ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

முன்னாள் தோஸ்த்துகளான ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தற்போது டிஷ்யூம்...டிஷ்யூம் என சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில் ஹீரோ நிறுவனத்தின் குரல் வளையையே ஹோண்டா நிறுவனம் பிடித்து விட்டது.

By Arun

முன்னாள் தோஸ்த்துகளான ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தற்போது டிஷ்யூம்...டிஷ்யூம் என சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில் ஹீரோ நிறுவனத்தின் குரல் வளையையே ஹோண்டா நிறுவனம் பிடித்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான். புதிய வரலாறு உருவாகி கொண்டிருக்கிறது. அது என்ன? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் விரிவாக காணலாம்.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

முஸ்தபா...முஸ்தபா...

இந்திய நிறுவனமான ஹீரோவும், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும் ஒரு காலத்தில் நகமும், சதையுமாக வலம் வந்தன. இரு நிறுவனங்களும் முஸ்தபா...முஸ்தபா...என பாட்டு பாடாதது மட்டும்தான் பாக்கி. ஏனெனில் அவர்களின் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க் அவுட் ஆனது. ஹீரோ ஹோண்டா கூட்டணியில் வெளிவந்த சிடி 100, ஸ்பௌண்டர், ஸ்பௌண்டர் ப்ளஸ், பேஷன், பேஷன் ப்ளஸ், சிடி டான், சிடி டீலக்ஸ் உள்ளிட்ட டூவீலர்கள் விற்பனையில் சக்கை போடு போட்டன.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

மலைடா...அண்ணாமலை...!

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே அண்ணாமலை பட பாணியில் பின்னாளில் மன கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிந்து விட்டன. இதன்பின் ஹீரோவும், ஹோண்டாவும் தனித்தனியாக தங்களின் வாகனங்களை போட்டி போட்டு விற்பனை செய்து வருகின்றன.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

மிகப்பெரிய சந்தையை பிடிக்க போட்டி

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன விற்பனை சந்தையாக திகழ்வது நமது இந்தியாதான். அத்தகைய இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோதான் இன்றவுளம் உள்ளது. ஆனால் தனது முன்னாள் பார்ட்னரை பின்னுக்கு தள்ளி அந்த அரியணையின் தன்னை அமர்த்தி கொள்ள ஹோண்டா விரும்புகிறது.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

மல்லுக்கட்டு

இதற்காக தனது இரு சக்கர வாகனங்களில் ஹோண்டா பல புதுமைகளை புகுத்தி வருகிறது. ஆனாலும் ஹீரோவும் முதலிடத்தை விட்டு கொடுக்காமல், ஹோண்டாவுடன் விடாப்பிடியாக மல்லுக்கட்டி வருகிறது.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

குரல் வளையை பிடித்தது ஹோண்டா

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஹீரோவின் குரல் வளையையே ஹோண்டா பிடித்து விட்டது. இன்னும் சற்று முன்னேறினால், ஹீரோவை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்ற இடத்தை ஹோண்டா பிடிக்கும்.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

புதிய வரலாறு

அதுதான் ஹோண்டா நிறுவனத்தின் லட்சியமும் கூட. அவ்வாறு நடப்பது கடினம் என்றே கருதப்பட்டாலும், அதற்கான சாத்திய கூறுகள் தென்பட தொடங்கி விட்டன. பின்வரும் புள்ளி விபரங்களின் மூலம் நாம் அதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஒருவேளை ஹோண்டா நிறுவனம் ஹீரோவை பின்னுக்கு தள்ளும்பட்சத்தில் அது புதிய வரலாறாக இருக்கும்.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

போட்டி போட்டு விற்பனை

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஹீரோ நிறுவனம் 6,94,022 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் ஹீரோவை விடாமல் துரத்தும் ஹோண்டா நிறுவனம், இதே காலகட்டத்தில் 6,81,888 இரு சக்கர வாகனங்களை விற்று தீர்த்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் இவ்வளவு இரு சக்கர வாகனங்களை விற்பது இதுவே முதல் முறை.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

கடந்தாண்டு ஏப்ரலுடன் ஒப்பீடு

இதே கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹீரோ நிறுவனம் 5,95,706 இரு சக்கர வாகனங்களையும், ஹோண்டா நிறுவனம் 5,78,777 இரு சக்கர வாகனங்களையும் விற்பனை செய்திருந்தன.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

வித்தியாசம் வெகுவாக குறைந்தது

இந்த வகையில் பார்த்தால், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நிறுவனங்களுக்கும் இடையே இருந்த இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கையின் வித்தியாசம் 16,929. அது தற்போயை ஏப்ரல் மாதத்தில் வெறும் 12,134ஆக குறைந்துள்ளது. அதனால்தான் ஹீரோவின் குரல் வளையை ஹோண்டா பிடித்து விட்டது, இன்னும் கொஞ்சம்தான் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

உள்நாட்டு விற்பனையிலும் வளர்ச்சி

இந்த எண்கள் அனைத்தும் இரு நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி என ஒருங்கிணைந்த விற்பனை நிலவரங்களை வெளிக்காட்டுகின்றன. இந்த வகையில் ஹோண்டா மட்டும் தனது உள்நாட்டு விற்பனை விவரத்தையும் சேர்த்தே வெளியிட்டுள்ளது. இதன்படி உள்நாட்டில் மட்டும் 6,35,811 இரு சக்கர வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் உள்நாட்டு விற்பனையிலும் 15 சதவீத வளர்ச்சியை ஹோண்டா அடைந்திருக்கிறது.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

ஏற்றுமதியிலும் அபாரம்

அதாவது ஹோண்டா நிறுவனம் மொத்தம் விற்பனை செய்த 6,81,888 இரு சக்கர வாகனங்களில் இருந்து உள்நாட்டில் மட்டும் விற்பனையான 6,35,811 இரு சக்கர வாகனங்களை கழித்து விட்டு பாருங்கள். அதாவது 46,077 இரு சக்கர வாகனங்கள். இவைதான் ஹோண்டா ஏற்றுமதி செய்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை. இவ்வளவு இரு சக்கர வாகனங்களை ஹோண்டா ஏற்றுமதி செய்திருப்பதும் இதுவே முதல் முறை.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

மறைக்கிறதா ஹீரோ?

ஆனால் ஹீரோ நிறுவனம் இவ்வளவு துல்லியமாக புள்ளி விபரங்களை வெளியிடவில்லை. ஒரு சில காரணங்களுக்காக ஹீரோ அதனை மறைக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் அதன் உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கையானது 6.65 லட்சத்தில் இருந்து 6.70 லட்சமாக இருக்கலாம் என தெரிகிறது.

ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...

எக்ஸ் பல்ஸை களமிறக்குவது எப்போது?

ஹோண்டா நிறுவனத்தின் கடும் போட்டியை சமாளிக்க சில புதிய இரு சக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் இந்தாண்டில் லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமானது ஹீரோ எக்ஸ் பல்ஸ். இதுதான் இரு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் அக்டோபர் மாதம் லான்ச் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
History in the Making: Only 12,000 Units Separate Honda & Hero in April. read in tamil.
Story first published: Thursday, May 10, 2018, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X