உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

உலகிலேயே குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஹம்மிங்பேர்டு என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 25 கி.மீ வேகத்தில் செல்லும், அதே போல் ஒரே சார்ஜில் 30 கி.மீ

By Balasubramanian

உலகிலேயே குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஹம்மிங்பேர்டு என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 25 கி.மீ வேகத்தில் செல்லும், அதே போல் ஒரே சார்ஜில் 30 கி.மீ மேல் பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சைக்கிள் போலவே தோற்றமளிக்கும் இது ஸ்மார்ட் பைக்காகவும் உள்ளது.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

பிரிட்டன் நாட்டை சேர்ந்த சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமான ஹம்மிங்பேர்டு என்னும் நிறுவனம் தற்போது உலகிலேயே குறைந்தஎடை கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்துள்ளது.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த பைக்கின் எடை மொத்தமே 10.3 கிலோ தான். இது தான் மார்கெட்டில் உள்ள குறைந்த விலையில் உள்ள மடித்து வைக்கும் வகையிலான இ-பைக். இந்நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு குறைந்த எடை பைக்காக 6.9 கிலோ எடை கொண்ட சைக்கிளை அறிமுகப்படுத்தியது அந்த பைக் தான் உலகிலேயே குறைந்த எடை கொண்ட சைக்கிளாக கருதப்படுகிறது.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

தற்போது அதே ஹம்மிங்பேர்டு நிறுவனம் பேட்டரி பவர் உடன் கூடிய மோட்டாருடன் பொருத்தப்பட்ட பைக் அறிமுகமாகியது. இந்தை பைக் 250 வாட்ஸ் பேட்டரி பவர் கொண்டா மோட்டாரில்இங்குகிறது. இந்த பைக் தான் குறைந்த பவர் அதிக எடையை இழந்து செல்லும் பைக்காவும் கருதப்படுகிறது.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த பைக்கில் 160வாட்ஸ் லித்தியம் பேட்டரி, பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 25 கி.மீ. வேகத்தில் பயணிக்ககூடியது. மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏற்றினால 30 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இது குறித்து இந்த பைக்கை டிசைன் செய்த பீட்டர் கூறுகையில் : " கடந்தாண்டு இந்த பைக்கை தயாரிக்க திட்டமிட்டோம். அப்பொழுது டிசைன் குறித்த எந்த யோசனையும் இல்லை. முடிந்தளவதிற்கு குறைந்த எடையில் எலெகட்ரிக் பைக்கை தயாரிக்க வேண்டும் என நினைத்தோம்.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

வெற்றிகரமான 10.3 கிலோவிலேயே தற்போது தயாரித்து முடித்துள்ளோம். தெருக்களில் பயணிப்பதற்கும், உள்ளூர்களில் பயணிப்பதற்கும் இது வசதியாக இருக்கும். எங்கள் நிறுவனத்தில் இருந்து எனக்கு எல்லா சுதந்திரமும் தரப்பட்டது. மார்கெட்டில் இருக்கும் ஸ்கூட்டர் போல் தான் இருக்க வேண்டும் என்பதில்லை மாறாக எப்படி வேண்டும்மானும் டிசைன் செய்து கொள்ளுங்கள் என கூறினர். அதனால் தான் என்னால் இதை சாதிக்க முடிந்தது. " என கூறினார்.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த ஹம்மிங்பேர்டு பைக்கில் பின்பக்க வீல் 180 மிமீ விட்டமும், 120 மிமீ. அடர்த்தியும் கொண்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 2 மணி நேரம் 30 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகி விடும். பயணத்தின் போது எக்ஸ்ட்ரா பேட்டரியை எடுத்து செல்லலாமா வேண்டாமா என்பது பயணிப்பவரின் விருப்பம் தான்.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரில் இருக்கும் சென்சார், ரைடருக்கு எவ்வளவு பவர் தேவைப்படும் என்பதை உணர்ந்து தானான பவரை மாற்றி வழங்கும். இந்த பைக்கில் செல்லும் போது மோட்டாரை செயல்படவைக்க பைக்கில் உள்ள பெடலை மிதித்து 8 கி.மீ. வேகம்த்தில் செல்ல வேண்டும். அதன் பின் ரிவர்சில் பெடலை மூன்று முறை சுற்றினால் மோட்டார் ஸ்டார்ட் ஆகி விடும்.

உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

மேலும் இந்த ஹேம்மிங் பேர்டு எலெக்ட்ரிக் பைக்கில் ப்ளூடூத் மூலம் ரைடர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை பிட் ரைடு ஆப் மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். அதன் மூலம் அந்தஆப் ஆன்லைன் டயகனசிஸ், பைக்கின் திசையை பொருத்த நேவிகேஷன், மொபிலிட்டி, மற்றும் முக்கிய அம்சமாக உங்கள் பைக் திருடு போனால் பைக்கின் பின் வீல் சுழற்றாமல் இருக்கும் வகையிலான லாக் ஆகிய வசதிகள் இருக்கிறது.

Most Read Articles
English summary
world lightest folding electric scooter is launched by british company. Read in Tamil
Story first published: Friday, July 13, 2018, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X