கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ட்யூக் 200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் ரூ.1.60 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடலில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இ

கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆரம்ப ரக ஸ்போரட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் ட்யூக் 200 பைக் அதீத வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 125சிசி ரகத்திற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பு தொழில்நுட்பம் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இதையடுத்து, அனைத்து பைக் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களிடம் உள்ள 125சிசி திறனுக்கும் மேலான இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், கேடிஎம் ட்யூக் 200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடலில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாஷ் நிறுவனத்திடமிருந்து கேடிஎம் நிறுவனம் சப்ளை பெறுகிறது.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடலில் இருக்கும் 199.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரையும், 19.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடலானது ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் அமைப்பிலான ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் அமைப்பும் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 300 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

முதலில் ஆரஞ்ச் வண்ணக் கலவையிலும், பின்னர் வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணத் தேர்வுகளும் வழங்கப்பட்டன. எனினும், ஆரஞ்ச் வண்ணத் தேர்வு தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதிசெயல்திறன் மிக்க இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்கப்படுவது, இந்த பைக்கின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம்
English summary
KTM Duke 200 ABS launched in India. The ABS version of the motorcycle is now priced at Rs 1.6 lakh,ex-showroom (Delhi). The KTM Duke 200 is one of the best-selling motorcycles for the Austrian manufacturer in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X