இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக்காக ஹோண்டா சிபி ஷைன் உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் அதிகம் விற்பனை செய்யப்படும் டூவீலர் மற்றும் ஸ்கூட்டர் என்ற பெருமைகளை ஆக்டிவா தன் கைவசம் வைத்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக்காக ஹோண்டா சிபி ஷைன் உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் அதிகம் விற்பனை செய்யப்படும் டூவீலர் மற்றும் ஸ்கூட்டர் என்ற பெருமைகளை ஹோண்டா ஆக்டிவா தன் கைவசம் வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooter India) நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்று சிபி ஷைன். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹோண்டா சிபி ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

இதன்மூலம் இந்திய மார்க்கெட்டின் 125 சிசி பைக் செக்மெண்டில், ஹோண்டா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இந்திய மார்க்கெட்டின் 125 சிசி பைக் செக்மெண்டில் ஹோண்டா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 52 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,08,790 சிபி ஷைன் மற்றும் சிபி ஷைன் எஸ்பி பைக்குகளை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 94,748 சிபி ஷைன், சிபி ஷைன் எஸ்பி பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

இதன்மூலம் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஹோண்டா சிபி ஷைன் மற்றும் சிபி ஷைன் எஸ்பி ஆகிய பைக்குகளின் விற்பனை 14.82 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

ஒரே மாதத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹோண்டா சிபி ஷைன் பைக்குகள் விற்பனையாகியிருப்பது இது 3வது முறையாகும். இதன்மூலம் 125 சிசி செக்மெண்ட்டில், 1 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை 3 முறை எட்டிய ஒரே பைக் சிபி ஷைன்தான் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

எனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக்காக சிபி ஷைன் உருவெடுத்துள்ளது. இதுதவிர இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டூவீலர் மற்றும் ஸ்கூட்டர் என்ற பெருமைகளை ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவாதான் கைவசம் வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 டூவீலர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்தான் முதல் இடத்தை கைப்பற்றியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3,10,851 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

இதன்மூலம் ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த டூவீலர்கள் விற்பனையானது 14 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 4,95,312 டூவீலர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

ஆனால் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 4,32,984 ஹோண்டா டூவீலர்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. தற்போது இந்த எண்ணிக்கையானது 4,95,312ஆக அதிகரித்திருப்பதன் மூலம், ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த டூவீலர்கள் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

இதனிடையே ஹோண்டா சிபி ஷைன் பைக்கில், 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10.3 பிஎச்பி பவர் மற்றும் 10.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் இதுதான்.. ஹீரோவுக்கு கடும் சவால் அளிக்கும் ஹோண்டா

இந்திய மார்க்கெட்டில் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 60 லட்சத்திற்கும் மேற்பட்ட சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹோண்டா சிபி ஷைன் பைக் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Honda CB Shine Achieves New Milestone. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X