இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

By Saravana Rajan

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிமிடேட் எடிசன் மாடலாக சொற்ப எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய இந்தியன் மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

இந்தியன் சீஃப்டெயின் மோட்டார்சைக்கிள் மாடல்களில் அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடலாக இந்த சீஃப்டெயின் எலைட் மாடல் வந்துள்ளது. உலக அளவில் மொத்தமாக 350 மோட்டார்சைக்கிள் மட்டுமே விற்பனைக்கு செல்ல இருக்கின்றன. அதில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிளுக்கு ரூ.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்ப்டடு இருக்கிறது. சாதாரண சீஃப்டெயின் மோட்டார்சைக்கிளில் பல கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து இதனை ஸ்பெஷல் மாடலாக உருவாக்கி இருக்கின்றனர்.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த மோட்டார்சைக்கிள் பிளாக் ஹில்ஸ் சில்வர் என்ற பிரத்யேக வண்ணத்தில் இருக்கிறது. மார்பிள் சில்லுகள் ஆங்காங்கே பதிக்கப்பட்டு அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. ஒரு மோட்டார்சைக்கிளுக்கு மார்பிள் கற் சில்லுகளை பதிப்பதற்கு 25 மணிநேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும், ஒவ்வொரு மோட்டார்சைக்கிளிலும் வெவ்வேறு வகையில் இந்த மார்பிள் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

விசேஷ லெதர் இருக்கைகள், 7 அங்குல ரைடு கமாண்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் சிஸ்டம், 200 வாட் பிரிமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இந்த மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றுள்ளது.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

புஷ் பட்டன் பவர் விண்ட் ஷீல்டு, ரிமோட் லாக்கிங் ஹார்டு வெதர் புரூப் சேடில் பைகள், பிரிமியம் லெதர் இருக்கைகள், அலுமினிய ஃபுட்போர்டுகள், பினாக்கிள் மிரர்கள், டியூவல் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் கிராஸ்ஓவர் பைப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிளில் 1811சிசி தண்டர்ஸ்ட்ரோக் 111வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 161.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சாதாரண மாடலைவிட 11.6என்எம் டார்க் திறனை கூடுதலாக வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 119மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 114மிமீ மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றிருக்கிறது. முன்புறத்தில் 300மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 300மிமீ சிங்கிள் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 16 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டன்லப் டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிள் 338 கிலோல எடை கொண்டது.

இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய இந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிளானது ஹோண்டா கோல்டு விங் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் கிளைடு ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் போட்டி போடும். இந்தியன் ரோடு மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளை தொடர்ந்து இரண்டாவது லிமிடேட் எடிசன் மாடலாக இது விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Indian Motorcycles has launched their new top-of-the-line model in the Chieftain range, the Chieftain Elite in India. The Indian Chieftain Elite is limited to 350 units globally and is priced at Rs 38 lakh, ex-showroom (India).
Story first published: Tuesday, August 14, 2018, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X