டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்.. என்ன இருந்தாலும் தல போல வருமா?

உலகின் அரிய பைக்குகளில் ஒன்றாக திகழும் டுகாட்டி டியாவெல் சூப்பர் பைக்கை சாலையில் ஓட்டி வந்த ஒருவரை போலீசார் நிறுத்தினர்.

By Arun

உலகின் அரிய பைக்குகளில் ஒன்றாக திகழும் டுகாட்டி டியாவெல் சூப்பர் பைக்கை சாலையில் ஓட்டி வந்த ஒருவரை போலீசார் நிறுத்தினர். இதன்பின் என்ன நடந்தது? என்பது தொடர்பான சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

இந்திய சாலைகளில், மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை பார்ப்பது என்பதே அபூர்வம். அதிசயமாக என்றாவது ஒரு நாள்தான் சூப்பர் பைக்குகள் சாலையில் தென்படும். அப்படிப்பட்ட சூப்பர் பைக்குகள் மீது பேரார்வம் கொண்டவர் ஜோயஹர் அகமது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

டுகாட்டி டியாவெல் கார்பன் பைக்கை, ஜோயஹர் அகமது வைத்துள்ளார். சமீபத்தில் ஐதராபாத் நகரை, தனது டுகாட்டி டியாவெல் கார்பன் பைக் மூலம் ஜோயஹர் அகமது கடந்துள்ளார். அப்போது ஹூரோ எக்ஸ்ட்ரீம் பைக்கில் ரோந்து வந்த 2 போலீசார், ஜோயஹர் அகமதுவை நிறுத்தியுள்ளனர்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுவும் சூப்பர் பைக்குகளை ஓட்டி வருபவர்களிடம் சொல்லவே வேண்டாம். சூப்பர் பைக் ஓட்டி வருபவர்கள் கண்டிப்பாக விதிகளை மீறுகின்றனர் என்பதே போலீசாரின் எண்ணமாக உள்ளது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

சூப்பர் பைக்குகள் பற்றி, போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாக உள்ளது. உண்மையில் ஒரு சிலர் விதிகளை மீறினாலும் கூட, சூப்பர் பைக் வைத்திருக்கும் அனைவரையும் பொத்தாம் பொதுவாக அப்படி குற்றஞ்சாட்டி விட முடியாது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

நிலைமை இப்படி இருக்கையில், ஐதராபாத்தில் நடந்த கதையே வேறு. டுகாட்டி டியாவெல் கார்பன் பைக்கில் சென்ற ஜோயஹர் அகமதுவை நிறுத்திய 2 போலீசாரும், வேறு விதமாக நடந்து கொண்டனர். முதலில் டுகாட்டி டியாவெல் கார்பன் பைக்கின் விலை என்ன? என்று ஜோயஹர் அகமதுவிடம் அவர்கள் கேட்டனர்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

இதற்கு 18 லட்ச ரூபாய் என ஜோயஹர் அகமது பதில் அளித்தார். டுகாட்டி டியாவெல் கார்பன் பைக்கை சில வினாடிகள் உன்னிப்பாக கவனித்த 2 போலீசாரும், அந்த பைக்கின் பால் ஈர்க்கப்பட்டு விட்டனர். பின்னர் 2 போலீசாரும் அந்த பைக்கில் அமர்ந்து, கெத்தாக சில புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

அவர்களில் ஒரு போலீஸ்காரர், டுகாட்டி டியாவெல் பைக்கில் சிறிய ரெய்டும் சென்றார். அதே சாலையில் சிறிது தூரம் பயணித்த பின் அவர் திரும்ப வந்து விட்டார். பின்னர் இப்போ ஹேப்பி அண்ணாச்சி என கூறி விட்டு, பைக்கை மீண்டும் ஜோயஹர் அகமதுவிடம் ஒப்படைத்து விட்டார்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

சூப்பர் பைக்குகளை ஓட்டி வருபவர்களிடம் சில போலீஸ்காரர்கள் அத்துமீறுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஒரு சில தன்மையான போலீஸ்காரர்களும் இருக்கவே செய்கின்றனர் என இந்த சம்பவம் தொடர்பாக ஜோயஹர் அகமது பெருமிதம் பொங்க கூறியுள்ளார்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

ஒருவேளை போலீஸ்காரர்கள் உங்களை நிறுத்தி கேள்வி எழுப்பினால், அவர்களிடம் பண்பாக நடந்து கொள்வதுடன், அவர்களின் பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் இதர வாகன ஓட்டிகளை ஜோயஹர் அகமது கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜோயஹர் அகமது வெளியிட்ட வீடியோவை கீழே காணலாம்.

ஆரம்பம் படத்தின் வங்கி கொள்ளை காட்சியில் நம்ம தல அஜீத் டுகாட்டி டியாவெல் பைக்கைதான் ஓட்டி வருவார். இந்த பைக்கின் மொத்த எடை 200 கிலோவுக்கும் மேல். எனவே சூப்பர் பைக்குகளை ஓட்டுவதில் கை தேர்ந்த நிபுணர்களால் மட்டுமே டுகாட்டி டியாவெல் பைக்கை சிட்டி ரோடுகளில் ஓட்ட முடியும்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

தல அஜீத் மோட்டார் பந்தய வீரர் என்பதால் பிரச்னையில்லை. இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம். சூப்பர் பைக்குகளை ஓட்டுவது என்பது அவருக்கு கை வந்த கலை. ஆனால் ஜோயஹர் அகமதுவிடம் டுகாட்டி டியாவெல் பைக்கை வாங்கி ஓட்டிய போலீஸ்காரர் சற்றே தடுமாறியதை வீடியோவில் காண முடிந்தது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

இத்தனைக்கும் அவர் ஹெல்மெட் அணியவில்லை என்ற விஷயத்தையும் இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

ஆனால் வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் ஹெல்மெட் அணியவில்லை. முன்னதாக ஹூரோ எக்ஸ்ட்ரீம் பைக்கில் வந்தபோதும் கூட இரண்டு போலீஸ்காரர்களும் ஹெல்மெட் அணியவில்லை. திரைப்படம்தான் என்றாலும் கூட அஜீத் ஹெல்மெட் அணிந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான போலீசாருக்கு, ரோந்து பணிகளுக்காக சாதாரண பைக்குகளே வழங்கப்பட்டுள்ளன. எனினும் குஜராத் மற்றும் கொல்கட்டா போலீசாரிடம் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகள் உள்ளன.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

ஆனால் அந்த பைக்குகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. விஐபி கான்வாய்களில் மட்டுமே அந்த பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டுகாட்டி டியாவெல் பைக்கிற்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

உலகில் உள்ள மிகவும் அரிதான பைக்குகளில் டுகாட்டி டியாவெல்லும் ஒன்று. இதனால் இந்திய சாலைகளில் இந்த பைக்கை பார்ப்பது என்பதே அரிதான விஷயம்தான். இந்த பைக்கில், 1,198 சிசி, லிக்விட் கூல்டு, எல்-டிவின் (L-Twin) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,250 ஆர்பிஎம்மில் 162 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 130.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை இந்த பைக் பெற்றுள்ளது.

டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்! என்னதான் இருந்தாலும் தல போல வருமா?

இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 270 கிலோ மீட்டர்கள். டுகாட்டி டியாவெல் பைக், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.83 வினாடிகளில் எட்டி விடும். எடுத்த எடுப்பிலேயே சீறிப்பாயும் திறன் டுகாட்டி டியாவெல் பைக்கிற்கு உள்ளது.

Source: Zohair Ahmed

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Cop Enjoys Ducati Ride. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X