இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை வேகமாக வளர்ந்துவருகிறது. இந்த வளர்ச்சியை உடைத்து என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள வசம் ஈர்ப்பதற்காக ஹார்லி நிறுவனம் 250-500 சிசி ரக பைக்குகளையும் 500-12

By Balasubramanian

இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை வேகமாக வளர்ந்துவருகிறது. இந்த வளர்ச்சியை உடைத்து என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள வசம் ஈர்ப்பதற்காக ஹார்லி நிறுவனம் 250-500 சிசி ரக பைக்குகளையும் 500-1250 சிசி ரக பைக்குகளையும் களம் இறக்க தயாராகவுள்ளது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலக சந்தையில் தங்கள் விற்பனையை அதிகரிக்க அதுவும் முக்கியமாக இந்தியா மற்றும் ஆசிய சந்தையில் தங்கள் வாகனங்களை அதிகமாக விற் திட்டமிட்டுள்ளது. அதன் படி அந்நிறுவனம் 500 - 1250 சிசிக்குள் 3 புதிய பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

ஹார்லி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை 2019ம் ஆண்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் 2020ம் ஆண்டு அட்வெஞ்சர் பைக், நெக்ட்டு ஸ்டிரீட் பைட்டர், கஸ்டம் பைக் ஆகிய 3 புதிய பைக்குளை 500- 1250 சிசி உட்பட இன்ஜின் திறனுடன் வடிவமைக்கப்படுகிறது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

இதில் அட்வெஞ்சர் பைக்காக ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கும், 975 சிசி திறன் கொண்ட ஸ்டிரீட் பைட்டர் பைக்கும் உள்ளடங்கும். மூன்றாவது மாடலாக கஸ்டம் பைக் தயாரிக்கப்படுகிறது. இது 1250 சிசி இன்ஜின் திறனை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் எல்லம் 2020ம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

மேலும் இதே பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் 16 மாடல் பைக்குகளை 2022ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

நடுத்தர வெயிட்உடன் தற்போது குறைந்த திறன் இனஜின் கொண்ட பைக்குகளையும் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. முக்கியமாக இந்தியா, மற்றம் ஆசிய மார்கெட்டில் 250-500 சிசி இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை ஆசியாவில் உள்ள வேறு ஒரு பைக் நிறுவனத்தின் உதவியுடன் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

தற்போது 250-500 சிசி பைக்குகள் எப்பொழுது விற்பனைக்க வரும் என்பது குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்த பைக்குகளை 2021 வரை எதிர்பார்க்க முடியாது. இதற்கிடையைில் தற்போது லைவ் ஒயர் என்ற எலெக்ட்ரிக் பைக்கை 2019ம் ஆண்டு முதல் பாதியிலேயே விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதே போல மேலும் பல பைக்குகளை 2022ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை அந்நிறுவனம் செய்து வருகிறது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

நிறைய புதிய பைக்குகளை களம் இறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதால் உலகளவில் தங்கள் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனினும் அந்நிறுவனம் தொடர்ந்து டூரிங் மற்றும் க்ரூஸியர் பைக்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபடும் இதனால் ஹார்லியின் ரெகுலர் கஸ்டமரை தொடர்ந்து தங்களிடம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

தற்போது இந்திய இளைஞர்கள் மத்தியில் 200-500 சிசிக்கு உட்பட்ட இன்ஜின் திறன் கொண்ட பைக்குகள் அதிகமாக கவரப்படுகிறது. குறிப்பாக பல்சர், ராயல் என்பீல்டு, கேடிஎம், டோமினார் ஆகிய பைக்குகள் அதிகமாக விற்பனையும் ஆகி வருகிறது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

தற்போது இந்த இளைஞர்களுக்கு கனவாக

ஹார்லிடேவிட்சன் பைக்குகள் தான் இருக்கின்றன. அதன் அதிக திறன் மற்றும் அதிக விலை காரணமாக அதை பலர் வாங்க முடிவதில்லை.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

ஹார்லி நிறுவனம் தற்போது 250-500 சிசி பைக்குகளை தயாரித்து இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி மற்ற பைக் தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக ராயல் என்பீல்டு பைக்கின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் இடத்தை இனி ஹார்லி நிறுவனம் தட்டிபறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஹார்லி நிறுவனம் தயாரிக்கும் பைக்குகள் இனி இந்தியாவில் அதிக அளவில் இயங்க துவங்கும் என எடுத்துக்கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

02. சீனாவின் திடீர் முடிவால் இந்தியாவில் கார்கள் விலை கிடுகிடு உயர்வு.. பின்னணியில் நடப்பது இதுதான்..03. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் வருகை விபரம் வெளியானது!

04. ஹீரோ இனி சூப்பர் "ஹீரோ" ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை05.வாகனங்களை கொள்ளையர்கள் திருடுவது இதற்குதான்.. பொல்லாதவன் படத்தை மிஞ்சும் விபரீதம்.. உஷார்

Most Read Articles
English summary
Harley-Davidson confirms new 250-500cc motorcycle for India. Read in tamil
Story first published: Tuesday, July 31, 2018, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X