புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கே பார்க்கும் படங்கள் புனே அருகே உள்ள தலேகான் பகுதியில் இந்த பைக் சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்

கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. விலை குறைவான கேடிஎம் பைக் என்பதால் பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

இந்த நிலையில், புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உறுதி செய்யும் விதமாக, சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருக்கும் கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

கேடிஎம் நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ள புனே சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கே பார்க்கும் படங்கள் புனே அருகே உள்ள தலேகான் பகுதியில் இந்த பைக் சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கில் சென்றவர் இந்த பைக்கை தனது மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அப்போது, அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சென்ற இந்த புதிய கேடிஎம் பைக் குறித்து இது 125 ட்யூக் பைக்தானே என்று ஸ்பிளென்டரில் செல்பவர் வினவுகிறார். அதற்கு, சோதனை ஓட்ட பைக்கை ஓட்டுபவர், 'ஆமாம்'! என்று பதில் கூறுகிறார்.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

இந்த வீடியோ மூலமாக, புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் மாடலானது பழைய கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் டிசைனில் வருவது தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குழப்பம் நீடித்து வந்தது. அதாவது, அது கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் டிசைனில் வருமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. அது இந்த வீடியோ மூலமாக நீங்கியிருக்கிறது.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் மாடலானது கேடிஎம் நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக இருக்கும். கேடிஎம் 200 ட்யூக் பைக்கைவிட விலை குறைவாக வர இருக்கிறது. ரூ.1.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

இந்த புதிய 125சிசி கேடிஎம் பைக்கில் 124.7சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.7 பிஎச்பி பவரையும், 11.80 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அறிமுகம் செய்யப்படும்போது, இந்தியாவின் சக்திவாய்ந்த 125சிசி மாடல் என்ற பெருமையை பெறும்.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்லன. ஆரஞ்ச் வண்ண அலாய் வீல்கள் 200 ட்யூக் பைக்கின் சாயலை எளிதாக கொடுக்கிறது. மேலும், 200 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் புனே அருகே சோதனை ஓட்டம்!

இந்த பைக்கில் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், விலையை சவாலாக நிர்ணயிப்பதற்காக சில முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் குறைக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுவதால், அதிக ஆவல் எழுந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம்
English summary
KTM 125 Duke Spy Pics Spotted Testing India Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X