உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

உயிரை காக்க வந்த வாலிபரை, இளம்பெண் ஒருவர் கிண்டல் செய்து அவமானப்படுத்தியுள்ளார்.

உயிரை காக்க வந்த வாலிபரை, இளம்பெண் ஒருவர் கிண்டல் செய்து அவமானப்படுத்தியுள்ளார். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்தால், மற்றவர்களுக்கு உதவும் எண்ணமே இனி உங்களுக்கு வராமல் போகலாம்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

சாலையில் ஏதேனும் விபத்துக்களை காண நேரிட்டால், அனைவரது மனமும் ஒரு கணம் துடிதுடித்து போகும். எனவே சாலை விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் உயர்வான பழக்கம் நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

அதாவது ஏதேனும் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், ஸ்டாண்டை எடுக்காமல் பயணம் செய்தால், உடனே ஸ்டாண்டை எடுக்கும்படி, மற்ற வாகன ஓட்டிகள் அவருக்கு எச்சரிக்கை செய்வார்கள். இதன்மூலம் சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டி, விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் நீங்குகிறது.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

இதேபோல் பெண்களின் சேலை அல்லது துப்பட்டா போன்றவை, இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி கொள்ளும் அபாயத்தை காண நேரிட்டாலும், உடனடியாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

பைக் சக்கரத்தில் சேலை அல்லது துப்பட்டா சிக்கி இளம்பெண் பலி என்பது போன்ற செய்திகளை அடிக்கடி காண நேரிடுகிறது. நம் கண் முன்னே அப்படி ஒரு விபரீதம் அரங்கேறி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இதற்கு மிக முக்கியமான காரணம்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

அத்துடன் வாகனத்தின் சக்கரத்தில் காற்று குறைவாக இருந்தாலோ அல்லது ஹெட்லைட் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, குறைந்தபட்சம் சைகை மூலமாவது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வழக்கம் பலரிடமும் காணப்படுகிறது.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

முன்பின் அறிமுகமே இல்லாத நபர்கள் செய்யும் இத்தகைய சிறு சிறு உதவிகள் மூலமாக பெரிய அளவிலான சாலை விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. யார் என்றே தெரியாத நபர்கள் மூலம் கிடைக்கும் இத்தகைய உதவிகளால், சம்பந்தப்பட்ட நபர்களின் உள்ளம் குளிர்ந்து போகும்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

தக்க சமயத்தில் உதவி செய்த அந்த நபர் கடவுளாக தெரிவார். ஆனால் இங்கு நடந்த கதையே வேறு. சாலை விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயத்தில் இருந்த 2 இளம்பெண்களை காப்பாற்ற முயன்ற நபர் கிண்டல் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஒன்றில் இரண்டு இளம்பெண்கள் வந்து கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு அது பழைய தலைமுறை டியோ போல் தெரிகிறது. இதில், ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளம்பெண் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண் ஹெல்மெட் அணியவில்லை.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

இந்த சூழலில், ஸ்கூட்டரின் ஸ்டாண்ட் எடுக்கப்படாமல் இருந்தது. இதனை கவனித்த மற்றொரு வாகன ஓட்டி ஒருவர், ஸ்டாண்ட்... ஸ்டாண்ட்... என எச்சரிக்கை செய்தார். ஆனால் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற இளம்பெண், ஸ்டாண்ட்டை எடுப்பதற்கு பதிலாக வேண்டுமென்றே எழுந்து நின்றார்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

எழுந்து நில் என்பதற்கும் ஆங்கிலத்தில் ஸ்டாண்ட் (Stand) என்ற வார்த்தைதான் உபயோகிக்கப்படுகிறது. எனவே எச்சரிக்கை செய்த நபர் கூறியபடி ஸ்டாண்ட்டை எடுக்காமல், வேண்டுமென்றே எழுந்து நின்று கொண்டு அந்த இளம்பெண் ஸ்கூட்டரை ஓட்டி சென்றார்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

பிரமதி முத்தாலக்ஸே என்பவர் தற்போது அந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்ட உடனேயே, சமூக வலை தளங்களில், அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கி விட்டது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், உண்மையில் இது போன்று நடந்து கொள்வது என்பது மிகவும் அபாயகரமானது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது தொடர்பான உறுதியான விபரம் எதுவும் வெளியாகவில்லை.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

ஆனால் இது பாகிஸ்தானாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலை தள பயன்பாட்டாளர்கள் பலரும் இந்த சம்பவம் நடைபெற்ற இடம் பாகிஸ்தான் என்றுதான் கூறி வருகின்றனர்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

அதே நேரத்தில் இந்த வீடியோ முன்கூட்டியே திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. ஏனெனில் தற்போது அதிக பேரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான வீடியோக்களை பலர் எடுத்து கொண்டுள்ளனர்.

உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த பெண்... இந்த வீடியோ பார்த்தால் இனி யாருக்கும் உதவ மாட்டீர்கள்

அத்துடன் அந்த வீடியோக்களை, சமூக வலை தளங்களிலும் பரவ விடுகின்றனர். எனவே அதுபோன்று பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Man Tries To Help Girl Who Forget To Take Up Scooter's Side Stand: Video Goes Viral. Read in Tamil
Story first published: Thursday, December 27, 2018, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X