பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆகியுள்ள ஜாவா கொடுத்த முதல் அடியிலேயே, ராயல் என்பீல்டு கோமா நிலைக்கு சென்றுள்ளது. இப்படி ஒரு அதிர்ச்சியை ராயல் என்பீல்டு நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.

1970, 80 கால கட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பைக்குகளில் ஒன்று ஜாவா. ஆனால் இடையில் ஜாவா பைக்குகளின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் ஜாவா பைக் ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர்.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

எனினும் ஜாவா பைக்குகள் மீண்டும் ஒரு நாள் இந்தியாவிற்கு திரும்ப வந்து, மார்க்கெட்டை கலக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜாவா பைக்குகள் தற்போது மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளன.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்... இல்லை... இல்லை... ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தற்போது 3 புதிய ஜாவா பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் என்பதை காட்டிலும் ரசிகர்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 புதிய பைக்குகளுக்கு, ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜாவா பெராக் பைக் மட்டும், 2019ம் ஆண்டு ஜூன் மாதம்தான் விற்பனைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபர் அனுபம் தரேஜா, ரியல் எஸ்டேட் அதிபர் போமன் இரானி ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து தொடங்கியுள்ள கிளாசிக் லெஜென்ட்ஸ் என்ற நிறுவனம்தான், ஜாவா பைக்குகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

ஜாவா பைக்குகள் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பி வந்ததால், அதன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இன்று வரை இந்திய மார்க்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் ராயல் என்பீல்டிற்கு இனிதான் சோதனை காலம்.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி போட்டி இல்லை என்பதால்தான், மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தால் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் இன்று அதற்கு போட்டி வந்து விட்டது. அதுவும் எதிர்த்து நிற்பது ஜாவா எனும்போது போட்டி கடுமையாகதான் இருக்கும்.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

எனவேதான் ராயல் என்பீல்டு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய 2 பைக்குகளும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன. எனவே வருங்காலங்களில் கிளாசிக் 350 பைக்கின் விற்பனை வெகுவாக சரியும் என கூறப்படுகிறது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

முதற்கட்டமாக மும்பை, புனே, டெல்லி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில், ஜாவா பைக்குகளுக்கான டீலர்ஷிப்கள் திறக்கப்படவுள்ளன. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக இந்த டீலர்ஷிப்கள் செயல்பாட்டிற்கு வந்து விடும்.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

இதன்பின் இரண்டாம் கட்டமாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஜாவா மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப்கள் திறக்கப்படுகின்றன. இந்த டீலர்ஷிப்கள் வரும் ஜனவரி மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

ஆக மொத்தத்தில் வரும் ஜனவரி மாதத்திற்கு பின்பாக நாடு முழுவதும் உள்ள ஜாவா டீலர்ஷிப்களில் இருந்து பைக்குகள் டெலிவரி செய்யும் பணிகள் பரவலாக தொடங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது. இதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

எனவே ராயல் என்பீல்டு பைக் வாங்க வேண்டும் என முடிவு செய்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள ஜாவா பைக்குகளுக்காக தற்போது காத்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

இதனால் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை குறைய தொடங்கியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலமாகதான், அதன் விற்பனை சரிவடைய தொடங்கியுள்ள தகவல் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக 70,126 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையானது, 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 65,744 ஆக சரிவடைந்துள்ளது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை சுமார் 6 சதவீதம் என்கிற அளவுக்கு திடீர் சரிவை சந்தித்துள்ளது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

இதற்கு ஜாவாதான் மிக முக்கியமான காரணம். ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கடந்த நவம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஜனவரி இறுதிக்கு பின்பாக ஜாவா பைக் டெலிவரி பரவலாக்கப்பட்டு விடும்.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

இதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், ராயல் என்பீல்டு வாங்க வேண்டும் என்ற முடிவில் இருந்தவர்கள், தற்போது அந்த முடிவை கைவிட்டு விட்டு, ஜாவா பைக்குகளுக்கு காத்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகதான் ராயல் என்பீல்டு விற்பனை சரிவடைந்திருக்கும் என்பது வல்லுனர்களின் கருத்து.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் 67,776 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 65,026ஆக குறைந்துள்ளது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

உள்நாட்டு விற்பனை என்ற அளவில் பார்த்தால், 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் சுமார் 4 சதவீதம் என்கிற அளவிற்கு திடீர் சரிவை சந்தித்துள்ளது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

அதே நேரத்தில் உள்நாட்டு விற்பனையை போல் ஏற்றுமதியும் சரிவை சந்தித்திருப்பது, ராயல் என்பீல்டு நிறுவனத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனமானது, 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 2,350 பைக்குகளை ஏற்றுமதி செய்திருந்தது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

ஆனால் இந்த எண்ணிக்கையானது 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 718ஆக குறைந்துள்ளது. இது 69 சதவீத வீழ்ச்சி என்பதால், ராயல் என்பீல்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஜாவாவின் வருகையால் வீழ்ச்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஆரம்பத்திலேயே மிகப்பெரிய வீழ்ச்சி என்பதுதான் அதிர்ச்சிக்கு காரணம்.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், உள்நாடு மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் சேர்த்து ராயல் என்பீல்டு விற்பனை செய்த பைக்குகளின் மொத்த எண்ணிக்கை 70,126. இந்த எண்ணிக்கைதான் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 65,744 ஆக குறைந்துள்ளது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

'கண்ணா இது சும்மா ட்ரெய்லர்தான்... நீ இன்னும் மெயின் பிக்சர் பாக்கலியே' என ராயல் என்பீல்டை பார்த்து ஜாவா கேட்பது போல் இது உள்ளது. ஆரம்பத்திலேயே இவ்வளவு வீழ்ச்சி என்றால், வருங்காலங்களில் ராயல் என்பீல்டு பெரும் சரிவை சந்திக்கும் என கூறப்படுகிறது.

பாட்ஷா ஸ்டைலில் ரீ என்ட்ரி ஆன ஜாவா கொடுத்த முதல் அடி இதுதான்... கோமா நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு

ஏனெனில் ராயல் என்பீல்டை அடியோடு காலி செய்ய இன்னும் பல திட்டங்களை ஜாவா தன் கைவசம் வைத்துள்ளது. ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களையும் திறப்பது அதில் ஒன்று. இது குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Jawa Effect: Royal Enfield Sales Down 6 Percent To 65,744 Units In 2018 November. Read in Tamil
Story first published: Wednesday, December 5, 2018, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X