உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

உலகில் இதுவரை வேறு எந்த இரு சக்கர வாகன நிறுவனமும் படைக்காத புதிய சாதனை ஒன்றை, இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிகழ்த்தியுள்ளது.

உலகில் இதுவரை வேறு எந்த இரு சக்கர வாகன நிறுவனமும் படைக்காத புதிய சாதனை ஒன்றை, இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிகழ்த்தியுள்ளது. பிரம்மிக்க வைக்கும் அந்த உலக சாதனை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 46 சதவீத மார்க்கெட் ஷேரை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

இந்த சூழலில், புதிய உலக சாதனை ஒன்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை உலகின் வேறு எந்த நிறுவனமும் இதுவரை விற்பனை செய்தது கிடையாது. வரலாற்றில் முதல் முறையாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் விற்பனை செய்துள்ளது.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

அவ்வளவு ஏன்? உலகின் வேறு எந்த இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமும் ஒரே மாதத்தில் 7.5 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லையே இதுவரை எட்டியது கிடையாது. இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் முதல் முறையாக 7.5 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லையே எட்டியுள்ளது.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

இதுதவிர ஒரே மாதத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்தியிருக்கும் நிகழ்வு, நடப்பு நிதியாண்டில் 3 முறை உள்பட மொத்தம் 5வது முறையாக நிகழ்ந்துள்ளது.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல்-செப்டம்பர்), மொத்தம் 42 லட்சத்திற்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. இந்த சூழலில், பண்டிகை காலம் தொடங்கவுள்ளதால், ஹீரோ மோட்டோகார்ப் மேலும் பல சாதனைகளை படைக்கும் என நம்பலாம்.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்பிளெண்டர் மற்றும் பேஷன் ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களுக்கே வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களுக்கும் ஐந்து ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக புதிய பைக்குகளின் ஆன் ரோடு விலை உயர்ந்துள்ளது.

உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..

அப்படி இருந்தும் கூட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 7,69,138 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து உலக சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Hero MotoCorp Creates New World Record: Sold 7.69 Lakh Units In Single Month. Read in Tamil
Story first published: Wednesday, October 17, 2018, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X