ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் ரொம்ப பிடிக்குமாம்…!

ஜாவா பைக்குகள் இந்திய மார்கெட்டை கலக்க மீண்டும் அறிமுகமாகியுள்ளது. 1970களில் பலரின் கனவு பைக்குகளாக இந்த பைக் இருந்தது. இன்றும் பழைய மாடல் ஜாவா பைக்குகளை முறையாக பராமரித்து வைத்திருப்பவர்களும் இருக்கி

ஜாவா பைக்குகள் இந்திய மார்கெட்டை கலக்க மீண்டும் அறிமுகமாகியுள்ளது. 1970களில் பலரின் கனவு பைக்குகளாக இந்த பைக் இருந்தது. இன்றும் பழைய மாடல் ஜாவா பைக்குகளை முறையாக பராமரித்து வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

தற்போது 3 மாடல் ஜாவா பைக்குகள் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு மாடல் பைக்குகள் அதாவது ஜாவா மற்றும் ஜாவா 42 பைக் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகளை போலவே அமைக்கப்பட்டுள்ளது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

ராயல் என்பீல்டு பைக்கின் விற்பனை பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. ரெட்ரோ லுக் ரக பைக்குகளில் போட்டிக்கு பெரிய அளவில் ஆளே இல்லாமல் மோனாபோலியாக மார்கெட்டில் களமாடி வருகிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

இந்த நிலையில் தற்போது அதே ரெட்ரோ டிசைன் லுக் உடன் ஜாவாவில் இரண்டு மாடல் பைக்குகள் கிட்டத்தட்ட அதே விலை மதிப்பில் வெளியாகியுள்ளது. இந்த செய்தியில் நாம் ஜாவாவின் இந்த இரண்டு பைக்குகளுக்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கும் உள்ள வித்தியாசங்களை பற்றியும், இதில் எந்த பைக் பெஸ்ட் என்பதை பற்றியும் இங்கே பார்க்கலாம் வாருங்கள்.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

டிசைன் மற்றும் ஸ்டைல்

ஜாவா பைக்குகளின் டிசைனை பொறுத்தவரை சிம்பிள் பாடி ஒர்க் உடன் கூடிய குறைந்த டிசைன்கள் உள்ளன. இதில் டியர் டிராப் வடிவிலான பியூயல் டேங்க், வட்ட வடிவிலான ஹெட்லைட் மற்றும் அதை சுற்றிலும் க்ரோம் பட்டைகள், பியூயல் டேங்கின் இரண்டு பக்கங்களிலும் ஜாவா பேட்ஜ் மற்றும் டேங்க் முழுவதும் பாலிஷ் க்ரோம்களை பெற்றுள்ளது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

அதிகமாக பாலீஷ் க்ரோம்களை கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. பைக்கின் பின்பக்கம் அதே ரெட்ரோ தீம்களுக்காக சிறிய டெயில் லைட்டை பெற்றுள்ளது. மேலும் இதில் டுவின் எக்ஸாட் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது சிறப்பான லுக்கை தருகிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

ராயல் என்பீல்டு கிளாசிக்கை பொறுத்தவரை அதே கிளாசிக் ரெட்ரோ டிசைன்தான். இருந்தாலும் இன்றைய சுழலுக்கு ஏற்றார் போல் சிறிய அளவிற்கு மாடர்னாக மாற்றப்பட்டுள்ளது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

கிளாசிக் 350 பைக்கிலும் அதிகமாக க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக ஹெட்லைட்டை சுற்றிய க்ரோம் பட்டைகள், டியர் டிராப் வடிவ பியூயல் டேங்க், மல்டி ஸ்போக் வீல், க்ரோம் அசென்ட் ஸ்பிரிங் காயில் ரியர் சஸ்பென்ஸன் ஆகியன ராயல் என்பீல்டில் உள்ளன.

ஒட்டு மொத்த டிசைன் மதிப்பீடு

ஜாவா மோட்டார் சைக்கிள் : 8/10

ராயல் என்பீல்டு கிளாசிக் 350: 7/10

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

இன்ஜின் ஸ்பெசிபிகேஷன்

ஜாவா பைக்குகளில் 293 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

ஜாவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 மாடல்களில் இரண்டு மாடல்களான ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் இதே இன்ஜின் உடன்தான் வருகிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை பொறுத்தவரை 349 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஜாவாவையும், ராயல் என்பீல்டையும் ஒப்பிட்டால் ஜாவாதான் பவர் புல் பைக்காக உள்ளது.

