பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்!

அதிசக்திவாய்ந்த கேடிஎம் ட்யூக் 790 பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக் இந்தியாவில் வரும் மார்ச் மாதத்திற்குள

அதிசக்திவாய்ந்த கேடிஎம் 790 ட்யூக் பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக் மாடல்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவை. சக்திவாய்ந்த எஞ்சின், மிரட்டலான டிசைன் மற்றும் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால், இந்திய இளைஞர்கள் அமோக ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

தற்போது கேடிஎம் 125 ட்யூக், 200 ட்யூக், 250 ட்யூக் மற்றும் 390 ட்யூக் பைக் மாடல்கள் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், ட்யூக் வரிசையில் சக்திவாய்ந்த மாடலையும் கேடிஎம் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. ஆம். ட்யூக் 790 பைக் இந்தியாவில் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மோட்டார்பீம் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

இந்த பைக்கில் 799சிசி LC8c பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்தது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் ஃப்ரேம் க்ரோமியம்- மாலிபிடினம் உலோக கலவையில் ஆனது.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

முன்புறத்தில் WP 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் WP மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 17 அங்குல சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கின் முன்சக்கரத்தில் இரண்டு 300 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்ப்டடுள்ளன. பாஷ் நிறுவனத்தின் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இடம்பெற்றுள்ளது.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரைடு பை ஒயர் சிஸ்டம், லான்ச் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள். ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் என நான்குவிதமான டிரைவிங் மோடுகளும் உள்ளன.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

கேடிஎம் 790 ட்யூக் பைக் 169 கிலோ எடை கொண்டது. 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. புனே அருகே சகன் பகுதியில் அமைந்துள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும்.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ரூ.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. கவாஸாகி இசட்900, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் மற்றும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

பவர்ஃபுல் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் இந்திய வருகை விபரம்!

கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பைக் உலக அளவில் பைக் ரசிகர்களை ஈர்த்தது. இந்தியாவிலும் வரும் என அப்போதே செய்திகள் றெக்கை கட்டின.

Most Read Articles
மேலும்... #கேடிஎம்
English summary
KTM is said to be preparing the launch of their 790 Duke in the Indian market soon. According to MotorBeam, the KTM Duke 790 is expected to be launched in the market by the end of this fiscal year (March 2019).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X