நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் இன்று திறக்கப்பட்டது. இதில், விசேஷம் என்னவென்றால், இதன்மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு வித்தியாசமான முறையில் ஒரு செக் வைக்கப்பட்டுள்ளதுதான்.

1970, 80 கால கட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஜாவா பைக்குகளின் உற்பத்தி இடையில் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டது. இதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாவா பைக்குகள் இந்தியாவில் ரீ லான்ச் செய்யப்பட்டன.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபர் அனுபம் தரேஜா, ரியல் எஸ்டேட் அதிபர் போமன் இரானி ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து தொடங்கியுள்ள கிளாசிக் லெஜென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் முயற்சியால்தான் ஜாவா பைக்குகள் இந்தியாவிற்கு மீண்டும் வந்தன.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

தற்போது ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று பைக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டபோது, டிசம்பர் 5ம் தேதிக்குள்ளாக ஜாவா டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

சற்றே தாமதமாக இந்தியாவின் முதல் ஜாவா டீலர்ஷிப்கள் இன்று (டிசம்பர் 15) திறக்கப்பட்டுள்ளன. அதுவும் இரண்டு டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டிருப்பது, ஜாவா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

இந்தியாவின் முதல் ஜாவா டீலர்ஷிப் அமையப்பெற்ற நகரம் என்ற பெருமையை புனே பெறுகிறது. புனேவின் புறநகர் பகுதிகளான பனேர் மற்றும் சின்ச்வாத் ஆகிய இடங்களில் ஜாவா டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

இந்த டீலர்ஷிப்களின் பெயர் சக்தி ஆட்டோமொபைல்ஸ் மற்றும் என்எஸ்ஜி ஜாவா. இதில், பனேரில் உள்ள ஜாவா டீலர்ஷிப்பானது, மெயின் ரோட்டிற்கு அருகிலேயே உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், அதே கட்டிடத்தில் ராயல் என்பீல்டு டீலர்ஷிப்பும் அமைந்திருப்பதுதான். ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களை திறக்க வேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

இதன்மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு செக் வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களை திறக்க திட்டமிடப்பட்டிருப்பது தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் ஏற்கனவே செய்தியும் வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

இதனிடையே Road Side Assistance சேவையையும் ஜாவா டீலர்ஷிப் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சேவையில் ஈடுபடும் வேனிற்கு, ஜாவாவின் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

டிசம்பர் மாதம் முடிவதற்குள்ளாக 60 ஜாவா டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக இந்த எண்ணிக்கை 105ஆக உயர்த்தப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

இதனிடையே ஜாவா 42 பைக் ரூ.1.55 லட்சம், ஜாவா பைக் ரூ.1.64 லட்சம், ஜாவா பெராக் பைக் ரூ.1.89 லட்சம் என்ற ஆரம்ப விலைகளில் (எக்ஸ் ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாகதான் ஜாவா பைக்குகள் களமிறக்கப்பட்டுள்ளன.

நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...

இதனால் வருங்காலங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கணிசமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனைக்குதான் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
India’s First Ever Jawa Dealerships Opened In Pune. Read in Tamil
Story first published: Saturday, December 15, 2018, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X