Specifications Jawa Motorcycle Royal Enfield Classic 350
Engine 293cc Liquid-Cooled Single-Cylinder 349cc Air-Cooled Single-Cylinder
Transmission 6-Speed 5-Speed
Power 27bhp 19.8bhp
Torque 28Nm 28Nm
Mileage 32 - 35km/l 30 - 35km/l
Tank Capacity 14-Litres 13.5-Litres
Brakes 280mm Disc (Front); 153mm Drum (Rear) 280mm Disc (Front); 153mm Drum* (Rear)
Tyre Size 90/90 R18 (Front); 120/80 R17 (Rear) 90/90 R19 (Front); 110/80 R18 (Rear)
Seat Height 765mm 800mm
Kerb Weight 170kg 192kg

ஒட்டு மொத்த இன்ஜின் மதிப்பீடு

ஜாவா மோட்டார் சைக்கிள் : 7/10

ராயல் என்பீல்டு கிளாசிக்: 6/10

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

அம்சங்கள்

ஜாவா மற்றும் கிளாசிக் 350 இரண்டு ரக பைக்குகளுமே குறைந்தபட்ச டிசைன் உடன் வருவதால் அதில் அதிகமாக அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் இரண்டு பைக்கிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

பாதுகாப்பை பொறுத்தவரை ஜாவா பைக்குகள் 280 மிமீ டிஸ்க் மற்றும் 153 மிமி டிரம் பிரேக்களுடன் வருகிறது. முகப்பு பக்க பிரேக்குகள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் வருகிறது. ஜாவா 90/90R18 மற்றும் 120/80 R17 என்ற சைஸ்களில் மல்ட்டி ஸ்போக் வீல்களுடன் வருகிறது. மேலும் பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோக்ஸூம், பின்பக்கம் டுயல் ஸ்பிரிங் காயில்களுடனும் வருகிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

மேலும் ஜாவா பைக்கில் சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஸ்பீடாமீட்டர் மற்றும் பெட்ரோல் அளவுகள் அண்டி கிளாக் வைஸ் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிங்கிள் பாட் கிளஸ்டருக்குள் மேல் பகுதியில் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நேரம் தெரிகிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

ஜாவா பைக்குகளின் அறிமுக நாள் அன்று ஜாவா பெராக் பைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. பாக்டரி கஸ்டம் பிட்டிங்காக வந்த இந்த பைக் மார்கெட்டிற்கு சிறிது காலத்திற்கு பிறகு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கை பொறுத்தவரை 280மிமி டிஸ்க் மற்றும் 153 மிமி டிரம் பிரேக்குகளை கொண்டுள்ளது. மேலும் பின்பக்கம் டிஸ்க் பிரேக் உள்ள 240 மிமி டிஸ்க் கொண்ட வேரியன்ட்டும் உள்ளது. 2019ம் ஆண்டிற்கு பின் வெளியாகும் அனைத்து பைக்கிலும் ஏபிஎஸ் இருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு இருப்பதால் மெதுவாக ராயல் என்பீல்டும் ஏபிஎஸ் உடன் களம் இறஙக்க துவங்கியுள்ளது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

கிளாசிக் 350 பைக் 90/90R19 மற்றும் 110/80 R18 மல்டி ஸ்போக் வீல்களை கொண்டது. சஸ்பென்ஸ் சிஸ்டமும் ஜாவா பைக்குகளை போல முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோக்ஸ் மற்றும் டுவின் ஸ்பிரிங் காயில்களை கொண்டுள்ளது.

ஒட்டு மொத்த அம்சங்கள் மதிப்பீடு

ஜாவா மோட்டார் சைக்கிள் : 7/10

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 : 6/10

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

விலை

ஜாவா பைக்குகள் ரூ.1.64 லட்சம் என்ற விலையுடன் அறிமுகமாகிறது. மேலும் என்ட்ரி லெவல் மாடலாக அந்நிறுவனம் ஜாவா 42 என்ற பைக்கை அதே இன்ஜின் உடன் வெளியிடுகிறது. இந்த பைக்கின் விலை சற்று குறைவாக ரூ.1.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் ரூ.1.39 லட்சம் என்ற விலையில் அதிக கலர் வேரியன்ட்களுடன் விற்பனையாகிறது. பின்பக்கம் டிஸ்க் பொருத்தப்பட்ட வேரியன்ட் பைக்கின் விலை ரூ.1.47 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

ஓட்டுமொத்த விலை மதிப்பீடு

ஜாவா மோட்டார் சைக்கிள் : 8/10

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 : 7/10

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

முடிவுகள்

ஜாவா மற்றும் கிளாசிக் 350 இரண்டு பைக்குகளும் ரெட்ரோ டிசைனிற்கு ஏற்ற சிறப்பான பைக்குகள்தான். இதில் ஜாவா பைக் அதே ரெட்ரோ லுக்கை பெற்றுள்ளது. ராயல் என்பீல்டு இன்றைய மார்கெட்டிற்கு ஏற்ப சற்று மாடர்ன் டிசைனை புகுத்தியுள்ளது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

ஜாவா - ராயல் என்பீல்டு எது கெத்து? இந்த பைக்குதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்குமாம்…!

நீங்கள் பழைய கால லுக் கொண்ட ஒரு பைக்கை பெற விரும்பினால் உங்களுக்கு ஜாவாதான் பெஸ்ட். அதே நேரத்தில் பழைய கால பைக்கை புதிய மாடர்ன் டிசைன் உடன் பெற விரும்பினால் உங்களுக்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்தான் பெஸ்ட். உங்களுக்கான தேவையை நீங்களே உணர்ந்து உங்கள் பைக்கை தேர்வு செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Jawa royal enfield which one is better for you. Read in Tamil
Story first published: Tuesday, November 20, 2018, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X