பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக், 88,000 ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் லான்ச் செய்யப்பட்டது. தற்போது திடீரென எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலையை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1,900 ரூபாய் உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

எனவே இனி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் 89,900 ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்படும். எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலை உயர்வு குறித்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது, எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை கடந்த மாதம்தான் தொடங்கியது. ஆனால் அதற்குள்ளாகவே எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் திடீரென உயர்த்தி விட்டது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில், 199.6 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் 4.6 வினாடிகளை எடுத்துக்கொள்ளும். இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 114 கிலோ மீட்டர்கள்.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் இடம்பெற்றிருக்கும் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், எல்இடி பைலட் லேம்ப்ஸ், எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவற்றை முக்கிய அம்சங்களாக கூறலாம். இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் ஸ்போர்ட்டியாகவும், அக்ரஸீவ் ஆகவும் உள்ளது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

ஆனால் போட்டியாளர்களான கேடிஎம் டியூக் 200, பஜாஜ் பல்சர் என்எஸ் 200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி உள்ளிட்ட பைக்குகளுடன் ஒப்பிடுகையில், டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஆகிய 2 அம்சங்களிலும், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

முன்னதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்திகள் நேற்றுதான் (செப்.12) வெளியாயின. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கை, விராட் கோஹ்லிதான் ப்ரமோட் செய்யவுள்ளார்.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

இந்த சூழலில்தான் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்த அம்சம் ஆகும். இதனிடையே இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

இந்நிலையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலை உயர்ந்துள்ளது. ஆனால் சிறிய அளவில் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விற்பனை பாதிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

இதனிடையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்ததாக லான்ச் செய்யவுள்ள எக்ஸ்பல்ஸ் அட்வென்ஜர் பைக், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 199.6 சிசி இன்ஜின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படவுள்ளது.

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

ஆனால் ஆப் ரோடுக்கு ஏற்ற வகையில், எக்ஸ்பல்ஸ் அட்வென்ஜர் பைக் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர 200-300 சிசி செக்மெண்டில் புதிய பிரீமியம் பைக் ஒன்றை லான்ச் செய்யவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்...

English summary
Hero Xtreme 200R Price Increased by Rs 1,900. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X