கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் பைக்குகளின் எஞ்சின் செயல்திறனை அதிகப்படுத்துவதற்கு குறைவான விலையில் பெர்ஃபார்மென்ஸ் கிட் மற்றும் இசியூ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது பெங்களூரை சேர்ந்த மந்த்ரா ரேஸிங் நிறுவனம்.

By Saravana Rajan

கேடிஎம் பைக்குகளின் எஞ்சின் செயல்திறனை அதிகப்படுத்துவதற்கு குறைவான விலையில் பெர்ஃபார்மென்ஸ் கிட் மற்றும் இசியூ ப்ளாஷ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது பெங்களூரை சேர்ந்த மந்த்ரா ரேஸிங் நிறுவனம்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் பைக்குகள் இளைஞர்களை கவர்ந்து இழுப்பதற்கு அதன் செயல்திறன் முக்கிய காரணம்.மேலும், கேடிஎம் பைக்குகளுக்கு ஏராளமான ஆக்சஸெரீகள் வெளிச்சந்தையில் கிடைக்கின்றன. பெரும்பாலும் வெளிநாட்டு பெர்ஃபார்மென்ஸ் கிட்டுகள்தான் விற்பனைக்கு உள்ளன. இந்திய நிறுவனங்களின் பெர்ஃபார்மென்ஸ் சாதனங்கள் என்பது மிக குறைவு. அதுவும் சர்வதேச தரத்தில் என்பது அரிதான விஷயமாக இருக்கிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

இந்த நிலையில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் முக்கிய ஆளுமையாக விளங்கும் பெங்களூரை சேர்ந்த பிரதாப் ஜெயராமன் மற்றும் அவரது மகன் சரண் நடத்தி வரும் மந்த்ரா ரேஸிங் நிறுவனம் கேடிஎம் பைக்குகளுக்கான மிக உயரிய இசியூ ஃப்ளாஷ் மற்றும் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் ஆக்சஸெரீகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆக்சஸெரீகள் குறித்த பிரத்யேகமான தகவல்களை முதல்முறையாக டிரைவ்ஸ்பார்க் தளத்திடம் மந்த்ரா ரேஸிங் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

சாதாரண பைக்குகளில் சில உதிரிபாகங்களை மாற்றி, பந்தயத்தில் பங்கு கொள்வதற்கு ஏதுவான செயல்திறனுடன் ட்யூனிங் செய்து பந்தயங்களில் ரேஸ் பைக்குகளாக பயன்படுத்த துவங்கினர். இதனை பின்பற்றி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களே சொந்தமாக செயல்திறன் மிக்க பைக்குகளை தயாரிக்கும் முயற்சியில் பெரும் முதலீடுகளுடன் சில தசாப்தங்களுக்கு முன் களமிறங்கின. ரேஸ் டிராக்குகளில் பைக்குகளின் செயல்திறன் குறித்த விஷயங்களை அணு அணுவாக சேகரித்து, அதனை அடிப்படையாகக் கொண்டு ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளையும், சூப்பர் பைக்குகளையும் உருவாக்கின.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

பைக் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றும் இதே பாணியை பின்பற்றி, பல தசாப்தங்களாக ரேஸ் டிராக்குகளில் கிடைத்த நேரடி அனுபவம் மற்றும் ட்யூனிங் அனுபவத்தை பயன்படுத்தி செயல்திறன் மிக்க வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் மந்த்ரா ரேஸிங் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வெளிச்சந்தையில் கிடைக்கும் பெர்ஃபார்மென்ஸ் கிட்டுகளிலிருந்து மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் உதிரிபாகங்கள் மற்றும் சாதனங்கள் உயரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

மார்க்கெட்டில் ஏராளமான இசியூ சாதனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை அனைத்தும் எரிபொருள் மற்றும் இக்னிஷன் சிஸ்டத்திற்கான சாஃப்ட்வேரில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டவை. இதனை எஞ்சின் ரீ-மேப்பிங் என்று கூறுகின்றனர். இவை சமயத்தில் ஒரிஜினல் சாஃப்ட்வேர்கள் மூலமாக அழிக்கப்பட்டு, செயல்திறன் சாதாரண நிலைக்கு மாறிவிடும் வாய்ப்புள்ளது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

