பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையிலான ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்கப்பட இருக்கிறது. ஹஸ்க்வர்னா விட்பிலின் 401 மற்றும் ஸவர்ட்பிலின் 401 ஆகிய பைக்குகளின் உற்பத்தி இந்த ஆண்

By Saravana Rajan

கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையிலான ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்கப்பட இருக்கிறது. இதுகுறித்த முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

ஸ்வீடனை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் நூற்றாண்டு பாரம்பரியம் மிக்கது. இந்த நிறுவனத்தை கேடிஎம் நிறுவனத்தின் வாயிலாக பஜாஜ் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தி ஆஸ்திரியாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றப்பட இருக்கிறது.

பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் ஆலையில் விரைவில் ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தி துவங்கப்பபட இருக்கிறது. கேடிஎம் பைக்குகள் உற்பத்தி செய்யப்படும் அதே ஆலையில்தான் ஹஸ்க்வர்னா பைக்குகளுக்கான உற்பத்தி பிரிவும் செயல்பட இருக்கிறது.

பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

இங்கு உற்பத்தி செய்யப்படும் பைக்குகள் இந்தியாவிற்கு மட்டுமின்றி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கான செலவீனம் மிக குறைவாக இருப்பதால், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

முதல் கட்டமாக ஹஸ்க்வர்னா விட்பிலின் 401 மற்றும் ஸ்வர்ட்பிலின் 401 ஆகிய மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் துவங்கப்பட இருக்கிறது. இந்த இரண்டு பைக்குகளும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதைத்தொடர்ந்து விட்பிலின் 701 பைக் மாடலும் இந்தியா வர இருக்கிறது.

பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

ஹஸ்க்வர்னா விட்பிலின் 401 மற்றும் ஸவர்ட்பிலின் 401 ஆகிய இரண்டு பைக் மாடல்களுமே கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. டிசைனில் மட்டுமே வேறுபடுகின்றன.

பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

இந்த பைக்கில் இருக்கும் 373சிசி எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் தவிர்த்து, சேஸீ, பிரேக் சிஸ்டம், சஸ்பென்ஷன் போன்றவற்றையும் கேடிஎம் 390 பைக்குகளிலிருந்து பகிர்ந்து கொண்டுள்ளன.

பஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!!

கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 பைக் மாடல்களுக்கு இணையான விலையில் இந்த ஹஸ்க்வர்னா விட்பிலின் 401 மற்றும் ஸ்வர்ட்பிலின் 401 மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு எதிப்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
KTM owned, Husqvarna Motorcycles have announced its entry into the Indian market. The company will roll out the Vitpilen and Swartpilen 401 as their first motorcycles for India, sometime in 2019.
Story first published: Saturday, June 30, 2018, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X