கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் இந்தியாவில் அடுத்த ஆண்டு ரிலீஸ்; ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்பு

கேடிஎம் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் இந்தியாவிற்கு வருவது தற்போது உறுதியாகியுள்ளது. அடுத்தாண்டு விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக் குறித்து முழு விபரங்களை கீழே ப

By Balasubramanian

கேடிஎம் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் இந்தியாவிற்கு வருவது தற்போது உறுதியாகியுள்ளது. அடுத்தாண்டு விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக் குறித்து முழு விபரங்களை கீழே பார்க்கலாம்.

ktm-390-adventure-india-launch-details-confirmed

கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் இந்தியாவிற்கு விற்பனைக்கு வருவது தற்போது உறுதியாகியுள்ளது. கேடிஎம் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ktm-390-adventure-india-launch-details-confirmed

ஏற்கனவே கேடிஎம் பைக்குகளின் 390 மாடல்களாக உள்ள 390 டியூக், ஆர்சி 390 உடன் தற்போது 390 அட்வெஞ்சரும் இணைகிறது. இந்த பைக் 2019ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ktm-390-adventure-india-launch-details-confirmed

இந்த 390 அட்வெஞ்சரை பொருத்தவரை கேடிஎம் 1290 அட்வெஞ்சர் பைக்கின் டிசைனை பெற்றுள்ளது. ஆனால் மெக்கானிக்கல் ரீதியாக கேடிஎம்மின் 390 மாடல்களின் அம்சங்களை பெற்றுள்ளது.

ktm-390-adventure-india-launch-details-confirmed

கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கை பொருத்தவரை 373 சிசி லிக்யூட் கூல் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது. 44 பிஎச்பி பவரையும் 35 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த பைக்கின் இன்ஜினுனடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ktm-390-adventure-india-launch-details-confirmed

அது மட்டுமில்லாமல் இந்த பைக்கில் டிஎப்டி இன்ட்ரூமென்ட் டிஸ்பிளே, நீண்ட தூரம் பயணிக்கும் வகையிலான முன்பக்கம் மற்றும் பின் பக்கம் சஸ்பென்ஷன்கள், ஏபிஎஸ் உடன் கூடிய டூயல் டிஸ்க் பிரேக், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு பை ஒயர் டெக்னாலஜி ஆகிய அம்சங்கள் இதில் அமைந்திருக்கிறது.

ktm-390-adventure-india-launch-details-confirmed

இந்த 390 அட்வெஞ்சர் பைக்கில் டுயல் ஸ்போர்ட் டயர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் லுக் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை போலவே உள்ளது. விரைவில் வெளிவரவுள்ள பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கின் னாக்கும் இது போல தான் உள்ளது. எனவே அந்த ரக பைக் ரசிகர்களை இந்த பைக் ஈர்க்கலாம்.

ktm-390-adventure-india-launch-details-confirmed

தற்போது கேடிஎம் இந்தியா நிறுவனம் ஆர்சி மற்றும் டியூக் ஆகிய மாடல் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்கிறது. கேடிஎம் ரசிகர்கள் 390 அட்வெஞ்சர் பைக்கிற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கின்றனர்.

ktm-390-adventure-india-launch-details-confirmed

தற்போது 1300 சிசி ரகத்தில்தான் இந்த அட்வெஞ்சர் பைக் விற்பனையாகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த பைக்கை பட்ஜெட் ரகத்துலும் வாங்கி ரசிகர்கள் கெத்து காட்டலாம். இந்த பைக் 2019 ஏப்-ஜூன் மாத இடைவெளியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ktm-390-adventure-india-launch-details-confirmed

இந்தபைக்கின் விலையை பொருத்தவரை அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் ரூ 2.5 முதல் 3 லட்சம் வரை இதன் எக்ஸ் ஷோரூம் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. இந்தியராக இருந்தால் இந்த கார்கள் மீது ஆசைப்பட கூடாது.. இல்லாவிட்டால் பாகிஸ்தான் போக ரெடியா இருங்க.
  2. அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி
  3. 25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்
  4. வாடகை எலக்ட்ரிக் பைக், சார்ஜிங் ஸ்டேஷன்கள்! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் புது வசதிகள்!
  5. கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்
Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 390 Adventure India Launch Details Confirmed: Specifications, Images & More. Read in Tamil
Story first published: Friday, June 15, 2018, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X