புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

By Saravana Rajan

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் முழுமையாக கசிந்துள்ளன. அந்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ டூயட் 125 ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஹீரோ டூயட் 110சிசி ஸ்கூட்டர் மாடலைவிட சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் சக்திவாய்ந்த மாடலாக மார்க்கெட்டுக்கு வர இருப்பது தெரிந்தது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

இந்த நிலையில், டூயட் 125 மாடலை தற்போது டெஸ்ட்டினி 125 என்ற பெயரில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்கூட்டரின் பல முக்கிய விபரங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் கசிந்துள்ளன.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

110சிசி மாடலிலிருந்து வேறுபடும் வகையில் முகப்பில் க்ரோம் பட்டையுடன் கூடிய புதிய அப்ரான் அமைப்பு, புதிய கிராப் ரெயில் கைப்பபிடி, புதிய புகைப்போக்கி மஃப்ளர் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், சற்று பிரிமியம் மாடலாக காட்சியளிக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் 124.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் ஐ3எஸ் என்ற ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு உமிழ்வு திறனை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் நோபுள் ரெட், செஸ்ட்நட் பிரான்ஸ், பாந்தர் பிளாக் மற்றும் பியர்ல் சில்வர் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்ப்டடுள்ளன. ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் இரண்டு சக்கரங்களிலுமே டிரம் பிரேக் சிஸ்டம் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ஆப்ஷனலாக கூட டிஸ்க் பிரேக் கொடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றமான விஷயம். எனினும், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இருப்பது ஆறுதலான விஷயம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரங்கள் கசிந்தன!!

புதிய டிசைன், சிறப்பான எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் பண்டிகை கால லிஸ்ட்டில் இந்த ஸ்கூட்டர் இடம்பெற்றிருக்கிறது. ஹோண்டா க்ரேஸியா, டிவிஎஸ் என்டார்க், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அப்ரிலியா எஸ்ஆர் 125 ஆகிய மாடல்களுடன் இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டர் போட்டி போடும்.

Source: Rushlane

Most Read Articles

English summary
The new Hero Destini 125 draws power from a 124.6cc air-cooled, single-cylinder engine that produces 8.7bhp and 10.2Nm of torque. The engine is mated to a CVT gearbox. The prominent highlight of the Destini 125 is the i3S technology. The Destini will be the first scooter to feature i3S start-stop technology.
Story first published: Saturday, August 18, 2018, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X