குட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ட்யூக் பிராண்டின் வரவேற்பையும், சந்தையையும் வலுப்படுத்தும் விதமாக, ட்யூக் 125 பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளதாக ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அடுத்த மாதமே

கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின்அங்கமாக செயல்பட்டு வரும் ஆஸ்திரிய பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம், இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் ரக பைக் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற பிராண்டாக விளங்குகிறது. குறிப்பாக, கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் பிராண்டிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அதீத வரவேற்பு இருந்து வருகிறது.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தநிலையில், ட்யூக் பிராண்டின் வரவேற்பையும், சந்தையையும் வலுப்படுத்தும் விதமாக, ட்யூக் 125 பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளதாக ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அடுத்த மாதமே இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

மஹாராஷ்டிர மாநிலம், சகன் பகுதியில் செயல்பட்டு வரும் பஜாஜ் ஆலையில் ஏற்கனவே கேடிஎம் ட்யூக் 125 பைக் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பைக்கை இந்தியாவில் களமிறக்கினால், அதிக விலை நிர்ணயிக்க வேண்டி வரும் என்று கருதி, கேடிஎம் இதுவரை தள்ளிப்போட்டு வந்தது.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தநிலையில், தற்போது கேடிஎம் ட்யூக் 125 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த தக்க சாகதமான சூழல் நிலவுவதாக கேடிஎம் கருதுகிறது. இதனையடுத்து, இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக் மாடலானது ட்யூக் 390 பைக் மாடலைப் போன்ற டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மாடலில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த புதிய பைக் மாடலில் 124.7சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 14.7 பிஎச்பி பவரையும், 11.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 125சிசி பைக் மார்க்கெட்டில் சக்திவாய்ந்த பைக் மாடலாக இருக்கும்.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக் மாடலில் 43மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. பாஷ் நிறுவனத்தின் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

குட் நியூஸ்... கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த புதிய மாடல் நிச்சயம் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்தும். எனினும், இந்தியாவில் விலையை குறைத்து நிர்ணயிக்க வேண்டி, சில தொழில்நுட்ப அம்சங்கள் குறைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம்
English summary
Austrian motorcycle manufacturer KTM is planning to introduce a new product in the Indian market. Overdrive reports that KTM is planning to launch the entry-level 125 Duke naked motorcycle in the Indian market. The KTM 125 Duke is expected to be launched in November 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X