மந்த்ரா ரேஸிங் நிறுவன அதிபர் பிரதாப் ஜெயராம் மகன் சரண் உருவாக்கி இருக்கும் இசியூ ஃப்ளாஷ் சாதனம், முற்றிலும் புதிய சாஃப்ட்வேரை கொண்டது.அதாவது, சொந்தமாகவே இந்த சாதனத்திற்கான சாப்ட்வேர் குறியீடுகளை சரண் எழுதி இருக்கிறார். இதனால், செயல்திறன் எந்தநிலையிலும் குறையாது என்று அடித்து கூறுகிறார். மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற இசியூ சாதனங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக சரண் தெரிவித்துள்ளார்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் பைக்குகளில் கொடுக்கப்படும் பாஷ் நிறுவனத்தின் இசியூ சாதனத்தின் குறியீடுகளை மிக துல்லியமாக ஆராய்ந்து, இந்திய தட்ப வெப்பத்திற்கு தக்கவாறு கேடிஎம் பைக்குகளுக்கான இசியூ ஃப்ளாஷ் சாதனத்ததிற்கான புதிய சாஃப்ட்வேர் கோடிங்கை சரண் உருவாக்கி இருக்கிறார். எரிபொருள் செலுத்தும் அளவு, இக்னிஷன் செயல்பாடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் விதத்தில், இந்த இசியூ ஃப்ளாஷ் சாதனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த இசியூ ஃப்ளாஷ் சாதனத்தின் மூலமாக செயல்திறன் அதிகரிக்கும் அதே வேளையில், மைலேஜ் குறையாது என்பது முக்கிய சிறப்பு.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

ஆரம்ப வேகத்தில் ஏற்படும் அதிர்வுகள், தடங்கல் உணர்வுகள் இல்லாமல் சீரான பவர் டெலிவிரியை எஞ்சின் வழங்கும் விதத்தில், மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் இசியூ ஃப்ளாஷ் சாதனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான, டைனோமீட்டர் வரைபடங்களையும் மந்த்ரா ரேஸிங் பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும், மந்த்ரா ரேஸிங் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இசியூ ஃப்ளாஷ் சாதனம் பொருத்தப்பட்ட எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா மற்றும் சிறப்பு குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்தனர். டெஸ்ட் டிரைவ் அனுபவம், சாதனங்கள் குறித்த செயல்திறன் மற்றும் விலை விபரங்களை இனி வரும் ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் 390 பைக்குகளுக்கான ஸ்டேஜ்-1 இசியூ ப்ளாஷ்:

கேடிஎம் ட்யூக் மற்றும் ஆர்சி 390 பைக்குகளுக்கான ஸ்டேஜ்-1 என்ற இசியூ சாதனம் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், குறைவான வேகம் மற்றும் நடுத்தர வேகத்தில் அதிக டார்க்கை வெளிப்படுத்தி, மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இசியூவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மைலேஜ் குறையாமல் ஸ்டாக் மாடல் வழங்கும் அதே மைலேஜை வழங்கும் விதத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

