இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் பிடித்துள்ளது. பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த ஸ்பிளெண்டரை இரண்டாம் இடத

By Balasubramanian

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் பிடித்துள்ளது. பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த ஸ்பிளெண்டரை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய ஆக்டிவா தொடர்ந்து முதல் இடத்தையே தக்க வைத்து வருகிறது.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

இந்தியர்கள் பலர் பைக்கில் இருந்து ஸ்கூட்டர் பக்கம் தங்கள் விருப்பத்தை திருப்பியுள்ளனர். இதனால் பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்கூட்டர் தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்த துவங்கியுள்ளது. இன்று பல ஸ்கூட்டர்கள் வந்துவிட்டாலும் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. பைக்கை பொருத்தவரை ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் தான் சிறந்த பைக்காக உள்ளது.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள வேரியண்ட்களான ஆக்டிவா ஐ, ஆக்டிவா 5ஜி, ஆக்டிவா 125 ஆகிய ஸ்கூட்டர்கள் மொத்தமாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 3.4 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

ஹீரோ ஸ்பிளெண்டரை பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.66 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை 9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அதே நேரத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் விற்பனை 17 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

ஆக்டிவா ஸ்கூட்டரின் வருகை இந்திய வாடிக்கையாளர்களின் மனதையே ஸ்கூட்டர் பக்கம் இழுத்து விட்டது என்றே கூறலாம். பைக் வைத்திருந்த அல்லது வாங்க நினைத்த பலர் ஆக்டிவா மீது உள்ள கவர்ச்சியாலும், அந்த பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்ற நன்மதிப்பாலும் ஸ்கூட்டர்களுக்கு மாறினர்.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

அதே நேரத்தில் இந்தியாவின் பெரும்பாலான ஊர்களில் முன்பு இருந்ததை போல தரம் இல்லாத ரோடுகள் தற்போது. பெரும்பாலான ஊர்களில் தெருக்களில் தார்/ சிமெண்ட் ரோடுகள் வந்துவிட்டது. இதனால் பலர் ஆட்டோகியர் வாகனங்களை தேர்வு செய்ததாகவும் சில ஆய்வுகளில் சொல்ப்படுகிறது.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

அதே நேரத்தில் பல ஆண்டுகளாக சிறந்த ரோடுவசதிகளுடன் இருக்கும் நகரங்களிலும் ஆட்டோ கியர் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சிறிய அளவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வசதி இருப்பது தான். பலர் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வர இந்த ரக வாகனம் பெரும் உதவியாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

அதே நேரத்தில் டிராப்பிக்கில் கியர் பைக்கை வைத்து கொண்டு ஒவ்வொரு கியராக மாற்றி கொண்டு இருப்பதற்கு பலர் எரிச்சலைடகின்றனர். அதன் காரணமாகவும் பலர் ஆட்டோகியர் ஸ்கூட்டர்களுக்கு மாறிவிட்டனர்.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

ஆதே நேரத்தில் நல்ல மைலேஜை விரும்புபவர்கள் ஆட்டோ கியர் ஸ்கூட்டர்களை விட ஸ்பிளெண்டர், ஸ்போர்ட், பிளாட்டினா, போன்ற பைக்குகளை விரும்புகின்றனர். குறைந்த சிசி பைக்காக இருந்தாலும் நல்ல மைலேஜ், மேலும் இது போன்ற பைக்குகள் ஆப்-ரோடு பயணத்திற்கும் ஏற்றதாகவும் உள்ளது.

இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்

ஆப்-ரோடு பயணங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த ரக பைக்குகளை தான் விரும்பி தேர்வு செய்கின்றனர். இந்த இரண்டு வாகனங்களும் ஒவ்வொரு விதத்தில் சிறந்ததாக அமைகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த இரண்டு பைக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்ற சிறந்த பைக் தான்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Honda Activa continues to be India’s best selling two wheeler; Hero Splendor second. Read in Tamil
Story first published: Tuesday, May 22, 2018, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X