட்டார் சைக்கிளின் விற்பனையை அப்படி ஒன்றும் குறை சொல்லி விட முடியாது. ஓரளவுக்கு நன்றாகதான் விற்பனையாகி கொண்டிருந்தது. ஆனால் ஹூரோ க்ளாமர் பைக்கின் சக்ஸஸ் ரேட்டை, ஹோண்டா சிபிஎப் ஸ்டன்னர் பைக்கால் நெருங்க கூட முடியவில்லை.

ஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ!

இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே, இதன் உற்பத்தியை ஹோண்டா நிறுவனம் நிறுத்தி கொண்டது. இதனால் இந்த பைக்கை பலர் மறந்திருப்பார்கள் என்று நிச்சயமாக சொல்லலாம். இந்த பைக்கில், 124.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிகபட்சமாக 11 பிஎச்பி பவர் மற்றும் 11 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Failure Two Wheelers of Honda. Read in Tamil
Story first published: Friday, August 10, 2018, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X