எஞ்சின் உள்ளிட்டவற்றில் எந்த மாறுதல்களும் செய்யாமல் செயல்திறனை கூட்டும் வகையில் இந்த ஸ்டேஜ்-1 இசியூ வழங்கப்படுகிறது. இந்த இசியூ சாதனம் பொருத்தப்பட்ட கேடிஎம் 390 மாடல் எஞ்சின் அதிகபட்சமாக 53.25 பிஎச்பி பவரையும், 39.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சாதாரண மாடலைவிட 10.35 பிஎச்பி பவரையும், 3.2 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும். 5,000 ஆர்பிஎம் வரை எஞ்சின் சாதாரண இசியூ போலவே செயல்திறனை வழங்கும். அதற்கு மேல் இந்த இசியூ சாதனம் தனது மேஜிக்கை காட்டும். இதற்கு வரி உள்பட ரூ.12,000 விலை நிர்ணயிக்கப்பட்டடு இருக்கிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் வீலிங் செய்வது சற்று திணறலான விஷயம். ஆனால், மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் ஸ்டேஜ் 1 இசியூ சாதனத்தின் மூலமாக முதல் மூன்று கியர்களில் சிறப்பான பவர் டெலிவிரி இருப்பதால், முன் சக்கரம் மிக இலகுவாக இருப்பதால், வீலிங் செய்வதற்கும் எளிதான காரியமாகிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் 390 பைக்குகளுக்கான ஸ்டேஜ்-2 இசியூ ப்ளாஷ்:

கேடிஎம் 390 ட்யூக் மற்றும் ஆர்சி பைக்குகளுக்கு ஸ்டேஜ்-2 என்ற இசியூ சாதனம் வழங்கப்படுகிறது. இதில், விசேஷ ஏர் ஃபில்டர், புகைபோக்கி அமைப்பு மற்றும் விசேஷ இசியூ சாதனம் வழங்கப்படுகிறது. தினசரி பயன்பாடு மற்றும் வார இறுதியில் நெடுந்தூரம் செல்ல விரும்புவோருக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை பெறும் விதத்தில் இந்த ஸ்டேஜ் -2 கிட் வழங்கப்படுகிறது.

அதிக எஞ்சின் சுழல் வேகத்தில் பவர் டெலிவிரி அபரிதமாக இருப்பதை உணர முடிகிறது. இந்த இசியூ சாதனத்தை பொருத்துவதன் மூலமாக கேடிஎம் 390 பைக்குகளின் ஒயரிங்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிளக் அன் பிளே என்று சொல்லப்படுவது போலவே இசியூ ஃப்ளாஷ் சாதனத்தை பொருத்திக் கொள்ள முடியும்.

இசியூ ஃப்ளாஷ் சாதனமானது 5,000 ஆர்பிஎம் வரை சாதாரண கேடிஎம் 390 மாடலைப் போன்றும், அதற்கு மேல் மிக அதீத செயல்திறனை வெளிக்காட்டுகிறது. வெறும் சாஃப்ட்வேர் கோடிங் மூலமாக இந்த உயரிய செயல்திறனை அனுபவிக்கும் வாய்ப்பை மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் இசியூ ஃப்ளாஷ் சாதனம் வழங்குகிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

ஸ்டேஜ்-2

ஸ்டேஜ் -2 முறையில் சிறிய அளவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக்குகளுக்கு சிறந்ததாக இருக்கும். வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் மூன்று விதமான உதிரிபாகங்கள் கொண்டதாக ட்யூனிங் செய்ய முடியும். இசியூ ஃப்ளாஷ் சாதனம் மற்றும் மந்த்ரா டிராப்- இன் ஃபில்டர் ஆகிய இணைத்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும், இசியூ மற்றும் பெர்ஃபார்மென்ஸ் புகைப்போக்கி அமைப்புடையதாகவும், இசியூ சாதனம், டிராப் இன் ஏர் ஃபில்டர் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் புகைப்போக்கி அமைப்பு கொண்டதாகவும் மூன்று விதங்களில் கிடைக்கிறது. 53.7 பிஎச்பி முதல் அதிகபட்சமாக 55.1 பிஎச்பி பவரையும், 38.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதற்கான விலை வரி உள்பட ரூ.12,000 ஆகும். ஸ்டேஜ்-2 மூலமாக நடுத்தர நடுத்தர மற்றும் உயர் ஆர்பிஎம்களில் மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை பெறலாம்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

ஸ்டேஜ்-3 கிட்:

