லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

பாரம்பரியம் மிக்க லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் பிராண்டு மீண்டும் இந்தியாவில் கால் பதிக்க இருக்கிறது. லோஹியா ஆட்டோ மற்றும் டெல்லியை சேர்ந்த பேர்டு குழுமத்துடன் கூட்டணி அமைத்து லாம்ப்ரெட்டா நிறுவனம் இந்தியாவி

பாரம்பரியம் மிக்க லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் பிராண்டு மீண்டும் இந்தியாவில் கால் பதிக்க இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லோஹியா ஆட்டோ மற்றும் டெல்லியை சேர்ந்த பேர்டு குழுமத்துடன் கூட்டணி அமைத்து லாம்ப்ரெட்டா நிறுவனம் இந்தியாவில் மீண்டும் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்துள்ளது.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள் முழுவதுமான மின்சார மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர் மாடலுக்கு இது நேரடி போட்டியாக அமையும்.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஆட்டோகார் இந்தியா வெளியிட்டு இருக்கும் தகவல்களின்படி, புதிய லாம்ப்ரெட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது முழுவதும் ஸ்டீல் பாடியுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கும்.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

சந்தையில் இருக்கும் பிற ஸ்கூட்டர்களைவிட தோற்றத்தில் பெரியதாகவும், அதிக இடவசதிகளை பெற்ற மாடலாகவும் இருக்கும். அதேபோன்று, பாரம்பரிய வடிவமைப்பு தாத்பரியங்கள் தக்க வைக்கப்பட்டு இருக்கும்.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லாம்ப்ரெட்டா நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்னசென்ட்டி, மும்பையில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையிலிருந்து இந்திய மார்க்கெட்டுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது இன்னசென்ட்டி நிறுவனம்.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஏற்கனவே, லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்களின் தயாரிப்பு உரிமத்தை அரசு நிறுவனமான ஸ்கூட்டர் இந்தியா லிமிடேட் பெற்று உற்பத்தி செய்து வந்தது. லாம்ப்ரெட்டா அல்லது விஜய் சூப்பர் என்ற பெயரில் கிடைத்த இந்த ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றன.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

அதேபோன்று, லாம்ப்ரெட்டா நிறுவனத்தின் மூன்றுசக்கர வாகனம் விக்ரம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது. 1997ல் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் உற்பத்தியை நிறுத்தியது. மூன்று சக்கர வாகன தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியது.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து தற்போது லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள் முழுவதும் மின்சார மாடலாக இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுவிடும்.

லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லாம்ப்ரெட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
English summary
Iconic Lambretta scooters will re-launch in India with a fully-electric model. In fact, the first Lambretta for India will debut as a prototype at Auto Expo 2020 (February); as a rival to the upcoming Piaggio Vespa Elettrica. At this point, we are not sure if the upcoming India-spec Lambretta scooters will be available only in an electric format, but also a petrol avatar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X