போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

790 ட்யூக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய கேடிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

790 ட்யூக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய கேடிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பமான திகழப்போகும் 790 ட்யூக் பைக் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

ஆஸ்திரியாவை சேர்ந்த முன்னணி ஸ்போர்ட்ஸ் பைக் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று கேடிஎம். கேடிஎம் நிறுவன பைக்குகளுக்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இளவட்டங்கள் பலர் கேடிஎம் பைக்குகளுக்கு அடிமை என்றே சொல்லலாம்.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

ஆனால் கேடிஎம் நிறுவன பைக்குகள் சற்று விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மலிவான விலையில், பெர்ஃபார்மென்ஸ் சார்ந்த பைக் எதிர்பார்க்கும் நபர்களின் எண்ணத்தை ஈடேற்றுவதற்காக, கேடிஎம் 125 ட்யூக் பைக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1.18 லட்ச ரூபாய்தான். இன்றைய தேதியில் இந்தியாவில் விற்பனையாகி கொண்டிருக்கும் மலிவான விலை கொண்ட கேடிஎம் நிறுவன பைக்குகளில் ஒன்றாக 125 ட்யூக் பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

இந்த சூழலில் அதிகமான பவர் மற்றும் பெர்ஃபார்மென்ஸை எதிர்பார்க்கும் வேக வெறியர்களுக்காக, 790 ட்யூக் பைக்கை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் பீம் செய்தி வெளியிட்டுள்ளது.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் 790 ட்யூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக கேடிஎம் நிறுவன டீலர்கள் சிலரும் தெரிவித்திருப்பது இந்த தகவலை உறுதி செய்வது போல் உள்ளது.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கின் டிசைன் மற்றும் ஸ்டைலை, 790 ட்யூக் கடன் வாங்கியுள்ளது என்று சொல்லலாம். அதாவது கிட்டத்தட்ட கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கை போன்ற 790 ட்யூக் பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில், 799 சிசி, எல்சி8சி (LC8c) பேரல்லல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 8 வால்வு, லிவ்யூட் கூல்டு டிஓஹெச்சி (DOHC) இன்ஜினானது, அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 87 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

கேடிஎம் 790 ட்யூக் பைக்கானது, அதிகபட்சமாக மணிக்கு 220 கிலோ மீட்டர்கள் வேகத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேடிஎம் 790 ட்யூக் பைக்கில், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படும்.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் இடம் பெற்றிருக்கும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதிசக்தி வாய்ந்த கேடிஎம் பைக் என்ற பெருமையை இது பெறவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. வெறும் பவர் என்ற விஷயத்துடன் நின்று விடாமல், பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த பைக்கில் இடம்பெறவுள்ளன.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

எரிபொருள் சிக்கனம், ரைடு டைனமிக்ஸ் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இவை முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 790 ட்யூக் பைக்கில், ஸ்ட்ரீட் மோட், டிராக் மோட், ரெயின் மோட் மற்றும் ஸ்போர்ட் மோட் என பல்வேறு ரைடு மோட்களும் இருக்கும்.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

இதுதவிர எம்டிசி எனப்படும் மோட்டார்சைக்கிள் டிராக்ஸன் கன்ட்ரோல் (Motorcycle Traction Control-MTC), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்ட வசதிகளும் கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் இருக்கும்.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள கேடிஎம் நிறுவனத்தின் தொழிற்சாலையில், 790 ட்யூக் பைக்குகள் அசெம்பிள் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை 8 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்... அஞ்சாமல் களமாட வருகிறான் கேடிஎம் 790 ட்யூக்...

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750, கவாஸாகி இஸட்900, டுகாட்டி மான்ஸ்டர் 821 மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் உள்ளிட்ட பைக்குகளுக்கு, கேடிஎம் 790 ட்யூக் கடுமையான போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Kawasaki Z900, Ducati Monster 821 Rival KTM 790 Duke To Launch In India Soon. Read in Tamil
Story first published: Monday, December 17, 2018, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X