புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டர் சற்றுமுன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி ப

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டர் சற்றுமுன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அங்கிருந்து எமது செய்தியாளர் ஸ்டீபன் நீல் தரும் தகவல்களையும், பிரத்யேக படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் 125சிசி ஸ்கூட்டர்களுக்கான மவுசு அதிகரித்து வரும் இவ்வேளையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் புதிய ஸ்கூட்டரை களமிறக்க முடிவு செய்தது. இதற்காக, கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ டூயட் 125 என்ற பெயரில் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்த இருந்தது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அந்த கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் தற்போது ஹீரோ டெஸ்ட்டினி 125 என்ற பெயரில் சிறிய மாற்றங்களுடன் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய ஸ்கூட்டர் ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் LX மற்றும் VX ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹீரோ டூயட் ஸ்கூட்டரின் 110சிசி எஞ்சின் போர் செய்யப்பட்டு 125சிசி எஞ்சினாக மாற்றம் செய்யப்பட்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் இந்த புதிய ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹீரோ நிறுவனத்தின் முதல் ஐ3எஸ் என்ற ஐட்லிங் ஸ்டார்ட்- ஸ்டாப் நுட்பத்துடன் வரும் முதல் மாடலும் இதுதான். இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜர், வெளிப்புறத்தில் அமைந்த பெட்ரோல் டேங்க் மூடி, ரிமோட் கீ ஓபன், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் நோபுள் ரெட், செஸ்ட்நட் பிரான்ஸ், பாந்தர் பிளாக் மற்றும் சில்வர் ஒயிட் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எல்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.54,650 எக்ஸ்ஷோரூம் விலையிலும், விஎக்ஸ் மாடல் ரூ.57,500 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
All new Hero Destini 125 scooter has launched in India. Here are the key details in Tamil.
Story first published: Monday, October 22, 2018, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X