ஸ்டேஜ்-3 ஃபெர்ஃபார்மென்ஸ் கிட் கேடிஎம் 200 பைக்குகளுக்கு 240சிசி போர் அளவுடன் கூடிய எஞ்சினுக்கான இசியூ சாதனத்தை மந்த்ரா ரேஸிங் தயாரித்துள்ளது. இதற்கு ரூ.11,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. போர் அளவு அதிகரிக்கப்பட்டு இருப்பதால், மைலேஜ் சற்று குறையும். செயல்திறன் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் 390 பைக்குகளுக்கான ஹைப்பர்ஸ்ட்ரீட் கிட்:

கேடிஎம் 390 பைக்குகளுக்கானது எஞ்சின் போர் அளவை அதிகரித்தல், புதிய சிலிண்டர் ஹெட், செயல்திறன் மிக்க கேம்ஷாஃப்ட்டுகள், புதிய எரிபொருள் அமைப்பு, டிபிஎம் ஏர்ஃபில்டர், புதிய ஹெட் கேஸ்கெட் உள்ளிட்ட ஆக்சஸெரீகளும், மாறுதல் பணிகளும் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷ கிட்டிற்கு ரூ.60,000 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கான கிட்:

இதேபோன்று, கேடிஎம் 200 ஆர்சி மற்றும் ட்யூக் பைக்குகளுக்கான ஸ்டேஜ்-1 இசியூ சாதனத்திற்கு ரூ.9,500 என்ற விலையிலும், கேடிஎம் 200 ஆர்சி மற்றும் ட்யூக் பைக்குகளுக்கான ஸ்டேஜ்-2 இசியூ மற்றும் ஏர்ஃபில்டர் கொண்ட கிட்டிற்கு ரூ.9,500 விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 200 பைக்குகளுக்கான ஸ்டேஜ் -2 கிட்டில் ஏர் ஃபில்டர் போதுமானது. புகைப்போக்கி குழாய் தேவையில்லை.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

டைட்டானியம் சைலென்சர்:

கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி 390 பைக்குகளுக்கான விசேஷ டைட்டனியம சைலென்சரையும் மந்த்ரா ரேஸிங் அறிமுகம் செய்துள்ளது. இது டார்க் திறனை அதிகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது வெறும் ஒன்றரை கிலோ எடை கொண்டது. இதனால், வண்டி எடை 11.5 கிலோ வரை குறையும். இதற்கு ரூ.60,000 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

விசேஷ ஏர்ஃபில்டர்:

கேடிஎம் 200, 390 பைக்குகள் மற்றும் மஹிந்திரா மோஜோ பைக்கிற்கு விசேஷ ஏர்ஃபில்ட்டரை மந்த்ரா ரேஸிங் அறிமுகம் செய்துள்ளது. இது உயர்தர பருத்தி-பாலியெஸ்டர் கலவையில் நெய்யப்பட்டு இருப்பதுடன், எஸ்எஸ்312 கருப்பு வண்ண வலைக்கு இடையில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

மிக அதிக வெப்பத்தை தாங்கும் EPDM ஆட்டோமொபைல் கிரேடு ரப்பர் கேஸ்கெட்டுடன் இந்த ஏர்ஃபில்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த விசேஷ ஏர்ஃபில்டர் கேடிஎம் பைக்குகளுக்கு ரூ.2,700 விலையிலும், மஹிந்திரா மோஜோ பைக்கிற்கு ரூ.2,900 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

இந்த விசேஷ இசியூ சாதனங்கள் எக்ஸ்சேஞ்ச் அடிப்படையிலான விலை விபரம் மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்சேஞ்ச் செய்யாமல் புத்தம் புதிய இசியூ சாதனங்களும் மந்த்ரா ரேஸிங் நிறுவனம் விற்பனை செய்கிறது.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

கேடிஎம் நிறுவனத்தின் 2017ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட பழைய பைக் மாடல்களுக்கு இந்த இசியூ சாதனம் பொருந்தும். புதிய கேடிஎம் பைக்குகளுக்கான இசியூ சாதனத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மந்த்ரா ரேஸிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இசியூ ப்ளாஷ் மற்றும் இதர ஆக்சஸெரீகள் பொருத்துவதால் ஏற்படும் வாரண்டி பிரச்னை குறித்து மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தை நேரில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம்.

கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

விலை விபரம்

  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் 390 ட்யூக்/ஆர்சி 390 ஸ்டேஜ் I ECU: ரூ.12,000
  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் 390 ட்யூக்/ஆர்சி 390 ஸ்டேஜ் II ECU: ரூ.12,000
  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் 390 ட்யூக்/ஆர்சி 390 ஹைப்பர்ஸ்ட்ரீட் கிட்: ரூ.60,000
  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் 200 ட்யூக்/ஆர்சி 200 ஸ்டேஜ் I ECU: ரூ.9,500
  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் 200 ட்யூக்/ஆர்சி 200 ஸ்டேஜ் II ECU: ரூ.9,500
  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் ட்யூக் 200/ஆர்சி200 ஸ்டேஜ் III ECU: ரூ.11,000
  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் 200 மற்றும் 390 மாடல்களுக்கான டிபிஎம் டிராப் இன் ஏர் ஃபில்டர்: ரூ.2,700
  • மந்த்ரா ரேஸிங் மஹிந்திரா மோஜோவுக்கான டிபிஎம் ட்ராப் இன் ஏர்ஃபில்டர்: ரூ.2,900
  • மந்த்ரா ரேஸிங் கேடிஎம் ட்யூக் 390/ஆர்சி 390 டைட்டானியம் சைலென்சர்: ரூ.60,000
  • கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

    மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் உரிமையாளர் பிரதாப் ஜெயராமன் இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் முக்கிய ஆளுமையாக விளங்குகிறார். பிரதாப் ஜெயராமன் தந்தை ஏடி.ஜெயராமன்தான் கர்நாடக மோட்டார்ஸ்போர்ட்ஸ் க்ளப்பை உருவாக்கியவர்களில் ஒருவர்.

    கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

    ஜாகுவார், போர்ஷே கார்களுக்கு இணையான செயல்திறன் மிக்க ஜெயராம் ஜிடி என்ற ஸ்போர்ட்ஸ் காரை அந்த காலத்திலேயே உருவாக்கி பிரபலமடைந்தார். 1960களில் ஸ்டான்டர்டு சூப்பர் 10 காரில் சூப்பர்சார்ஜரை பொருத்தி, மணிக்கு 185 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த காரை உருவாக்கி அசரடித்தவர் ஏடி.ஜெயராமன்.

    கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

    அவரது மகனான பிரதாப் ஜெயராமனும் கார் ட்யூனிங் செய்வதில் சிறந்து விளங்குகிறார். ரேவா கார் நிறுவனத்தில் பணிபுரிந்த பின்னர் சொந்தமாக மந்த்ரா ரேஸிங் என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார் பிரதாப் ஜெயராமன்.

    கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

    மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் மூலமாக, சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் எஞ்சின் பொருத்தப்பட்ட ரேவாபுசா என்ற அதிவேக காரை தயாரித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த நிலையில், பிரதாப் ஜெயராமனின் மகன் சரண் தற்போது இந்த துறையில் இறங்கி இருக்கிறார். கேடிஎம் பைக் மாடல்களுக்கு கூடுதல் செயல்திறனை வழங்கும் விசேஷ இசியூ சாதனத்தை சரண் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

    கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்!!

    முகவரி:

    மந்த்ரா ரேஸிங் நிறுவனம்,

    நம்பர் 30, பிராமினேட் ரோடு,

    பிரேஸர் டவுன்,

    பெங்களூர்-560005

    தொலைபேசி எண்: 080 - 25368858

    மொபைல்போன்: 9886616036

Most Read Articles
English summary
KTM Duke 390 and RC 390 performance parts manufactured in India by Mantra Racing give their imported counterparts and competitors a run for their money. With their ECU (Electronic Control Unit), air filter, big-bore kits, cylinder head, racing camshafts, modified fueling system and more, Indian performance is out there.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X